கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கெஜ்ரிவால் 3வது நாளாக போராட்டம்

புதுடில்லி : வீடுகளுக்கு, ரேஷன் பொருட்களை நேரில், 'டெலிவரி' செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி துணை முதல்வர், மணீஷ் சிசோடியா நேற்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினார். இதற்கிடையே, ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான, அரவிந்த் கெஜ்ரிவால், மூன்றாவது நாளாக, நேற்றும், கவர்னர் மாளிகையில் தங்கி, போராட்டம் நடத்தினார்.

Arvind Kejriwal,Aam Aadmi Party,Kejriwal,ஆம் ஆத்மி,கெஜ்ரிவால்,3வது நாளாக,போராட்டம்


டில்லியில், ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும்; நான்கு மாதங்களாக பணிக்கு வராதோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்;

'வீடுகளுக்கு நேரடியாக, ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் தர வேண்டும்' என, துணை நிலை கவர்னரை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர், சத்யேந்தர் ஜெயின், உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பிற அமைச்சர்கள், கவர்னர் மாளிகை அலுவலகத்தில் மூன்று நாட்களாக தங்கி, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னர் மாளிகை அலுவலகத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில், துணை முதல்வர், மணீஷ் சிசோடியாவும் நேற்று குதித்தார். இதனால், டில்லி அரசியலில் பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக, முதல்வர் கெஜ்ரிவால், கவர்னர் அலுவலகத்தில் இருந்தபடி, 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், 'பிரதமர் அலுவலகம் பச்சைக் கொடி காட்டாமல், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணிக்கு திரும்புவது

Advertisement

சாத்தியமில்லையா என்பதை அறிய விரும்புகிறேன். 'டில்லி அரசு நிறைவேற்றி வரும் நல்ல பணிகளை தடுக்கும் வகையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மத்திய அரசு பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது' என, கூறியுள்ளார்.

இதற்கிடையே, டில்லி மாநில பா.ஜ., தலைவர்கள், கெஜ்ரிவால் அலுவலக வரவேற்பு அறையில் புகுந்து போராட்டம் நடத்தினர்.கவர்னர் அலுவலகத்தில், டில்லி முதல்வரும், அமைச்சர்களும் தங்கி போராட்டம் நடத்தி வருவது, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவது போல் உள்ளதாக, மாநில, பா.ஜ., விமர்சித்துள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
14-ஜூன்-201816:01:00 IST Report Abuse

muthu Rajendranதேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை ஆளுநர் சந்திக்க அதுவும் மூன்று நாளாகியும் மறுக்கிறார் ஒரு மாநில (நம்ம முதல்வரைத்தான் ) நேரில் சந்திக்க பிரதமர் அனுமதி தரவில்லை. புதுச்சேரியில் தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றுப்போன வேட்பாளர்களை நியமன எம் எல் ஏக்களாக துணை ஆணையர் நியமிக்கிறார். அவர்களை சபாநாயகர் பதவி ஏற்க அனுமதி மறுக்கிறார் ..114 எம் எல் ஏக்கள் இருந்தால் தான் நிலையான ஆட்சி கொடுக்கமுடியும் என்று இருந்தபோதிலும் 104 எம் எல் ஏக்கள் உள்ள கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கிறார்.இது தான் இந்திய ஜனநாயகம்

Rate this:
JOY - Chennai,இந்தியா
14-ஜூன்-201813:45:48 IST Report Abuse

JOYmakalukaaka king keji

Rate this:
14-ஜூன்-201813:20:53 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். ஆனாலும் கெஜ்ரிக்கு வேறு வழி இல்லை. ஏதோ தான் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா ? பிரதமர் பதவிக்கு துடித்தவர் இன்று டம்மி பீஸாகிவிட்டாரே . அடுத்து உலகத்திற்கு ஒரு பிரதமர் என்று தன்னை தானே அறிவித்துக்கொள்வார்.

Rate this:
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
14-ஜூன்-201812:26:10 IST Report Abuse

Mohammed Abdul Kadarஎந்த ஒரு சூழ்நிலையிலும் கெஜ்ரிவால் ஆம் ஆத்மீ கட்சி வளர்ந்து விட கூடாது , நல்ல திட்டங்களை செயல் படுத்தினால் பெயர் வாங்கி விடுவார் என பிஜேபி , காங்கிரஸ் படு உன்னிப்பாக கையை நகர்த்தி வருகிறது , மக்களை இனி ஏமாத்தி பிழைக்க முடியாது மாபெரும் அநியாயம் நடக்கிறது ,, அடுத்த தேர்தலில் பிஜேபி ஓரங்கட்ட படும் ...

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
14-ஜூன்-201811:19:02 IST Report Abuse

C.Elumalaiஇந்தியாவில் மூன்று பப்புலூகள், உள்ளனர். 3,வதுதமிழக பப்புலூ,ஸ்டாலின், 2,வது டெல்லி பப்புலூ கஜ்ரி வாலு, 1,வது ஆல்இந்தியா பப்புலூ ராகுல்.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
14-ஜூன்-201810:47:43 IST Report Abuse

narayanan iyerஎன்ன தவறு கவர்னர் முதல்வரைக்கு சந்திப்பதில் . சந்தித்திவிட்டு பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்ப வேண்டியதுதானே . எப்படி இருந்தாலும் இது தேவையில்லாத விஷயம் .ஒரு மனிதனை ஒரு மனிதன் பார்க்கமாட்டேன் என்பது வேடிக்கை .கவர்னர் மத்திய அரசால் நியமிக்க பட்டவர். முதல்வரை மக்கள் தேர்ந்து எடுத்திருக்கின்றனர் .முதல் வருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவேண்டும் . ஜனநாயகம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது .உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால் கவர்னரை மாற்ற வேண்டும் .

Rate this:
S ANBUSELVAN - AL JUBAIL,சவுதி அரேபியா
14-ஜூன்-201809:23:27 IST Report Abuse

S ANBUSELVANநல்லது செய்ய காங்கிரசும் சரி பாஜகவும் சரி விடுவது இல்லை... திருடர்களுக்கு ஆதரவு அளித்து பழக்கப்பட்டு போய் விட்டார்கள்.. அரவிந்த் கெஜ்ரிவாலின் நல்ல திட்டங்களை எதிர்ப்பது ஏன்?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:05:11 IST Report Abuse

Srinivasan Kannaiyaபொதுமக்களை வருத்தாத எந்த போராட்டமும் வெற்றி காணும்...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:04:34 IST Report Abuse

Srinivasan Kannaiyaபொறுத்தார் பூமி ஆளுவார்

Rate this:
14-ஜூன்-201807:23:23 IST Report Abuse

KrishnamoorthyIts a sad fact that only BJP or Congress must rule Delhi... Whoever comes as alternative, both the parties will screw it like anything. Even though things like this are happening, north indians do vote for BJP and bring it to power in this parliament elections

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement