ராகுலின் இப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்பு| Dinamalar

ராகுலின் இப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்பு

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
rahul gandhi,rahul,iftar party,ராகுல்,இப்தார் விருந்து

புதுடில்லி : காங்கிரஸ் ஏற்பாடு செய்த, 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த, 2015ல், டில்லியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின், இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் தேசிய அளவில், காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மீண்டும், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் விருந்து என்பதால், இது கூடுதல் முக்கியத்துவம், பெற்றிருந்தது.

இவ்விருந்தில் எதிர்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றதற்காக, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கும் அழைக்கு விடுக்கப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு இடையே, இவ்விருந்தில் பிரணாப் கலந்து கொண்டார். ராகுலுக்கு அருகில் அமர்ந்து அவர் இப்தார் விருந்தில் பங்கேற்றார். மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி மற்றும் தினேஷ் திரிவேதி, கனிமொழி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201817:55:31 IST Report Abuse
Endrum Indian அடுத்த தலைமுறை முஸ்லீம் இளைஞர்கள் இந்த ரம்ஜான் நோன்பை இப்படி கொண்டாடுவதாக முடிவெடுத்துள்ளார்கள் என்று வந்தால் எவ்வ்ளவு சந்தோஷமாக இருக்கும். 1 ) மசூதிக்கு அமைதியாக சென்று வழி படுதல் 2 ) இரவில் ஒரு வேளை மட்டும் நல்ல காய்கறி உணவு மட்டும் 3 ) யாருடனும் சண்டை சச்சரவு செய்யாமல் இருத்தல் அப்பொழுது அது விரதம், நோன்பு என்று கொள்ளப்படும். இப்போது அது 12 மணி நேர லேட் உணவு தடபுடலாக என்றே கொள்ளப்படும் விரதமாக அல்ல. இது ரம்ஜான் பல்வகை உணவு தின்னும் திருவிழா.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201817:50:29 IST Report Abuse
Endrum Indian இந்தியாவில் மதச்சார்பின்மை என்றால் - இப்தார் நோன்பு (அதாவது இரவு விருந்து திருவிழா) கஞ்சி குடித்தால் , கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்டால்???அதாவது முஸ்லிம்களுக்கு, கிருத்துவர்களுக்கு உபசாரணை, இந்துக்களுக்கு தீட்டு /திட்டு என்ற வழியில் சென்றால் அது மத சார்பின்மை அதாவது இனிமேல் முஸ்லீம் கிறித்துவ சார்பு தான் மத சார்பற்ற என்று விளக்கமாக கூற வேண்டும்.?????
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூன்-201816:12:04 IST Report Abuse
Nallavan Nallavan இத்தாலிய அடிமை பிரணாப் காட்டும் மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை இதுதான் .....
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
14-ஜூன்-201814:02:12 IST Report Abuse
Balaji விருந்தில் எத்துனை இஸ்லாமியர் கலந்து கொண்டனர்? பகல் வேஷம்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201812:42:32 IST Report Abuse
kulandhaiKannan ராகுலின் இன்று ஒரு உளறல் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201811:39:48 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் குடிசை பகுதியில் கஞ்சிக்கு வழியில்லாத ஏழைகளுக்கு இந்த விருந்து கொடுத்தால் பரவாயில்லை , பணக்காரர்கள் கூடி கும்மியடிப்பது ஒரு நிகழ்ச்சியா ? அதுவும் இஸ்லாம் மதத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து விருந்து சாப்பிட்டு அரசியல் பேசுவதற்கு எதற்கு மத பண்டிகையின் பெயர் வைக்கிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201811:37:51 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அடடே கனிமொழி கலந்துகொண்டு கஞ்சி குடித்தாராமே , சரி சரி .... அடுத்த நாத்திகர்கள் மாநாட்டில் இப்தார் விருந்தில் ஆனால் கடவுளுக்கு சக்தி இல்லை , அங்கே எங்களை காக்க போலீஸ் காவல் இருந்தது என்று பேசுவாரா ? இல்லை நாத்திக நாடகமெல்லாம் இளிச்சவாய் இந்துக்களை கேவலப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வாரா ?
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
14-ஜூன்-201809:29:08 IST Report Abuse
RR Iyengar அந்நிய நாட்டு மோகம் கொஞ்சம் கூட குறையாம பாத்துக்கங்கடா ... 70 வருஷமாச்சு இன்னமும் இதே வேலையா அலையிறீங்க
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-ஜூன்-201808:23:39 IST Report Abuse
Amirthalingam Sinniah இஃப்தார் பண்டிகையை 365 நாட்களும் கொண்டாடினால் ஏழைமக்கள் நிச்சயமாக மனம் குளிர்வார்கள். ஏழைக்கு இரங்குபவன் இறைவனுக்கு கடன்கொடுகிறான்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:41:03 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு சிறுபான்மையினர் வாக்குகளை வாங்க என்னென்ன வேஷம் போடவேண்டி இருக்குது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை