ரஜினி மீது வழக்கு பதிவு; உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி மீது வழக்கு பதிவு
உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை : நடிகர் ரஜினிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய, போலீசுக்கு உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சட்டப்படி உரிய நிவாரணம் தேடிக் கொள்ளும்படி, வழக்கு தொடுத்தவருக்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை ஐகோர்ட்,  நடிகர் ரஜினி, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை,  ஓசூர் சிலம்பரசன், தூத்துக்குடி கலவரம், ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ரஜினி, ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றம், 
Chennai High Court, Actor Rajini,Thoothukudi Sterlite Plant, Hosur Silambarasan,
Thoothukudi riots, Sterlite plant, Thoothukudi firing, Rajini, Rajinikanth,


துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ௧௩ பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். பலியானோரின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தோரையும், ரஜினி சந்தித்தார். பின்,

சென்னையில் பேட்டி அளிக்கும்போது, 'துாத்துக்குடியில் நடந்த சம்பவத்துக்கு, சமூக விரோதிகள் காரணம்' என்றார்.

இந்நிலையில், ஓசூரைச் சேர்ந்த, சிலம்பரசன் என்பவர் தாக்கல் செய்த மனு: அமைதியான போராட்டத்தால் தான், நமக்கு பல உரிமைகள் கிடைத்துள்ளன. ரஜினியின் பேச்சு, பொது மக்களின் உரிமைக்கு எதிராக உள்ளது. அமைதியாக போராடு வோரை, அவதுாறு செய்வதாக உள்ளது. ரஜினிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யும்படி, ஓசூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை அணுகினேன். புகாரை பெற, அவர் மறுத்து விட்டார்.

இன்ஸ்பெக்டர் மற்றும் கிருஷ்ணகிரி, எஸ்.பி.,க்கு, புகார் அனுப்பினேன். புகார் கிடைத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் புகாரை பதிவு செய்யும்படி, ஓசூர் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மனுவை விசாரித்த, நீதிபதி, பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு: புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய, உத்தரவிட முடியாது. போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.பி., மாஜிஸ்திரேட்டை அணுகாமல், நேரடியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதை, ஏற்க முடியாது என, ௨௦௧௬ செப்டம்பரில் உத்தரவிட்டுள்ளேன். எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஏற்கனவே அளித்த உத்தரவின்படி, உரிய முறையில், மனுதாரர் நிவாரணம் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-201820:38:37 IST Report Abuse

rameshரஜினி உண்மையைச் சொன்னதுக்கு எப்படியெல்லாம் கிளப்புறானுக ...ரஜினி எதற்கெடுத்தாலும் போராட்டம் கூடாதுனுதான் சொன்னார் . தேவையில்லாமல் வழக்கு தொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தமைக்கு அந்த சிலம்பரசனை 15 நாள் ரிமாண்ட் செய்யனும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-201817:11:59 IST Report Abuse

Endrum Indianஓசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், கிருஷ்ணகிரி எஸ்.பி.,, நீதிபதி எல்லாரும் ரஜினி ரசிகர்களா மக்கள் / ஜன சேவைக்கு இருக்கும் அதிகாரிகளா???

Rate this:
Jayvee - chennai,இந்தியா
14-ஜூன்-201811:42:19 IST Report Abuse

Jayveeஇவன் சிலம்பரசனா அல்லது சிலுவை அரசனா ?

Rate this:
sivakumaran - Coimbatore,இந்தியா
18-ஜூன்-201813:43:03 IST Report Abuse

sivakumaranநாட்ல எவன் எதுத்து பேசுனாலும் அவனை உடனே மதம் மாத்திருங்கடா. காமாலை கண்ணு ....

Rate this:
Siddique - hyderabad,இந்தியா
14-ஜூன்-201808:54:25 IST Report Abuse

Siddiqueஇந்த சிலம்பரசன நோண்டுனா இவனோட வில்லு யாருன்னு தெரிஞ்சுரும்.

Rate this:
Sandru - Chennai,இந்தியா
14-ஜூன்-201808:33:39 IST Report Abuse

Sandruரஜினி மேல் வழக்கு பதிவு செய்ய கூடாது. நீதி மன்றம் ஆணை இட்டும் சிரிப்பு சேகரை கைது செய்ய முடியாது. ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு தனி நீதியா?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:13:38 IST Report Abuse

Srinivasan Kannaiyaநீதிபதி, பி.என்.பிரகாஷ் மூலம் வேறு யாரோ பேசுகிறார்கள்..,.

Rate this:
Siddique - hyderabad,இந்தியா
14-ஜூன்-201809:01:29 IST Report Abuse

Siddiqueஓமன்ல இருந்து ஒரு CID சொல்லிட்டாரு. கேட்டுக்கோங்க மக்கா....

Rate this:
L SIVAKUMAR - chennai,இந்தியா
14-ஜூன்-201807:36:37 IST Report Abuse

L SIVAKUMARதிமுக காங்கிரஸ் ஜால்ரா v.மணி உனக்கு ரஜினியை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கு.

Rate this:
14-ஜூன்-201807:30:14 IST Report Abuse

நான்தான்பா ரஜினிகாந்த்ஹ்ஹஹஹ் ஹா.. கண்ணா.. அதான் சொன்னேனே சிஸ்டம் கெட்டு போச்சுனு.. இப்போ புரியுதா..? நீயே தெளிவா மனுவில சொல்லி இருக்க 'இன்ஸ்பெக்டர்கிட்ட புகார் கொடுத்தேன், அவர் மறுத்துட்டார்.. அப்புறம் எஸ்.பிக்கு அனுப்பினேன், ஆனா எந்த நடவடிக்கையும் இல்லைனு..' அதை கேட்டப்புறமும் நீ எஸ்.பிகிட்ட போகாம உயர் நீதி மன்றத்துக்கு வர கூடாதுனு ஒரு உயர் நீதி மன்றமே சொல்லுதுனா, இங்க எந்தளவுக்கு சிஸ்டம் கெட்டு போயிருக்குனு தெர்யுதா..? கண்ணா இங்கே உன்னை மாதிரி சமான்யனுக்கு ஒரு நீதி, அதிகாரம், பணபலம், படைபலம் கொண்ட என்னை மாதிரி செல்வாக்கு உள்ளவங்களுக்கு ஒரு நீதி.. சிஸ்டம் கெட்டு போச்சி கண்ணா.. இவ்ளோ ஏன்.. என் மேலயும் என் குடும்பத்தினர் மேலயும் எத்தனையோ மோசடி மற்றும் கிரிமினல் வழக்கு யார் யாரோ சாமான்ய நடுத்தர பாதிக்கபட்ட மக்கள் போட்டிருக்காங்க.. ஆனா அப்படி வழக்கு போட்டவங்க தான் இன்னைக்கும் கோர்ட்டு கோர்ட்டா ஏறி இறங்கிகிட்டு இருக்காங்களே தவிர, அரசியல் செல்வாக்கு இருக்கிற நான் ஒரு நாளும் கோர்ட்டு வாசலை கூட மிதிக்க மாட்டேன்.. ஆனா எல்லா சமாச்சாரத்தையும் இருந்த இடத்துல இருந்தே முடிச்சிடுவேன்.. அந்த அளவுக்கு இந்த நாட்டுல.. சாரி சாரி இந்த மாநிலத்துல மட்டும்.. சாரி சாரி.. எதோ ஒரு இடத்துல சிஸ்டம் கெட்டு போயிடுச்சி..

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-ஜூன்-201807:13:21 IST Report Abuse

Swaminathan Chandramouliஸ்டெரிலைட் ஆலையின் குடியிருப்பு வீடுகளில் வசித்துவரும் தொழிலாளர்கள் , அதிகாரிகளின் நிலை என்ன ? அவர்களின் குடும்பத்தாரின் நிலை என்ன . வீடுகள் தீவைத்து கொளுத்த பட்டன . வாகனங்கள் தீக்கு இரையாகின. குடியிருப்பில் எத்தனை பேர்கள் இறந்தனர் ? இதை பற்றி அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது . ஆலையில் பணி புரிந்தவர்களும் மனிதர்கள் தானே . போராட்டம் ஆரம்பத்தில் அமைதியாக நடந்திருக்கலாம் ஆனால் சமூக விரோதிகளும் ,ரவுடிகளும் , பயங்கர வாதிகளும் அரசியல் வாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டனர் . அமைதியான போராட்டம் கலவரமாக மாறியது . இதெற்கெல்லாம் யார் காரணம் ? உண்டியல் குலுக்கும் கட்சிக்காரர்களும் .லெட்டர்பேட் கட்சிகளும் அழுக்கு குட்டையில் ஊறிய இன்னொரு திராவிட கட்சியும் அல்லக்கைகளும் தானே

Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
14-ஜூன்-201807:02:06 IST Report Abuse

Sivaபா ஜ க வில் ரஜினி போன்ற துணிச்சல் அற்றவர்களுக்கு இடமில்லை.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-201807:54:22 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்எஸ்.வீ சேகர் மாதிரி எப்படி, கெத்தா சட்டை பட்டனை கழட்டி மார்பை தொறந்து காட்டிக்கிட்டு.. ப்ப்ப்பா.....

Rate this:
Siddique - hyderabad,இந்தியா
14-ஜூன்-201808:58:55 IST Report Abuse

Siddiqueஇல்ல சைமன் மாதிரி ஹிந்து கடவுளை பப்ளிக்கவே சாடிக்கிட்டு கூடவே ஒரு ரவுடி கூட்டத்த வச்சுகிட்டு. யப்பப்பா.....

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement