'கீழடி அகழாய்வு தொடரும்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கீழடி அகழாய்வு தொடரும்'

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''கீழடி அகழாய்வால், 5,000 தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன; ஆய்வு தொடரும்,'' என, தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறினார்.சட்டசபையில், தி.மு.க.,வைச் சேர்ந்த, கிரி பேசுகையில், ''கீழடி அகழ்வாய்வில், பல தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டன. பின், இப்பணிகளின் நிலை குறித்து தெரியவில்லை. அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும். திறமையான அதிகாரியை நியமித்து, மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும்,'' என்றார்.இதற்கு பதில் அளித்து, தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் கூறியதாவது:கீழடியில், மூன்று முறை நடந்த அகழாய்வு பணிகளில், 5,000க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பொருட்களை வைத்து, அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
கீழடி அகழாய்வுப் பணிகள் தொடரும். இதனால், தமிழின் தொன்மையை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டப்படும். மதுரையில், அழகிய நீரூற்றுடன், தமிழ் அன்னைக்கு சிலை வைக்கும் பணிகள், விரைவில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூன்-201808:10:05 IST Report Abuse
Bhaskaran கீழடி அகழ்வாய்வை வீடியோ பதிவு செய்தால் தொல்சின்னங்களை யாரும் மாற்றமுடியாதவாறு செய்யலாம் ஏனெனில் தமிழனின் தொன்மையை அழியாமல் மீட்டெடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை