பேரையூரில் கிராம சபை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரையூரில் கிராம சபை கூட்டம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி, கமுதி அருகே பேரையூரில் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையிலும், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன் முன்னிலையிலும் நடந்தது. கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவி வரவேற்றார்.கூட்டத்தில் மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்கத்தின்கீழ் இலவச எரிவாயு இணைப்பு, மானியத்தில் எல்.இ.டி., பல்புகள், தடுப்பூசி, விபத்து காப்பீடு, பூஜ்ஜியம் கணக்கில் வங்கி கணக்கு உட்பட 7 திட்டங்களோடு தற்போது புதிதாக துவக்கப்பட்டுள்ள 3 திட்டங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் கலெக்டர் நடராஜன் விளக்கினார். நிகழ்ச்சியில் கமுதி தாசில்தார் முருகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தங்கபாண்டியன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் சுஜி பிரமிளா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை