அன்னதான கூடமாக மாற்றாதீங்க! தி.மு.க., வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்னதான கூடமாக மாற்றாதீங்க! தி.மு.க., வேண்டுகோள்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:''கோவில்களில் அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டாம்; இதனால், கோவில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பெரியகருப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பெரியகருப்பன்: அறநிலையத் துறையில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, தி.மு.க., ஆட்சியில், முதல்வர் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.இக்குழுவில், துறை அமைச்சர், அதிகாரிகள், மடாதிபதிகள் இடம்பெற்று இருந்தனர். அந்தக் குழு, தற்போது உள்ளதா எனத் தெரியவில்லை.கோவில் பணிகளை கவனிக்க, அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. 2012க்கு பின், அறங்காவலர் குழு அமைக்கப்படவில்லை.
அறநிலையத் துறை ஆணையர் பதவி, அமைச்சரை விட அதிகாரம் மிகுந்தது. ஆணையராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே நியமிக்கப்பட்டனர். 2012ல், ஐ.ஏ.எஸ்., அல்லாதவர், ஆணையராக நியமிக்கப்பட்டார்.
அவர் ஓய்வுபெற்ற பிறகும், பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு, பாதியில் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். இதிலிருந்து, இத்துறையை, அரசு முறையாக கையாளவில்லை என்பது தெரிகிறது.கோவில்களில், அன்ன தானம் வழங்கும் திட்டத்தை, முதலில், 360 கோவில்களில் துவக்கினீர்கள். அதன்பின், 1,000 கோவில்களுக்கு விரிவுப் படுத்தி உள்ளீர்கள்.
இத்திட்டத்தால், கோவில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கோவிலை உணவுக்கூடமாக மாற்ற வேண்டாம். அன்னதான திட்டத்தை, மேலும் விரிவுப்படுத்த வேண்டாம்.தி.மு.க., ஆட்சியில், சோளிங்கர் நரசிம்ம பெருமாள் கோவில், கரூர், அய்யன்மலை கோவிலுக்கு, 'விஞ்ச்' அமைக்க, நிதி ஒதுக்கப்பட்டது; இன்னும், பணி நிறைவு பெறாமல் உள்ளது.
அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்: இரண்டு கோவில்களிலும், 'விஞ்ச்' அமைக்கும் பணி, 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது; விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.கோவில்களில், அன்னதானம் வழங்கும் திட்டத்தை, ஜெ., துவக்கினார். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த திட்டத்தை விரிவுப்படுத்தவில்லை. மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி வந்ததும் விரிவுப்படுத்தப்ட்டது.
பெரியகருப்பன்: விலைவாசி உயர்தபடி இருக்கிறது. எனவே, பணிகளை விரைவாக முடியுங்கள். பணிகளை தாமதப்படுத்தும்போது, கூடுதல் செலவு ஏற்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், அரளிக்கோட்டை, சோழீஸ்வரர் கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்ட, தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, பணி துவக்கப்பட்டது. தற்போது, பணி நடக்கவில்லை.அமைச்சர், ராமச்சந்திரன்: 'டெண்டர்' விடப்பட்டு, 20 சதவீதப் பணிகள் முடிந்தன. அதன்பின், ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர்.மீண்டும் திருத்த மதிப்பீடு தயார் செய்து, டெண்டர் விட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரியகருப்பன்: அந்த கோவிலுக்கு, முதலில், 30 லட்சம் ரூபாயில், மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. தற்போது, 42 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுஉள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள், பணியை முடிக்காததால், 10 லட்சம் ரூபாய் கூடுதல் செலவாகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் பகுதியில் பிறந்த, கணியன் பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-ஜூன்-201815:34:23 IST Report Abuse
Vijay D Ratnam திரு.பாஸ்கரன், சென்னை சொல்வது போல கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் தரமாக கொஞ்சம் தாராளமாக வழங்கினால் போதும். அன்னதானம் கிடைக்கும் என்று வருபவர்கள் அதிகம் ஏழ்மை நிலையில் இருக்கும் முதியோர்கள், அவர்கள் பெரும்பாலும் உணவு கிடைக்கும் என்பதற்காக தினம் வருபவர்கள். பாவம் அதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்யலாம். அதே சமயம் எருமை மாடு மாதிரி திடமாக இருந்துக்கொண்டு எந்த வேலைக்கும் போகாமல் தினம் வந்து சாமி தரிசனம் எதுவும் செய்யாமல் நேராக வந்து அன்னதானம் சாப்பிடும் சிறுவயதுக்காரர்களும் இருக்கிறார்கள். அந்த சோம்பேறிகளை தடுக்கவேண்டும். எதுவும் உரியவர்களுக்கு சென்று சேர்ந்தால்தான் பலன்.
Rate this:
Share this comment
Cancel
Vijaya Raghav - chennai,இந்தியா
14-ஜூன்-201813:56:30 IST Report Abuse
Vijaya Raghav இவனுடைய தண்டையார் ஆரம்பித்த இந்த கொள்ளை வங்கி இந்த அறநிலையத்துறை ஆகையால் இவனுக்கு தெரியும் யார் யார் கொள்ளை அடிக்கிறார்கள் என்று. அதில் இவனுக்கு பங்கு கொடுப்பதில்லை அந்த ஆதங்கம் இப்படி வெளிப்படுகிறது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூன்-201806:43:01 IST Report Abuse
Bhaskaran கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தரிசனம் முடிந்ததும் ஏதேனும் பிரசாதம் வழங்கினாலேபோதும் அன்னதானம் சோம்பேறிகளை உருவாக்குகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X