கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப மாநகராட்சி பரிந்துரை..! பாசனத்திற்கு வைகை அணை திறக்க வாய்ப்பு| Dinamalar

தமிழ்நாடு

கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப மாநகராட்சி பரிந்துரை..! பாசனத்திற்கு வைகை அணை திறக்க வாய்ப்பு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கண்மாய்களில் தண்ணீர் நிரப்ப மாநகராட்சி பரிந்துரை..! பாசனத்திற்கு வைகை அணை திறக்க வாய்ப்பு

மதுரை பாசனத்திற்காக வைகை அணையை திறக்க வாய்ப்புள்ளதால் மதுரை நகரிலுள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்புவதற்கான ஏற்பாடுகளை எடுக்க வேண்டும் என பொதுப் பணித்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்வதால் நீர்மட்டம் 126 அடியை கடந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்புள்ளதால், அதிக தண்ணீர் வைகை அணைக்கு திறக்கப்படும். வைகை அணையின் நேற்றைய நீர்மட்டம் 37.57 அடி. நீர்வரத்து 1070 கனஅடி. கடந்தாண்டு இதே நாளில் 24.18 அடி தண்ணீர் இருந்தது. தற்போது வைகை நீர்பிடிப்புகளிலும் அடிக்கடி மழை பெய்கிறது. இதனால் பாசனத்திற்காக வைகை அணையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரைக்கு குடிநீர் பிரச்னை வராது என்பதால் அணையை திறக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: இரு மாதங்களுக்கு முன் குடிநீருக்காக வைகை அணை திறக்கப்பட்ட போது ராமநாதபுரம் வரை தண்ணீர் சென்றது. அப்போது கண்மாய்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தற்போது பாசனத்திற்காக அணை திறக்கப்பட உள்ளது. குறிப்பாக மதுரை நகரில் உள்ள வண்டியூர், மாடக்குளம், முத்துப்பட்டி கண்மாய்களில் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இக்கண்மாய்களில் தண்ணீர் தேக்கினால் மாநகராட்சி வழங்கும் நீரின் அளவு குறையும். இதுகுறித்து பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X