தமிழ் வளர்ச்சிக்கு உதவியது எந்த ஆட்சி? அமைச்சர்களுடன் தி.மு.க., மோதல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழ் வளர்ச்சிக்கு உதவியது எந்த ஆட்சி?
அமைச்சர்களுடன் தி.மு.க., மோதல்

சென்னை : தமிழ் வளர்ச்சிக்கு உதவியது, எந்த அரசு என்பது குறித்து, அமைச்சர்களும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபையில் காரசார விவாதம் நடத்தினர்.

தமிழ் வளர்ச்சி,உதவியது,எந்த ஆட்சி?,அமைச்சர்களுடன்,தி.மு.க.,மோதல்


சட்டசபையில் நடந்த விவாதம்:


தி.மு.க., - கிரி: சென்னை மாகாணம் என்று இருந்தது, தமிழ்நாடு என்று, தி.மு.க., ஆட்சியில் தான் மாற்றப்பட்டது. தமிழ் அறிஞர்கள் பெயரில், விருதுகளும் வழங்கப்பட்டன. அமெரிக்காவில் உள்ள, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கு, தி.மு.க., சார்பில், ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது போல, தமிழ் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள், தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.

அமைச்சர் பாண்டியராஜன்: ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தேர்தல் அறிக்கையில் அறிவித்தவர், ஜெயலலிதா. இதற்காக, 10 கோடி ரூபாயை ஒதுக்கியவர், முதல்வர் பழனிசாமி. தமிழ் இருக்கை அமைவதற்கு, 9,280 பேர் நிதி வழங்கி உள்ளனர்.

'அரசியல் கட்சியால், இதற்கு நிதி கொடுக்க முடியுமா...' என, தி.மு.க., தரப்பில் கேட்கப்பட்டது. அனைவரும் கொடுத்தப் பின், இறுதியாகத் தான், தி.மு.க., நிதி வழங்கியது. தமிழ் அறிஞர்கள் பெயரில், 60 விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில், 54 விருதுகளை உருவாக்கியது, அ.தி.மு.க., அரசு.

கைத்தறித் துறை அமைச்சர், ஓ.எஸ்.மணியன்: தி.மு.க., ஆட்சியில் தான், தமிழுக்கு பெருமை சேர்க்கப்பட்டது என்று, கூறுவது தவறு. ஐந்தாம் உலக தமிழர் மாநாட்டை, எம்.ஜி.ஆரும், எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதாவும், வெற்றிகரமாக நடத்தி காட்டிஉள்ளனர்.

டில்லி, நேரு பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க, தி.மு.க., ஆட்சியில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மொத்தமாக, 50 லட்சம் ரூபாய் கேட்டு, அது திருப்பி அனுப்பப்பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், 50 லட்சம் ரூபாய் வழங்கி, தமிழ் இருக்கையை உறுதி செய்தார்.

முத்தமிழ் என்பதை மாற்றி, அறிவியல் தமிழ் என்ற, நான்காம் தமிழை உருவாக்கியவர், ஜெயலலிதா. இதன்மூலம், சிறுபான்மை பள்ளிகளிலும், தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டது.

அமைச்சர் பாண்டியராஜன்: வள்ளுவர் வாக்கிற்கு பதிலாக, கருணாநிதியின் வாக்குகளை எழுதியவர்கள், செம்மொழி பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.

Advertisement

தி.மு.க., - தங்கம் தென்னரசு: தமிழுக்கு, செம்மொழி அந்தஸ்து பெற்று தந்ததே தி.மு.க., தான். இதுகுறித்து, கருணாநிதிக்கு, காங்., தலைவர் சோனியா கடிதம் எழுதியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியதாக கூறும், அ.தி.மு.க., ஆட்சியில், இதுவரை, ஒரு தமிழ் அறிஞர் நுால் கூட நாட்டுடமை ஆக்கப்படவில்லை. பள்ளிகளில், கட்டாய தமிழ் வழிக் கல்வியை ஏற்படுத்தியவர், கருணாநிதி.

பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன்: கோவையில் நடத்திய செம்மொழி மாநாட்டிற்கு, ஆதிதிராவிடர் நல நிதியை பயன்படுத்தியது ஏன் என்பதை, தி.மு.க.,வினர் விளக்க வேண்டும்.

சபாநாயகர் தனபால்: நீங்கள் தமிழோடு விளையாடியது போதும். விவாதம் திசை மாறி, எங்கெங்கோ செல்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
15-ஜூன்-201820:38:45 IST Report Abuse

Sukumar Talpadyஇந்த திராவிட கட்சிகளின் ஆட்சியில்தான் தமிழ் அழிந்து கொண்டிருக்கிறது எதிலும் தமிழ் , எங்கும் தமிழ் என்று சொல்லிசொல்லி தமிழர்களை ஏமாற்றி வருகிறார்கள் . இன்றைய இளைஞர்களுக்கு தமிழை நன்றாக பேசவும் தெரியவில்லை , உச்சரிக்கவும் தெரியவில்லை , எழுதவும் தெரியவில்லை . தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் நடிகர்கள் ,நடிகைகள் பேசும் தமிழைக் கேட்டால் இரத்தம் கொதிக்கிறது . சினம் எழுகிறது . தமிழர்கள் ஏமாற்றப் படுகிறார்கள் , ஏமாறிக் கொண்டே இருப்பார்கள் . இந்த கழகங்களின் ஆட்சி ஒழிந்தால் தான் தமிழுக்கு நல்ல காலம் .

Rate this:
sundaram - Kuwait,குவைத்
14-ஜூன்-201816:30:54 IST Report Abuse

sundaramதமிழ் யாவாரத்தால் மெத்த பலனடைந்தவர்கள் திமுகவினர் என்பதில் என்ன சந்தேகம்? கோவை செம்மொழி மாநாட்டுக்கு ஆதிதிராவிடர் நல மேம்பாட்டு நிதியை பயன்படுத்தியதும் இல்லாமல் அதற்கு உலக தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் அங்கீகாரமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட ஆலை வளாகத்தை மகளுக்கு கையகப்படுத்தும்பொருட்டு கோவை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது திமுகவினருக்கே தெரியும்.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூன்-201811:43:01 IST Report Abuse

Nallavan Nallavanசென்னைக் கார்ப்பரேஷனில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் பரிசு என்று காமெடியான திட்டத்தை அறிவித்தது ஒரு திமுக மேயர்தான் .... குழந்தைக்கு அபுபக்கர் என்றோ ஸ்டாலின் என்றோ பெயர் இருந்தால் தங்க மோதிரம் கிடைக்குமா என்று அப்பொழுது அவரிடம் யாரும் கேட்கவில்லை .....

Rate this:
Jayvee - chennai,இந்தியா
14-ஜூன்-201811:37:17 IST Report Abuse

Jayveeமொழி அதுவும் வழக்கத்தில் இருக்கும் மொழி, பல ஆயிரம் ஆண்டுகளாக தழைத்து செழித்து வரும் மொழி, இதை வளர்ப்பது பேணிக்காப்பது தமிழர்களின் கடமை .. இதை அரசு செய்ய நினைத்தால் ஊழல் தான் மிஞ்சும்.. தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னரிமை அளித்தால் போதும்.. அதற்காக மற்ற மொழிகளை கற்றல் ஒரு பாவ செயலும் அல்ல என்பதை தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் வியாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். இன்றளவும் ஆங்கிலம் உலகளவில் பேசப்படும் அல்லது இடை மொழியாக கருதப்படுவதற்கு காரணம், பிற மொழிகளின் வார்த்தைகளை ஆங்கில அகராதியில் சேர்ப்பதுதான் காரணம். இதையும் தமிழ் தீவிரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூன்-201811:10:02 IST Report Abuse

இந்தியன் kumarதமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடம் ஆக்க வேண்டும். தமிழக அரசு பணிகளில் உள்ளவர்கள் கட்டாயம் தமிழில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும் .

Rate this:
RR Iyengar - Bangalore,இந்தியா
14-ஜூன்-201809:37:46 IST Report Abuse

RR Iyengarதமிழை அழித்த கட்சி ஏதுனு சண்டை போட்டுக்கங்க ... அது தான் சரியா இருக்கும் ... மெக்காலே "கலவி" முறையால் தமிழை நீங்க அழித்தது தான் மிச்சம் ....

Rate this:
VOICE - CHENNAI,இந்தியா
14-ஜூன்-201809:27:45 IST Report Abuse

VOICEரஷ்யா சீனா எல்லாம் பலம் உள்ள நாடக திகழ அவர்களது மொழி முக்கிய பங்கு ஆற்றுவது தான் காரணம்.விஞானம் அறிவியலில் கணிதம் கணினி ப்ரோக்ராமிங் மற்றும் கணினி ஹேக்கிங் தமிழில் வளர்த்தல் உலகம் திரும்பி பார்க்கும் வைக்கும். .

Rate this:
Idithangi - SIngapore,சிங்கப்பூர்
14-ஜூன்-201808:50:59 IST Report Abuse

Idithangi தமிழ் வளர்ச்சிக்கு ஒரே கரணம் கட்டுமரத்தின் புது மொழிகளும் ( முன்பு அரசு பேருந்துகளில் எழுதி வைத்தது) மற்றும் உளியின் ஓசை, பாச கிளிகள் , இளைஞன் போன்ற காவியங்களும் கவிதாயினி கனிமொழியின் கவிதைகளும் காரணம். போங்கய்யா போயி வேலையே பாருங்கய்யா.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:23:59 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇரண்டு பெரும் தமிழ் தமிழ் என்று சொல்லி அதை புதைத்தோடு சரி...பாருங்கள் நடைமேடையில் வசிக்கும் குடும்பம் கூட எண்பது சதம் ஆங்கிலம் கலந்த ட மி லில் தான் பேசுகிறார்கள்.. அவ்வளவு தமிழை வளர்த்து இருக்கிறார்கள்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:09:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎந்த கட்சியும் தமிழை வளர்க்கவில்லை... மாறாக தேய்ந்து வருகிறது... இன்றைக்கு வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டுள்ள திராவிடர்களின் குழந்தைகள் ஆங்கில வழி கல்விதான் பயில்கிறது...இதே திராவிடர்கள் டெல்லி சென்றால் ' ஆப் கைஸே " என்று இந்தியில்தான் குசலம் விசாரிக்கிறார்கள்... இரண்டு திருட்டு திராவிடர்கள் வாயில்தான் முழம் போடுவார்கள்..

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement