உயிர் காக்கும் உயரிய தானம்; இன்று உலக ரத்த தான தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்கும் உயரிய தானம்; இன்று உலக ரத்த தான தினம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
உயிர் காக்கும் உயரிய தானம்; இன்று உலக ரத்த தான தினம்

ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 14ல், உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'யாரோ ஒருவருக்காக உதவுங்கள்; ரத்தம் தானம் செய்யுங்கள்; வாழ்க்கையை பகிருங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

எதிர்பாராத விபத்து, மகப்பேறு, ஆப்பரேஷன், நோய் போன்ற ஆபத்தான சூழல்களில் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. இன்னொருவர் தானம் செய்தவன் மூலம் மட்டுமே, ரத்தம் பெற முடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்றாக எதுவும் கண்டறியப்படவில்லை.


யார் வழங்கலாம்:

நல்ல உடல்நிலையில் உள்ள 18- 60 வயதுக்குள் உள்ள எவரும் ரத்ததானம் செய்யலாம். உடலின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ரத்ததானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின், ரத்த தானம் செய்ய வேண்டும்.


ஏன் தயக்கம்?

பயம் மற்றும் நோய் உருவாகும் என்ற தவறான எண்ணமே இந்தியாவில் மக்கள் ரத்த தானம் செய்ய தயங்குவதற்கு காரணம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வதன் மூலம் எச்.ஐ.வி., உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என தவறாக நினைப்பதால், தானம் செய்ய தயங்குகின்றனர். தானம் செய்த ரத்தம், இரண்டே மாதங்களில் 100 சதவீதம் மீண்டும் உற்பத்தியாகி விடும். ரத்த தானம் செய்வது பல வழிகளிலும் உடலுக்கு நன்மை அளிக்கும்.


11.25

உலகளவில் ஆண்டுக்கு 11.25 கோடி பேர் ரத்த தானம் செய்கின்றனர். இதில் பாதி, அதிக வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள்.


1

தானாக விரும்பி ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை, 2008ல் இருந்து 2013ல், ஒரு கோடி அதிகரித்துள்ளது


32

ஆயிரம் பேரில், அதிக வருமானம் உடைய நாடுகளில் 32 பேர் ரத்ததானம் செய்கின்றனர். நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் 15, ஏழை நாடுகளில் 5 ஆக உள்ளது.


3

தானாக முன்வந்து இலவசமாக வழங்குதல், உறவினர்களுக்காக வழங்குதல், பணத்துக்காக வழங்குதல் என 3 வழிகளில் ரத்ததானம் வழங்கப்படுகிறது.


57

57 நாடுகள் 100 சதவீதமும் இலவச ரத்ததானம் மூலம் சேகரிக்கிறது. 74 நாடுகள் 90 சதவீதம் இலவச ரத்ததானத்தை சேகரிக்கிறது.


13,000

உலகின் 176 நாடுகளில் 13,000 ரத்த மையங்கள் மூலம் 11 கோடி பேர் ரத்த தானம் செய்துள்ளனர்.


100

வரும் 2020க்குள் அனைத்து நாடுகளும், தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்கள் மூலமே 100 சதவீதம் ரத்தத்தை பெற வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


30

ரத்ததானம் செய்பவர்களில், 30 சதவீதம் பேர் பெண்கள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை