யானைகள் வருகையை தடுக்க அரசு நடவடிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

யானைகள் வருகையை தடுக்க அரசு நடவடிக்கை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''தேனி மாவட்டத்தில், யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, வனத்துறை அமைச்சர், சீனிவாசன் தெரிவித்தார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - நல்லதம்பி: வேலுார் மாவட்டம், திருப்பத்துார் தொகுதி, ஜவ்வாதுமலை நடுக்குப்பம் முதல், விளாங்குப்பம் வரை உள்ள மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர், சீனிவாசன்: தார் சாலை அமைக்க, கூடுதல் வன நிலம் தேவை. அதற்கு, மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். எனவே, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில், சாலை அமைக்கும் துறையின் கருத்துருவை பதிவேற்றம் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அ.தி.மு.க., - ஜக்கையன்: தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில், பல கிராமங்கள் உள்ளன. அங்கு யானைகள், விவசாய நிலத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்து கின்றன. சமீபத்தில், யானை தாக்கி, சேகர் என்பவர் இறந்தார்.அவருக்கு உடனடி நிவாரணமாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும். யானைகள் வருவதை தடுக்க வேண்டும்.அமைச்சர், சீனிவாசன்: நிவாரணம், விரைவில் வழங்கப்படும். யானைகள் வராமல் தடுக்க, அகழி வெட்டுவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X