சேத்துமா வாய்க்காலின் இரு புறங்களிலும்  செல்வபுரத்துக்குள் வெள்ளம் புகுந்தது!| Dinamalar

தமிழ்நாடு

 சேத்துமா வாய்க்காலின் இரு புறங்களிலும்  செல்வபுரத்துக்குள் வெள்ளம் புகுந்தது!

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 சேத்துமா வாய்க்காலின் இரு புறங்களிலும்   செல்வபுரத்துக்குள் வெள்ளம் புகுந்தது!

கோவை: கோவை நொய்யலில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், சேத்துமா வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு, செல்வபுரத்துக்குள் தண்ணீர் புகுந்தது; 5,000க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்தது.
கோவை கூடுதுறையில் துவங்கும் நொய்யல் ஆறு, சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து, இரு பிரிவாக பிரிந்து குளங்களுக்கு வருகிறது. பேரூர் படித்துறையை கடந்து வரும் நீர், தமிழ் கல்லுாரி பின் புறம் இரண்டாக பிரிகிறது. கோயமுத்துார் அணைக்கட்டு வழியாக, உக்கடம் பெரிய குளம் மற்றும் புட்டு விக்கி அணைக்கட்டுக்குச் செல்கிறது.
இதில், ஆண்டிபாளையத்தில் புதிதாக அமைத்துள்ள மதகு வழியாக, கோயமுத்துார் (சேத்துமா) வாய்க்கால் வழியாக உக்கடம் பெரிய குளத்துக்கு நீர் செல்லும். தற்போது நொய்யலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சேத்துமா வாய்க்காலில் நீர்வரத்து உள்ளது. செல்வபுரம் ரோட்டில் ஆண்டிபாளையத்தில் புதிதாக பாலம் கட்டியதோடு, வேலையை முடித்து விட்டனர். வாய்க்காலை துார்வாரி, கரையை இருபுறமும் பலப்படுத்தவில்லை.
மாறாக, சுண்டக்காமுத்துார் ரோட்டில் இருந்து, அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வதற்கு, வாய்க்கால் கரையில் ரோடு போடப்பட்டுள்ளது. அப்போது, கரைப்பகுதியில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். கரைப்பகுதியில் சிறிய அளவில் கோவிலும் கட்டப்பட்டு உள்ளது. அதனால், வாய்க்கால் அகலம் சுருங்கியுள்ளது. நாணல் புற்கள் வளர்ந்து இருப்பதால், புதர் மண்டி காணப்பட்டது. இரும்பு தடுப்பு அமைத்து இருப்பதால், துார் வார முடியாத சூழல் காணப்படுகிறது.
நேற்று நொய்யலில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால், பேரூர் படித்துறையில் இரு கரைகளையும் தண்ணீர் தொட்டுச்சென்றது. பாலத்துக்கு மேலே தண்ணீர் செல்லக்கூடிய அளவுக்கு நீர்மட்டம் அதிகரித்ததால், ஆண்டிபாளையம் மதகுகள் திறந்து விடப்பட்டு, உக்கடம் பெரிய குளத்துக்கு திருப்பி விடப்பட்டது.
நீர் வரத்து அதிகரித்து, சேத்துமா வாய்க்கால் கரை உடைந்து, செல்வபுரம் எல்.ஐ.சி., காலனிக்குள் புகுந்தது; 5,000 வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் நீர் சென்றதால், மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடியாக, பொக்லைன் வாகனங்கள் மூலமாக, வாய்க்கால் துார்வாரப்பட்டு, அடைப்புகள் எடுக்கப்பட்டன.
இருப்பினும், இரு கரையை தொட்டவாறு, தண்ணீர் சென்றது. அடைப்புகளை அகற்றி, கழிவு மண்ணை அள்ளி, கரையை பலப்படுத்திய போதிலும், எல்.ஐ.சி., காலனிக்குள் தண்ணீர் செல்வது அதிகரித்த வண்ணம் உள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:கடந்தாண்டு மழை பெய்தபோதும், இதே பிரச்னை ஏற்பட்டது. ஆண்டிபாளையம் மதகை திறந்தால், நீரின் வேகத்துக்கு கரை உடைந்து, எல்.ஐ.சி., காலனிக்குள் வருகிறது. பேரூர் ரோட்டில் இருந்து, சுண்டக்காமுத்துார் ரோடு வரை, சேத்துமா வாய்க்கால் கரையின் இரு புறத்தையும் பலப்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் மட்டும் மாநகராட்சி ஊழியர்கள் வந்து, அடைப்பை அகற்றுகின்றனர். அதன்பின், கண்டுகொள்வதில்லை. அதனால், பாதிப்பு தொடர்கிறது. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாயை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.
பேரூர் படித்துறை பாலத்தை காப்பாற்ற நினைத்து, மதகை திறந்து விட்டதால், செல்வபுரம் எல்.ஐ.சி., காலனி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இடையிலுள்ள தடைகளை அகற்றி, மக்களைக் காப்பது, அரசின் பொறுப்பு.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
14-ஜூன்-201811:31:29 IST Report Abuse
CBE CTZN பொதுமக்களே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசை நம்பி பிரயோசனம் இல்லை... கல்லூரி, பள்ளி களில் இருக்கும் NSS, NCC, RedCross... இது போன்றவர்களிடம் கேளுங்கள், அவர்களோடு இணைந்து நீங்களும் வேலை செய்யுங்கள் ஓரிரு நாட்களில், தடைகள் நீங்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை