மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை; 'மாஜி' போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மருத்துவமனையில் ஜெ.,வை பார்க்கவில்லை
'மாஜி' போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வாக்குமூலம்

சென்னை : 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, ஜெ.,வை பார்க்கவில்லை' என, மாஜி போலீஸ் கமிஷனர், ஜார்ஜ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மருத்துவமனை,ஜெ.,A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா,பார்க்கவில்லை,மாஜி,போலீஸ் கமிஷனர்,ஜார்ஜ்,வாக்குமூலம்ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரித்து வருகிறது. நேற்றைய விசாரணையில், மருத்துவமனையில், ஜெ., சிகிச்சை பெற்றபோது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த, ஜார்ஜ் ஆஜரானர். அவரிடம், ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர், ஒன்றரை மணி நேரம் விசாரணை
நடத்தினர்.


விசாரணையில், ஜார்ஜ் அளித்துள்ள வாக்குமூலம்: ஜெ., வீட்டில் இருந்து, சசிகலா, 2011ல் வெளியேற்றப்பட்டார். அப்போது, நான், சட்டம் - ஒழுங்கு, ஏ.டி.ஜி.,யாக இருந்தேன்.

ஜெ., - சசி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், வெளியேற்றப்பட்டார் என, தெரிந்து கொண்டேன்.


சென்னையில், 2015ல் கால்பந்தட்ட போட்டி நடந்தது. அதில், அம்பானி குடும்பத்தை சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த தகவலை முன்கூட்டியே, ஜெ., விடம் தெரிவிக்காததால், நான் கமிஷனராக நியமிக்கப்பட்டதாக தெரிந்து கொண்டேன்.


அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., சிகிச்சை பெற்ற நாட்களில், தினமும் மருத்துவமனை சென்று வருவேன். ஆனால், ஒரு நாளும், ஜெ.,வை பார்த்ததில்லை. கண்ணாடி வழியே சில, வி.ஐ.பி.,கள் ஜெ.,வை பார்த்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.


ஜெ., உடல்நிலை குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். கடந்த, 2016 டிச., 4ல், ஜெ.,க்கு உடல்நிலை மோசமானதை, போலீஸ் வட்டாரங்கள் வழியே தெரிந்து கொண்டேன். உடனடியாக மருத்துவமனை சென்றேன். ஆனால், ஜெ., உடல்நிலை குறித்து, டாக்டர்களிடம் கேட்கவில்லை.


ஜெ., சிகிச்சை பெற்ற நாட்களில், அவரது உடல்நிலை குறித்து, பல்வேறு தகவல்கள்

Advertisement

வெளியாகின. இது தொடர்பாக, விசாரணை நடத்தவில்லை. மேலும், ஜெ.,வின் ரத்த சொந்தம் தீபா என, அப்போது எனக்கு தெரியாது. தமிழக கவர்னராக இருந்த வித்யசாகர் ராவ், மருத்துவமனைக்கு சென்றபோது, அவரை அழைத்து சென்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.


ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது; ஞாபகமில்லை; இருக்கலாம்...' என, மாஜி கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால், இன்று மீண்டும், பிற்பகல், 2:30 மணிக்கு ஆஜராக, அவருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் பொது நல மருத்துவரான, திவாகரனின் மகள், ராஜ் மாதங்கி, காது - மூக்கு - தொண்டை மருத்துவர் விக்ரம் ஆகியோர் இன்று ஆஜராகின்றனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201817:39:34 IST Report Abuse

Endrum Indianஅப்போ ஜெயலலிதா பிணமாகத்தான் இருந்தார் என்று உறுதியாக சொல்ல முடியும் என்ற திசையில் தான் பயணிக்கின்றது. ஒரு கமிஷனர் பார்க்கவில்லையாம், ஆனால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று பாடு பட்டனராம்??? ஏன்??ஏன்???.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூன்-201816:15:38 IST Report Abuse

ஆரூர் ரங்டாக்டரைக்கூட பாக்கலியாம்..?

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
14-ஜூன்-201814:37:28 IST Report Abuse

Visu Iyerபிரதமரை விசாரிப்பார்களா உள்துறை அமைச்சரை விசாரிப்பார்களா

Rate this:
14-ஜூன்-201811:55:59 IST Report Abuse

ஸாயிப்பிரியாஇவர் , அவர்கள் சொல்படி நடப்பவர் ஒரு % கூட உண்மை இருக்காது. மனசாட்சிக்கு லஞ்சம் கொடுப்பவரில் இவரும் ஒருவர். மறைந்தவர் முதல்வர் என்பதால் ஜெ,.. அவர்களைப்பற்றி தொடர்ந்து படிக்கின்றேன் இறை நம்பிக்கையுடன்.

Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
14-ஜூன்-201811:35:45 IST Report Abuse

Narasimhanபெரிய சதி நடந்துள்ளது நன்றாக புரிகிறது. இதில் கண்டிப்பாக அப்பல்லோ ரெட்டிக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது. மற்றவர்களை விசாரிப்பதில் நேரம்தான் வீணாகுமே தவிர உண்மை வரப்போவதில்லை.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூன்-201811:12:52 IST Report Abuse

Pugazh Vஅடக்கி கடவுளே. யாருமே ஜெ வை பாக்கலியா? டாக்டர்களாவது நேரத்துக்கு பாத்து மருந்து குடுத்தாங்களா இல்ல அவங்களும் யாரும் பாக்கலியா?

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
14-ஜூன்-201811:06:50 IST Report Abuse

narayanan iyerஒரு கூட்டு சதி என்பதுமட்டும் நிதர்சனம்.

Rate this:
Vaidhyanathan Sankar - chennai,இந்தியா
14-ஜூன்-201808:48:39 IST Report Abuse

Vaidhyanathan Sankarமருத்துவ மனையில் ஜெ சிகிச்சை பெtra kaalaththil இவருக்கு நகரில் சட்டம் ஒழுங்கு குறித்த ஆணைகளை வழங்கியத்து யார் எனவும் விசாரித்திருந்தால் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கலாம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:12:00 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒரு காவல் துறை அதிகாரியான இவர் 'தெரியாது ஞாபகமில்லை இருக்கலாம். என்று பதில் சொல்லக்கூடாது... நீதிமன்றத்தில் ஆம் ,இல்லை என்றுதான் கூறவேண்டும்... இதுகூட தெரியாதா...,..? இதுவும் ஒரு வகையான " எஸ்கேப்பிசம் "

Rate this:
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-ஜூன்-201808:07:07 IST Report Abuse

Amirthalingam Sinniahதானும் தன்னுடைய குடும்பமும் என்று தமிழ்நாட்டில் வாழ்க்கை ஒட்டிகொண்டு இருந்திருகிறார் இந்த ஜோர்ஜ். கடமை உணர்வை மறந்துவிட்டார்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement