பாட புத்தகம் விற்பனையில் குளறுபடி 'ஆன்லைன்' திட்டமும், 'பணால்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாட புத்தகம் விற்பனையில் குளறுபடி 'ஆன்லைன்' திட்டமும், 'பணால்'

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 பாட புத்தகம் விற்பனையில் குளறுபடி 'ஆன்லைன்' திட்டமும், 'பணால்'

பாடப்புத்தக விற்பனையில், சரியான திட்டமிடல் இல்லாததால், பெற்றோர் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை, தமிழ்நாடு பாடநுால் கழகம் அச்சடித்து, வினியோகம் செய்கிறது.இந்த ஆண்டு, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த பாடத்திட்டத்தின்படி, புதிய புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பல பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பல பள்ளிகள், பாடநுால் கழகத்திற்கு மொத்தமாக, 'ஆர்டர்' செய்து, பிளஸ் 1 புத்தகங்கள் வராமல், காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை, டி.பி.ஐ., வளாகம் மற்றும் அண்ணா நுாலக புத்தக விற்பனை மையங்களில், ஒவ்வொரு பெற்றோரும், இரண்டு மணி நேரத்துக்கும் மேல், வரிசையில் காத்து நின்று, புத்தகம் வாங்க வேண்டியுள்ளது. வரிசையில் காத்திருந்து சென்றாலும், கவுன்டர் அருகில் செல்லும் போது, 'புத்தகம் இருப்பு இல்லை' எனக் கூறி, திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலும், ஆன்லைன் வழியாக புத்தகம் பெறுவதிலும் சிக்கல் உள்ளதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து, பெற்றோர் கூறியதாவது:'ஆன்லைன் வழியாக புத்தகம் வாங்கலாம்' என, பாடநுால் கழகம் அறிவித்து உள்ளது. ஆனால், ஆன்லைனில், 2017ல், புத்தகம் வாங்கியோருக்கு, இந்த ஆண்டு, அடுத்த வகுப்புக்கான புத்தகத்தை வாங்க முடியாமல், 'லாக்' செய்யப்பட்டுள்ளது.
ஒருவருக்கு, மூன்று பிள்ளைகள் இருந்தால், அவர்களில் ஒருவருக்கு, ஓராண்டு மட்டுமே, ஏதாவது, ஒரு வகுப்பிற்கு பதிவு செய்து, புத்தகம் வாங்க முடிகிறது.அடுத்த ஆண்டு, அடுத்த வகுப்பு வந்தால், அதை பதிவு செய்ய, பாடநுால் கழக இணையதளத்தில் வசதி இல்லை.மிக பழமையான தொழில்நுட்பத்தில், பாடநுால் கழக ஆன்லைன் முறை உருவாக்கப்பட்டு உள்ளதே இந்த சிக்கலுக்கு காரணம்.
தமிழக பள்ளிக்கல்வி துறை, விரைந்து இந்த குழப்பங்களை தீர்த்து, கூடுதல் கவுன்டர்கள் திறந்து, புத்தகங்களை விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூன்-201811:15:11 IST Report Abuse
Pugazh V ஆகா ஆகா..திமுக வை திட்ட ஒரு சான்ஸ் வாங்க வாங்க. என்னது, ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக என்ன செய்யும் என்கிறீர்களா? அதனால் என்ன எதுக்கெடுத்தாலும் திமுக வை திட்டுவது தானே இப்போதைய ஸ்டைல்.
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
14-ஜூன்-201805:07:18 IST Report Abuse
Ray மக்களுக்கு டார்ச்சர் கொடுக்காத மக்கள் நலத் திட்டமா? மக்களுக்கு இப்படியெல்லாம் டார்ச்சர் கொடுக்க வழி இருப்பதை புத்திசாலிகள் அரசு பறைசாற்றுகிறது இதெல்லாம் தெரியாமல்தானே தோற்றுப் போனார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை