சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக கிராமத்தினரிடம் பேச்சு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்காக கிராமத்தினரிடம் பேச்சு

சேலம் - சென்னை, எட்டு வழிச்சாலை திட்ட எதிர்பார்ப்பாளர்களின் நடவடிக்கையை முறியடிக்க, வருவாய்த்துறையினர், போலீசார் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து, நிலம் எடுப்பது தொடர்பாக பேசி வருகின்றனர். இதனால், போராட்டக்காரர்களின் திட்டம் எடுபடாமல் போனது; அவர்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்லாமல் பின்வாங்கினர்.

Chennai,Salem,சென்னை,சேலம்,8 வழிச்சாலை,கிராமத்தினரிடம்,பேச்சு


சேலம் - சென்னை இடையே, 277 கி.மீ.க்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக, எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. சேலத்தில், 36.3 கி.மீ.,ல் அமைய உள்ள இந்த பாதைக்கு, சேலம் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள, 12 கிராமங்கள், மாவட்ட போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள, 17 கிராமங்களின் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இது தவிர அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக பாதை அமைகிறது.

விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, அச்சம் காரணமாக, சேலத்தில் வசிக்கும் வடமாநில வாலிபர், அவரின் ஆதரவாளர்கள், மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்புக்களை

சேர்ந்தவர்கள் விவசாயிகளுக்கு, தவறான தகவல் கொடுத்து, அவர்களை பீதியடையச் செய்தனர்.

ஆச்சாங்குட்டப்பட்டியில் வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டது; அரியனுார் மக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவங்கள் அரங்கேறின. அதன் பின், போலீசார் சுதாரித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தியதோடு, கைது நடவடிக்கையும் மேற் கொண்டதால், பல கிராம மக்கள் பசுமை வழிச்சாலை திட்டத்தின் உண்மை நிலையை உணர்ந்தனர்.

இதில், குறிப்பாக, ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனுார் பகுதி மக்கள், திட்டத்துக்கு முழு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், சேலம் மாவட்ட வருவாய்த்துறையினர்,கிராமங்கள் தோறும் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று அரசின் இழப்பீடு விபரங்களை தெரியப்படுத்தியதால், பல விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதே போல், உள்ளூர் போலீசார், உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், கிராமங்களில் முகாமிட்டு, போராட்டத்தை துாண்டுபவர்களை கண்காணிக்க துவங்கியதால், அவர்களும் பின் வாங்கி விட்டனர். இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தின், 29 கிராமங்களில், 80 சதவீத விவசாயிகள், அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளனர்.

Advertisement

உளவுத்துறை கண்காணிப்பு:


எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு, எதிராக விவசாயிகளை துாண்டி விட்ட, வடமாநில வாலிபர், கடந்த, ஜூன், 9க்கு பின் சேலத்தில், எந்த போராட்டத்தையும் முன்னெடுக்க வில்லை. சென்னையில் இருந்தபடி, மத்திய, மாநில அரசுகளுக்கும், பசுமை சாலை திட்டத்துக்கு எதிராக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

நேற்று அவர், சேலம் மாநகரம், ஏற்காட்டில் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக தகவல்கள் கசிந்தன. உளவுத்துறை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். சேலம் மாவட்ட விவசாயிகளை, வருவாய்த்துறையினர் தங்களின் பக்கம் திருப்பி விட்டதால், வடமாநில வாலிபரின் மூளைச்சலவை எடுபட வில்லை. இதனால், அவர் தன் முகாமை, திருவண்ணாமலைக்கு மாற்ற உள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

-நமது சிறப்பு நிருபர்-


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,இந்தியா
15-ஜூன்-201820:07:18 IST Report Abuse

vnsஇந்த படத்தில் உள்ளதுபோல சாலை அமைப்பு இருக்குமானால் விபத்துக்கள் தான் ஏற்படும் . இடது பக்கம் திரும்பும் சாலை திரும்புவதற்கு முன்னால் முக்கிய சாலையின் நீளம் குறைந்த பக்ஷம் 800 மீட்டர் மூன்றாவது சாலையாக மாறி இடது பக்கம் திரும்ப ஓட்டுநர்களுக்கும் பின்னல் வருபவர்களுக்கும் அவகாசம் கொடுக்க வேண்டும் .. அதேபோல சாலைகள் முக்கிய சாலையில் சேரும்போதும் சேறும்சளாய் குறைந்த பக்ஷம் 800 மீட்டர் தொடர்ந்து முக்கிய சாலையில் மூன்றாவது சாலையாக மாறி சேர்ந்த சாலை ஓட்டுனர்களுக்கு முக்கிய சாலையில் சேர அவகாசம் கொடுக்க வேண்டும். இதொன்றும் இல்லாமல் இதுபோன்ற முட்டாள்தனமான சாலைகள் விபத்துக்களைத்தான் ஏற்படுத்தும்

Rate this:
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-201808:00:14 IST Report Abuse

P R Srinivasanஎங்கெல்லாம் விளை நிலங்கள் பாதிக்கப்படுகிறதோ அங்கு மட்டும் நிலங்களுக்கு மேல் மேம்பாலம் கட்டி விளை நிலம் பாதிக்கப்படுவதை குறைக்கலாம்.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201807:48:13 IST Report Abuse

Cheran Perumalவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. விவசாயம் அழிகிறது என்று கூக்குரலிடும் எவனாவது அரசு கொடுக்கும் இழப்பீடை கொடுத்து அந்த நிலங்களை வாங்கி விவசாயம் செய்யட்டுமே? அதை விட்டு பயனடைபவர்களை தடுப்பது என்ன நியாயம்? தலைமுறையாக வந்த நிலத்தில் விவசாயம் செய்வோமே என்று நானும் ஒருவருடம் முயன்று பார்த்தேன். தண்ணீர் வசதிக்கு குறைவில்லை. ஆனால் உழுதவன் கணக்கு பார்த்தபோது முதலீடு தேறவில்லை என்று விட்டுவிட்டேன். நிலம் இப்போது தரிசாக கிடக்கிறது. பிளாட் போட கேட்கிறார்கள். கொடுக்கக்கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறேன், எனக்கு வேறு வருமானம் இருப்பதால். சிறு துண்டு நிலத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் என்ன செய்வார்கள்?

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
14-ஜூன்-201819:28:02 IST Report Abuse

mindum vasanthamநான் தூத்துக்குடி தொழிற்சாலையை ஆதரித்தேன் இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்

Rate this:
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
14-ஜூன்-201818:43:14 IST Report Abuse

தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்அனைத்து ஆறுகளிலும் உயரமாக தூண்கள் அமைத்து அதன் மீது எத்துணை வழித்தடங்கள் முடியுமோ அத்துணை போடட்டும். அதேபோல இருக்கும் சாலைகளின் மீது தூண்கள் அமைத்து இரண்டு அடுக்கு சாலைகள் அமைக்கலாம் ..அவற்றின் மீதும் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கலாம் .. ஏனோ இந்த மாதிரி யோசனைகள் அரசுக்கு வழங்க படுவதில்லை .. குறிப்பாக இப்போதைய மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களில் அதீத ஆர்வம் காட்டுகிறது.. அதே சமயம் இம்மாதிரி பொது மக்களுக்கு அதிக இடைஞ்சல் இல்லாத , நில கையக படுத்துதல் குறைவாக உள்ள திட்டங்களை செயல் படுத்தினால் கொஞ்சம் பொருட்செலவு அதிகமானாலும் பாதிப்புகள் குறைவு .. எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக போராட்டம் நடத்த மக்களை தூண்டுவோரும் இது போன்ற மாற்று வழிகளை வற்புறுத்தி போராடினால் அவர்களுக்கும் நல்லது ..

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-ஜூன்-201820:13:16 IST Report Abuse

பாமரன்அப்பாடா இந்த காவி கவுண்டன்கிட்ட இருந்து உருப்படியா ஒரு கருத்து......

Rate this:
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
14-ஜூன்-201817:59:40 IST Report Abuse

இடவை கண்ணன் வெள்ளைக்காரன் ரோடு போட்டான் ரயிலு விட்டான்..துபாய், சிங்கப்பூர்ல சாலை எல்லாம் சூப்பர் என சொல்லிக்கிட்டு வாங்க..பிஞ்சிரும்..

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
14-ஜூன்-201814:54:23 IST Report Abuse

கைப்புள்ளஎவனாச்சும் ரோடு வேண்டாம்னா .....

Rate this:
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-201814:39:12 IST Report Abuse

Nalanvirumbiஇந்த திட்டத்தின் வரைவு படத்தை NHAI யில் பார்த்துட்டே தெளிவாக விவாதித்தால் நன்றாக இருக்கும். இந்த சாலை ஏற்கனவே உள்ள சாலையை விரிவு படுத்தும் திட்டமல்ல. புதிய எட்டு வழி சாலை சென்னையிலிருந்து நேராக சேலம் செல்ல காடு மலை எதுவாக இருப்பினும் அழித்து அதன் வழியே செல்வது. இது பெரும்பாலான காடுகளையே அழிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நம்பேடு காடு, அல்லியாளமங்கலம் காடு, செங்கம் காடு, கிழக்கு தொடர்ச்சி மலையை குடைவது, பின் சேலம் சென்றடைவது. சேலம் செல்ல ஏற்கனவே மூன்று வழித்தடம் உள்ளபோது நான்காவது எதற்கு? எட்டு வழி சாலை அமைய உள்ள வழித்தடத்தில் ஏற்கனவே சாலை உள்ளபோது தனியாக என்? வழி ஒன்று: சென்னை -செங்கல்பட்டு -திண்டிவனம் -கள்ளக்குறிச்சி -சேலம், இரண்டு : சென்னை - வேலூர் -தருமபுரி- சேலம், மூன்று: சென்னை-மாமண்டூர்-உத்திரமேரூர்-வந்தவாசி -திருவண்ணாமலை -செங்கம் -அரூர் -சேலம். இந்த மூன்றாவது வழித்தடம் பக்கத்தில்தான் நேராக எட்டு வழி சாலை அமைய உள்ளது. இந்த மூன்றாவது வழித்தடத்தை விரிப்படுத்தினாலே போதும் அதே நேரத்தில் சேலம் செல்லலாம், இதுதான் மிக குறைந்த தொலைவு. அப்படி இருக்க ஏன் பத்தாயிரம் கோடி செலவில் தனியாக சாலை? சேலத்திலிருந்து கொண்டு வர என்ன இருக்கிறது? இந்த சாலை எடப்பாடிக்கா இல்லை சேலம் மக்களுக்கா? நான்காயிரத்து ஏழு நூறு ஏக்கர் விளை நிலங்களை அழிப்பதால் ஏக்கருக்கு எழுபது மூட்டை என்று கணக்கிட்டால் கூட மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மூட்டை நெல் ஒரு போகத்திற்கு இழக்கிறோம். வருடத்துக்கு மூன்று பாகம் எனில் வருடத்துக்கு பனிரெண்டு லட்சம் மூட்டை நெல் இழப்பு. காட்டு வளம் அழிப்பு. நூறுக்கணக்கான உயிரினங்கள் அழியும் அபாயம் . சமமற்ற உயிர் மண்டலம் உருவாகும். கிழக்கு தொடர்ச்சி மலையை குடைந்தால் வடகிழக்கு பருவ மழை பொழியாது. சென்னை, கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதே திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் தான். இனி எடப்பாடி உட்பட பிளாஸ்டி அரிசி சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியதுதான். சேலத்திலிருந்து வேகமாக சவ்வரிசி, மரவள்ளி கிழங்கு பசுமை வழி சாலை வழியாக கொண்டு வரலாம் சென்னை மக்களுக்காக . இந்த மாவட்டங்களுக்கு அடிப்படை தேவை நல்ல மருத்துவ மனை, நல்ல பள்ளிக்கூடம், கல்லூரிகள். இந்த மாவட்டங்களில் வாழ்பவர்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களை நம்பியே உயிர் வாழ்பவர்கள், வேறு தொழில் தெரியாது இவர்கள் இழப்பீடு வாங்கிக்கொண்டு நேராக டாஸ்மாக் செல்ல வேண்டியதுதான். இந்த டெண்டர் எப்படியும் சேகர் ரெட்டிக்கு தான் கிடைக்கும் கமிஷன் நாற்பது சதவீதம் பேசி முடிக்கப்பட்டது... இவ்வளவு அக்கறை காட்டும் எடப்பாடி அரசு ஏன் எய்ம்ஸ் மருத்துவ மனையை இழுத்தடிக்கிறது ? வாழ தகுதியில்லாத நகரமாக சென்னை பிதுங்கி வழிகிறது. சென்னைக்கு நிகராக ஏன் மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர் போன்ற நகரங்களை வளர வைக்கக்கூடாது? வரும் டிசம்பரில் வெள்ளம் வந்தால் சென்னை நிலைமை தெரியும் மேலும் இயற்கை எவ்வளவு வலுவானது என்று புரியும் . இவர்கள் வளர்ந்த நாடுகளை பார்த்தால் தெரியும் எல்லா நகரங்களும் கட்டமைப்பு மற்றும் கல்வி, மருத்துவ வசதியில் ஒரே மாதிரிதான் இருக்கும்..என்ன செய்வது தமிழனின் நெலமை யாருக்கோ போட்ட ஒட்டு இங்கு எடப்பாடி தட்டில் விழுந்தது அதிஷ்டம்.....

Rate this:
Meenu - Chennai,இந்தியா
14-ஜூன்-201814:10:23 IST Report Abuse

Meenuஇது போல, திருச்சி-சென்னை, திருச்சி-மதுரை சாலைகளையும் 8 வழி சாலைகளாக மாற்றவேண்டும்.

Rate this:
RGK - Dharapuram,இந்தியா
14-ஜூன்-201814:52:56 IST Report Abuse

RGKஇதை செய்தால் போதும்.இதை விட்டுவிட்டு புது சாலை போடுவது நல்ல முடிவல்ல...

Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
14-ஜூன்-201814:06:13 IST Report Abuse

Thalaivar Rasiganவடமாநில வாலிபனை தூக்கி ரெண்டு வருஷம் உள்ளே வைங்க. அவனை பத்தி ஒரு ஆர்டிகிள் படித்தேன். நல்லா சம்பாரிக்கிறான். இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட மாச சம்பளத்தில் ஆள் எடுக்க விளம்பரம் கூட செய்தான்.

Rate this:
மேலும் 69 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement