நீதிமன்ற கட்டடம், குடியிருப்புகள் 11 மாவட்டங்களில் கட்ட திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற கட்டடம், குடியிருப்புகள் 11 மாவட்டங்களில் கட்ட திட்டம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:''தமிழகத்தில், 11 மாவட்டங்களில், நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:* கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டியில் உள்ள, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்திற்கு, இரு சக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 4.52 கோடி ரூபாயில் கட்டப்படும்.* பத்மநாபபுரத்தில், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், 83 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்* ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 6.85 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்* கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள, ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்தின் மேல்தளங்களில், சார்பு நீதிமன்றம், கூடுதல் குற்றவியல் நடுவர் மன்றங்களுக்கு, கூடுதலாக, இரண்டு அறைகள் மற்றும் அலுவலகம், 3.20 கோடி ரூபாயில் கட்டப்படும்* தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு, உணவகம், வாகன நிறுத்தத்துடன் கூடிய, இரண்டு குடியிருப்புகள், 6.67 கோடி ரூபாயில் கட்டப்படும்* விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டடம், சைக்கிள் நிறுத்தம், வாகன நிறுத்தம், உணவகம், பொது கழிப்பிடம், சுற்றுச்சுவருடன் கூடிய குடியிருப்பு ஆகியவை, 8.29 கோடி ரூபாயில் கட்டப்படும். கள்ளக்குறிச்சியில், விரைவு நீதிமன்ற நீதிபதிக்கான குடியிருப்பு கட்டப்படும்* திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 5.25 கோடி ரூபாயில் கட்டப்படும்* தர்மபுரி மாவட்டம், அரூரில், சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், 1.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்* திருச்சி மாவட்டம், துறையூரில், சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டப்படும்* திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆறு நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், 3.80 கோடி ரூபாயில் கட்டப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை