கர்நாடக முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கர்நாடக முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

புதுடில்லி : பூங்காவில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, 'டுவிட்டரில்' பகிர்ந்துள்ள, பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் 40 வயதை கடந்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக முதல்வர்,பிரதமர்,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,அழைப்பு


இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, தன்னை போல் உடற்பயிற்சி செய்ய முடியுமா என, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்பதாக கூறிய மோடி, விரைவில் அதற்கு பதில் அளிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், பூங்கா ஒன்றில், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை, பிரதமர் மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உடற்பயிற்சிக்கான உடை அணிந்து, பூங்காவில் நடை பயிற்சி செய்யும் பிரதமர் மோடி, மூச்சு பயிற்சியும் மேற்கொள்கிறார்.

புல்வெளியில் நடக்கும் அவர், அதில் பின்னோக்கியும் நடக்கிறார். பின், ஒரு கல்லில் அமர்ந்து தியானம் செய்கிறார். முதுகை வளைக்கும் பயிற்சியும் மேற்கொள்கிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள, பிரதமர் மோடி, உடற்பயிற்சி செய்வதில், மதச் சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த, கர்நாடக முதல்வர் குமாரசாமி, இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை, மனிகா பட்ரா, 40 வயதை கடந்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஆகியோருக்கு, அழைப்பு விடுத்துள்ளார்.

மோடியின் அழைப்புக்கு, கர்நாடக முதல்வர், குமாரசாமி, டுவிட்டரில் பதிலளித்துள்ளதாவது:

Advertisement

பிரதமர் மோடி அவர்களே, என் உடல் நலனில் அக்கறை காட்டிய தங்களின் செயல், பெருமையாக உள்ளது; மிக்க நன்றி. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது அனைவருக்கும் நல்லது. யோகா செய்வது, 'டிரட் மில்'லில் நடப்பது போன்றவை, என் தினசரி உடற்பயிற்சி பட்டியலில் உள்ளது.

எனினும், என் உடல் நலனை விட, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலனில் அதிக அக்கறை வைத்து உள்ளேன். அது குறித்தே கவலைப்படுகிறேன். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவ வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (59+ 114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Larson - Nagercoil,இந்தியா
14-ஜூன்-201818:32:34 IST Report Abuse

Larsonநீங்க வெளியிட்டு இருக்கிற இந்த உடற்பயிற்சியை பார்க்கிறதுனால, நாட்டுல சோறு இல்லாதவர்களுக்கு சோறு கிடைக்குமா. இந்த மாதிரி வெற்று விளம்பரங்களை விட்டுவிட்டு, பணம் படைத்தவர்களுக்கு நல்ல நண்பனாக இல்லாமல், ஒரு பிரதமராக ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றும் வழிய பாருங்க. சும்மா சவால், சவுடால் எல்லாம் ஊடாம இருக்கிற ஒரு வருடமும் வெளிநாட்டுக்கு போனோமா வந்தோமா என்று இருந்தாலே நாடு முன்னேறிடும். நீங்க போடுகிற திட்டங்கள்தான் மக்களுக்கு எதிராகி தலைகீழாகி விடுகின்றன.

Rate this:
R Gopinath - Madurai,இந்தியா
14-ஜூன்-201816:53:31 IST Report Abuse

R Gopinathஅவர் உடற்பயிற்சி செய்யும் நேரம், அந்த atmosphere பாருங்க எவ்வளவு அமைதியாக, மிகவும் சுதந்திரமான, அவருக்கே உண்டான நேரமாக இருக்கும், ஆனால் இதே நேரம் எங்கோ ஒரு குழந்தை ஒரு டம்பளர் பால் கூட இல்லாமல், உணவு இல்லாமல் அதற்க்கே உண்டான துன்பமான பொழுதாக விடிந்து அமைதி இழந்து அழுது கொண்டு இருக்கும் நம்ம நாட்டிற்கு இது போல விடியோ தேவை இல்லை. நல்ல வளர்ச்சியை ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் கொடுக்க வழி தேடுங்கள். பெருமைக்கு அடிபணிவதே மனிதனின் இயல்பாக உள்ளது இந்த செயல்.

Rate this:
Suresh Yesubalan - coimbatore,இந்தியா
14-ஜூன்-201816:34:21 IST Report Abuse

Suresh Yesubalanசவால் எங்களுக்கு வாழ்க்கை ,உங்களுக்கு பொழுதுபோக்கு

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
14-ஜூன்-201818:28:18 IST Report Abuse

வல்வில்  ஓரிவயித்தெரிச்சலுக்கான காரணம் வேற..ஹா ஹா......

Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
14-ஜூன்-201816:17:19 IST Report Abuse

மனிதன்கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும்

Rate this:
14-ஜூன்-201815:58:59 IST Report Abuse

உகதிமோடியின் உடற்பயிற்சியைப் பார்த்தால் சிரிப்பு வந்தது.

Rate this:
Appavi Tamilan - Chennai,இந்தியா
14-ஜூன்-201814:19:27 IST Report Abuse

Appavi Tamilanஇந்த சர்க்கஸ் குறித்து வலைத்தளங்களில் வெளியாகும் மீம்கள் மிகவும் அற்புதம். விழுந்து விழுந்து, நினைத்து நினைத்து சிரிக்கும் அளவுக்கு அந்த மீம்கள் உள்ளன. குறிப்ப்பாக, இந்த சர்க்கஸ் காட்சிகளை வடிவேலுவின் நகைச்சுவையோடு இணைத்து வெளியாகும் மீம்கள் அருமை.நாட்டை அடித்து துவைத்து நாசம் செய்து நோஞ்சானாக்கிவிட்டு, தற்போது இங்கே இந்த சர்க்கஸ் செய்து மக்களை திசை திருப்ப பார்க்கிறார் வெளிநாடு சுற்றும் தலைவர். கர்நாடகா தேர்தலில் அடைந்த படுதோல்வியை மறைத்து மக்களை திசை திருப்ப ஏவப்பட்ட இந்த சவால் மக்கள் சிரிப்பாய் சிரிக்கும் அளவுக்கு மாறும் என கமலக்கூட்டம் எதிர்பார்க்கவில்லை. தற்போது உடற்பயிற்சி வீடியோ முக்கியமா? நாட்டை நிர்வகித்து குவிந்து கிடைக்கும் பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுப்பது முக்கியமா என்று, இந்த ஆட்சியால் சீரழிந்த மக்கள் வேதனையோடு கேட்கிறார்கள் என்றாலும், எல்லா துன்பங்களையும் மறந்து கொஞ்சம் சிரிக்க வைக்கிறது, இந்த சர்க்கஸ். சிறு பிள்ளைகள் கூட எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் இந்த சவாலுக்கு தக்க பதிலடி பதில் கொடுத்துள்ளார் குமாரசாமி. அவருக்கு பாராட்டுகள். இப்படி கோமாளித்தனங்கள் செய்வதை வைத்து இவர் தனது மதிப்பை தானே குறைத்துக்கொள்கிறார்.

Rate this:
Raajan - Mumbai,இந்தியா
14-ஜூன்-201814:08:45 IST Report Abuse

Raajanஏன் கர்நாடக முதல் மந்திரியை மட்டும் அழைக்கணும் பக்கத்தில் இருக்கிற அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர்களை அழைக்கலாமே. ஏனென்றால் கர்நாடகாவில் காங்கிரஸ் தயவில் ஆட்சி நடக்கிறது, அவரை மட்டும் கூப்பிட்டு ஏன் காங்கிரஸ் தயவுல ஆட்சிசெய்றேங்க நாங்க பிஜேபி ஆதரவு தருகிறோம் என்று சொல்லுவதற்காகத்தான்.

Rate this:
முத்துகுமார் - New York,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201812:42:25 IST Report Abuse

முத்துகுமார் 67 வயதில் என் தந்தை இப்படி Fitஆக இல்லையே என்று கவலையாக உள்ளது. நல்ல விஷயம் தானே இதையும் அரசிலாகிவிட்டார்களே இந்த meme Creators

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
14-ஜூன்-201813:48:06 IST Report Abuse

BoochiMarunthuநீ ஆஃபிஸில் வேலை செய்யாமல் அதுக்கு பதிலா யோகா செய்து வீடியோ வெளியிட்டு பாரேன் என்னே நடக்கிறது என்று ?...

Rate this:
Laser Eyes - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:19:03 IST Report Abuse

Laser Eyesமோ(ச)டி கும்பலுக்கும், கோடி (கேடி) கும்பலுக்கும் தான் உடற்பயிற்சி தேவை, வியர்வை சிந்தும் உழைக்கும் வர்க்கங்களுக்கு உழைப்பே ஒரு உடற்பயிற்சிதான்.

Rate this:
Laser Eyes - Chennai,இந்தியா
14-ஜூன்-201812:03:19 IST Report Abuse

Laser Eyesஇப்போதைய நிலையில் உடல் பயிற்சியை விட "மனப்பயிற்சி" மிக மிக அவசியம். (எல்லாம் சமூகத்தையும், மதங்களையும், எல்லா மாநிலங்களையும் சமமாக எப்படி கருதுவது, இந்தியாவிலேயே தொடர்ந்து குறைந்த பட்சம் ஆறு மாதம் இருப்பது, பார்லிமென்டில் கேள்விகளுக்கு பதில் கொடுப்பது, கூட்டணி கட்சிகளை எப்படி அரவணைப்பது )

Rate this:
மேலும் 47 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement