பா.ஜ.,வுக்கு எதிராக மெகா கூட்டணி; காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்வம் Dinamalar
பதிவு செய்த நாள் :
பா.ஜ.,வுக்கு எதிராக மெகா கூட்டணி
காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆர்வம்

மும்பை : ''பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக, மெகா கூட்டணி அமைப்பது, மக்களின் விருப்பம்,'' என, காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்,  பிரதமர் நரேந்திர மோடி, மெகா கூட்டணி, நரேந்திர மோடி, பிரதமர் மோடி, மோடி, ஆர்எஸ்எஸ்,காங்கிரஸ்,பாஜக,ராகுல்,ராகுல் காந்தி, 
Congress leader Rahul, Prime Minister Narendra Modi, Narendra Modi, Prime Minister Modi, Modi, RSS,B.J.P, BJP, Bharatiya Janata Party, Congress, Rahul, Rahul Gandhi,


மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், நிருபர்களிடம் நேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதாவது: பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மெகா கூட்டணி அமைய வேண்டும் என, பிற அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாது மக்களும் விரும்புகின்றனர்.

அரசியல் சாசனம் மற்றும் அரசு அமைப்புகள் மீது, பிரதமர் மோடியும், பா.ஜ.,வினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என, மக்கள் நினைக்கின்றனர். அரசுக்கு எதிராக குரல் எழுப்புவோருடன் சேர்ந்து பணிபுரிய, காங்., தயாராக உள்ளது; அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவற்றை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வந்தால், மக்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால், இதில் பிரதமர் மோடிக்கு அக்கறை கிடையாது.

செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், மும்பையில், ஏராளமான சிறு தொழில்களும், வர்த்தகர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தொழில்கள் மீது, கடுமையான வரியை, மத்திய அரசு திணித்துள்ளது.

Advertisement

இதனால், ஒட்டுமொத்த தொழில் துறையும் கஷ்டத்தில் உள்ளது.

ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, 130 டாலராக இருந்தது. தற்போது, ஒரு பீப்பாய், 70க்கு கிடைக்கிறது. இதன் பலனை, மக்களுக்கு மத்திய அரசு அளிக்கவில்லை. இதனால் மிச்சமாகும் பணம், சில பணக்காரர்களின் பாக்கெட்டுகளை சென்றடைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Larson - Nagercoil,இந்தியா
14-ஜூன்-201821:25:37 IST Report Abuse

Larsonபிஜேபியை தவிர்த்து எவருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் என்கிற மனநிலைதான் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது.

Rate this:
14-ஜூன்-201819:12:36 IST Report Abuse

DevaSingaporeso you think an current government not good right what you did last 30 to 45 years for India even you dont know how to talk in public

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
14-ஜூன்-201814:35:49 IST Report Abuse

Snake Babuஉண்மையில் அனைத்து கட்சியும் ஒழிய வேண்டும், அனைத்து அரசியல் வியாதிகள் ஒழிந்தால் நாடு சுபிட்சம் அடையும். அனைத்தும் அரசியல் என்றால் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஒரே நோக்கோடு வருகின்றன. இந்த நிலை மாறவேண்டும் ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சி சரி இல்லை என்று அதன் மீது இருக்கும் வெறுப்பை எதிர்க்கட்சிகள் மீது ஆதரவாக திருப்பி மறுபடியும் மறுபடியும் மாட்டிக்கொண்டு முழிப்பது மக்கள் தான். ஆனால் வருத்தம் என்னவென்றால் இதற்கு வெகு நாள் பிடிக்கும். நிற்க தற்போது ராகுல் கூறி இருக்கும் மேஹா கூட்டணி என்பதை கொஞ்சம் மாற்றி கூட்டணி அமைப்பவர்கள் தங்குளுடைய குறைந்தபட்ச வாக்குறுதிகளை இப்போது அழகாக வடிவமைத்து மக்களிடம் சென்றால் சிறப்பாக இருக்கும். இருப்பவர்கள் குற்றம் சொல்லவேண்டும் என்றால் மணிக்கணக்காக பேசலாம். அது தேவையிலாத ஒன்று. உண்மையில் தேவையானது அடுத்த என்ன அதில் இவர்களின் நிலைப்பாட்டில் ஒரு குறைந்தபட்ச திட்டங்களோடு வந்தால் நன்றாக இருக்கும். என்ன எல்லா கல்லுளிமங்கன்கள் தங்களுக்கு எவ்வளவு எம் பி கிடைப்பார்கள் என்றுபார்த்துவிட்டு அடுத்து காலை பிடிக்கலாமா அல்லது கழுத்தை பிடிக்கலாம என்று எண்ணுவார்கள். நாட்டின் நலனைக்கருத்தில் கொண்டு, இவர்கள் இப்போதே கூட்டணியை முடிவு செய்து பிரதம வேட்பாளரை தவிர்த்து குறைந்தபட்ச திட்டங்களை மொத்தமாக ஒரே வாக்குறுதியாக அளிக்கும் பட்சத்தில் இவர்களை பரிசீலிப்பதில் தவறில்லை. மற்றபடி அடுத்து கூட்டணி ஆட்சிதான் அது பிஜேபி தலைமையிலான அல்லது எதிர்க்கட்சிகள் தலைமையிலா என்பதே தான். மெஜாரிட்டி கொடுத்து கெடுத்துக்கொண்ட அனுபவம் மக்களிடம் இருக்கத்தான் செய்யும் நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
Shriram - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:56:00 IST Report Abuse

Shriramஹும்..நீ இப்படியே பேசு .அப்பத்தான் மெகா கூட்டாணிக்கு் மெகா ஆப்பு வெப்பாங்கோ..

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
14-ஜூன்-201812:43:11 IST Report Abuse

vbs manianஇது மக்கள் விருப்பமா இல்லை இவர் விருப்பமா.

Rate this:
14-ஜூன்-201811:54:32 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்////பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக, மெகா கூட்டணி அமைப்பது, மக்களின் விருப்பம்//// அப்ப மக்களே அதை பார்த்துப்பாங்க , நீ கிளம்பு.

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
14-ஜூன்-201811:09:15 IST Report Abuse

கைப்புள்ளகூட்டணி தர்மம்ங்கிற பேர்ல மறுபடியும் மெகா ஊழலுக்கு அடி போடுறியா?

Rate this:
Anand - chennai,இந்தியா
14-ஜூன்-201811:05:08 IST Report Abuse

Anandநவாஸ் ஷெரிப்பையும் சேர்த்து மெகா என்ன ஜிகா கூட்டணி அமையுங்கள்.

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
14-ஜூன்-201810:52:50 IST Report Abuse

Balaji ராகுல் ஒரு மத்திய அமைச்சராக கூட பதவி வகிக்க வில்லை. அவருக்கு பிரதம மந்திரி ஆசை? சுப்பிரமணியம் சாமீ விடமாட்டார்?

Rate this:
S K NEELAKANTAN - chennai 24,இந்தியா
14-ஜூன்-201810:08:13 IST Report Abuse

S K NEELAKANTANஊழலில் சரித்திரம் படைத்த காங்கிரஸ், மமதா,மாயாவதி, சரத்பவார், சந்திரபாபு, தீ மு க ஒன்று சேர்ந்து மோடியை எதிர்ப்பது மக்கள் நலனுக்கு அல்ல. அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றி கொள்ளவே. மக்கள் விழிப்புடன் இருந்து இந்த தீய, ஊழல் பேர்வழிகைள் தோற்கடிக்க வேண்டும்

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement