18 எம்.எல்.ஏ.,க்கள் கதி... இன்று தெரியும்! Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,18 எம்.எல்.ஏ.க்கள்,தகுதி நீக்கம்,செல்லுமா,சென்னை,உயர் நீதிமன்றம்,தீர்ப்பு

சென்னை : அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லுமா என்பது, இன்று தெரிய வரும். சபாநாயகர் உத்தரவை எதிர்த்து, 18 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று மதியம், 1:00 மணிக்கு, தீர்ப்பு வழங்குகிறது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின், அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட விரிசலில், சசிகலா அணியில் இருந்த பழனிசாமி, முதல்வராக நியமிக்கப்பட்டார்; பன்னீர்செல்வம், எதிர் அணியில் இருந்தார். ஒரு கட்டத்தில், பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கை கோர்த்தனர். பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலர் பொறுப்பில் இருந்து, சசிகலாவை நீக்கினர்.
இந்நிலையில், சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். கடந்த, 2017 செப்டம்பரில், இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
18 தொகுதிகளும் காலியானதாக, தேர்தல் ஆணையம் அறிவித்தது. தகுதி நீக்கத்தை

எதிர்த்து, 18 பேரும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றை விசாரித்த, நீதிபதி துரைசாமி, 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பை வெளியிட, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தார்.
பின், அந்த மனுக்கள், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. வழக்கை, இரண்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, அந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது.
எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், அபிஷேக் சிங்வி, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் ஆகியோரும், சபாநாயகர், சட்ட சபை செயலர், கொறடா, முதல்வர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள், அரிமா சுந்தரம், முகுல்

ரோஹத்கி, வைத்தியநாதன் ஆகியோரும் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களும், 2018 ஜன., 23ல் முடிந்தன. வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்திருந்தது. இதையடுத்து, இவ்வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்தது. ஒரு கட்டத்தில், தலைமை நீதிபதி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், தகுதி நீக்க வழக்கில், தீர்ப்பை விரைந்து அளிக்க கோரி முறையிடப்பட்டது. அதற்கு, தலைமை நீதிபதி, 'தீர்ப்பு விரைவில் வரும்' என்றார்.
கோடை விடுமுறைக்கு பின், 4ம் தேதி, உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. தலைமை நீதிபதியுடன் அமர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, எம்.சுந்தர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்குகளை விசாரித்து வருகிறார். நேற்று அவர், மதுரையில் இருந்து சென்னை புறப்பட்டார்.

அதனால், இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளிவரும் என்ற, எதிர்பார்ப்பு கூடியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச், 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், இன்று மதியம், 1:00 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
சட்டசபையில், முதல்வர் மீதான நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி, தி.மு.க., கொறடா சக்கரபாணி மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தொடர்ந்த வழக்கை, ஏற்கனவே, தலைமை நீதிபதி அடங்கிய, முதல் பெஞ்ச் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், இன்றைய தீர்ப்பில், மூன்று விதமான உத்தரவுகள் வர வாய்ப்பு உள்ளது. சபாநாயகரின் உத்தரவு செல்லாது அல்லது சபாநாயகரின் உத்தரவு செல்லும் என, தீர்ப்பு வரலாம். அல்லது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவை பிறப்பிக்கலாம். அவ்வாறு பிறப்பித்தால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு செல்லும். எப்படி இருந்தாலும், பாதிக்கப்படுவோர், உச்ச நீதிமன்றம் வரை செல்வர். அங்கு தான், இந்த விவகாரத்திற்கு இறுதி முடிவு கிடைக்கும் என்கின்றனர், சட்ட வல்லுனர்கள்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (33+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் வைத்தியநாதன் - சுலவ்,யுனைடெட் கிங்டம்
14-ஜூன்-201812:39:04 IST Report Abuse

மோகன் வைத்தியநாதன்வருகின்ற தீர்ப்பு விலைக்கு வாங்கப்பட்ட தீர்ப்பகத்தான் இருக்கப்போகிறது ....

Rate this:
Krishna Prasad - Chennai,இந்தியா
14-ஜூன்-201811:53:01 IST Report Abuse

Krishna Prasadசபாநாயகர் உரிமையில் தலையிட முடியாது என்று தான் தீர்ப்பு வரும்

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜூன்-201811:20:00 IST Report Abuse

Devanatha Jagannathanதீர்ப்பு வந்தால் இவங்க அறுந்த பட்டமாகி விடுவாங்க. எங்காவது மரத்தில் சிக்கி பறக்க வேண்டியது தான். தினகரனை வசை பாடுவாங்க.

Rate this:
அமுதவாணன் - chennai,இந்தியா
14-ஜூன்-201811:00:34 IST Report Abuse

அமுதவாணன்ஒரு முக்கியமான வழக்கில் நீதி மன்றம் இவ்வளவு காலம் எடுத்ததே ஒரு அநீதி.

Rate this:
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
14-ஜூன்-201810:52:35 IST Report Abuse

K. V. Ramani Rockfortஎப்படி இருந்தாலும், பாதிக்கப்படுவோர், உச்ச நீதிமன்றம் வரை செல்வர். அங்கு தான், இந்த விவகாரத்திற்கு இறுதி முடிவு கிடைக்கும்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூன்-201810:49:26 IST Report Abuse

இந்தியன் kumarஇந்த அரசு நீடிக்க தகுதி அற்றது , குமாரசாமியின் தவறான தீர்ப்பால் வந்த ஆட்சி இது, அன்றெ ஊழல் அம்மாஜி குற்றவாளி என்று தீர்ப்பு வந்திருந்தால் இந்த ஆட்சி வந்திருக்குமா? இந்த ஆட்சியை நீடிக்க விடுவது மத்திய அரசின் மாபெரும் தவறு.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-ஜூன்-201810:22:08 IST Report Abuse

நக்கீரன்எப்படி பார்த்தாலும் இது மக்களுக்கு எதிரான தீர்ப்பாகத்தான் இருக்க போகிறது.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-ஜூன்-201810:19:13 IST Report Abuse

நக்கீரன்மேல் முறையீடு செய்து அப்படியே இன்னும் கொஞ்ச நாள் ஓட்டிடுங்க. அதற்குள் அடுத்த தேர்தல் வந்துடும். நல்லா இருக்குடா உங்கள் நீதி. இது போன்ற விஷயங்கள் மாறாத வரை நாட்டில் எதுவும் மாறப்போவதில்லை.

Rate this:
murugan - chennai,இந்தியா
14-ஜூன்-201809:13:45 IST Report Abuse

muruganஇந்தியாவில் உள்ள எல்லா உயர் பதவிகளும் வகிக்கும் பிரதமர் திரு மோடி அவர்கள் துணையுடன் ADMK ஆட்சி தொடர்வது உறுதி. தீர்ப்பு எந்தவகையிலும் ஆட்சியை பாதிக்காது.

Rate this:
14-ஜூன்-201808:48:30 IST Report Abuse

நான்தான்பா ரஜினிகாந்த்இன்னும் 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டுல தேர்தல் வராதுனு இன்னுமா புரியல இவனுங்களுக்கு.. பாவம். 3 வருஷம் கழிச்சு போர் வரும் போது பார்த்துக்கலாம்னு க்ளு கொடுத்தாலும் நீதி மன்ற தீர்ப்பு இப்படித் தான் வரும்னு புர்யைலயே இவனுங்களுக்கு.. தமிழர்கள் ஏன் இவ்ளோ மோசமா இருக்காங்க.

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement