மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம்...துரிதம்! நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்| Dinamalar

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டம்...துரிதம்! நிலம் கையகப்படுத்தும் பணி துவக்கம்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்துக்கு, தேவையான நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பாதையில் உள்ள நிலம் தொடர்பாக, உரிமை கோருபவர், ஆட்சேபனை தெரிவிப்பவர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவிக்கலாம் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டம், 79 ஆயிரத்து, 961 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 107.55 கி.மீ., பாதை அமைக்கப்பட உள்ளது.இப்பாதைகள், மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே, 45.81 கி.மீ., துாரமும், கோயம்பேடு - கலங்கரை விளக்கம் இடையே, 17.12 கி.மீ., துாரமும், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 44.62 கி.மீ., துாரமும் அமைக்கப்பட உள்ளன. இப்பாதைகளில், 116 நிலையங்கள் கட்டப்பட உள்ளன.இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறுவதற்கு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்திற்கு, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதல், மற்றும் நிதி பங்களிப்பு ஆகியவற்றை, விரைவில் வழங்க வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.ஆயத்த பணிகள் இரண்டாவது திட்டத்தில், முதல் கட்டமாக, மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி சிப்காட் பாதைகளுக்கு, கட்டட வடிவமைப்புகள் வழங்கவும், திட்ட கட்டுமான பணிகளுக்கு ஆலோசனை வழங்கவும், தனியார் ஒப்பந்த நிறுவனத்தை, மெட்ரோ ரயில் நிர்வாகம் நியமிக்க உள்ளது.இதற்காக, உலக அளவில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதிகாரிகளுடன் சந்திப்பு நடந்துள்ளது.இந்த மூன்று பாதைகளுக்குமான வரைபடம் தயாரிக்கும் பணி முடிந்து, பாதைகளுக்கு தேவையான இட வசதிகள் குறித்து, தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆய்வு நடத்தி, மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, இப்பாதைகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்தபணி, மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் அரசின் சார்பில் துவங்கப்பட்டுள்ளது.மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே பாதை அமைய உள்ள நிலங்கள் பற்றிய தகவல்களை தெரிவித்து, பெரம்பூர், செம்பியம், செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள நிலத்திற்கு, உரிமை கொண்டாடும் நபர்கள், 30 நாட்களுக்குள், ஆட்சேபனை, மறுப்பு குறித்தும் தெரிவிக்கலாம்.இவ்வாறு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் தண்டையார் பேட்டை வருவாய் கோட்ட நில எடுப்பு அலுவலரின் சார்பில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-நமது நிருபர்-



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNA PAANA - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:32:12 IST Report Abuse
SUNA PAANA நல்ல முயற்சி ஆனால் கட்டணம் மிகவும் அதிகம். அதை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுகொள்ள்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை