கர்நாடகா இடைத்தேர்தல் காங்., வேட்பாளர் வெற்றி| Dinamalar

கர்நாடகா இடைத்தேர்தல் காங்., வேட்பாளர் வெற்றி

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜெயநகர்:கர்நாடகாவில், ஜெயநகர் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, சட்டசபையில், காங்கிரசின் பலம், 79 ஆக உயர்ந்துள்ளது.கர்நாடகாவில், முதல்வர், குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரு ஜெயநகர் சட்டசபை தொகுதி, பா.ஜ., வேட்பாளராக இருந்த விஜயகுமார், திடீரென இறந்ததால், மே, 12ல் நடக்கவிருந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு, இம்மாதம், 11ல் நடந்தது.பா.ஜ.,வின் பிரஹலாத் பாபு, காங்கிரசின் சவும்யா ரெட்டி உட்பட, 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ம.ஜ.த., போட்டியிலிருந்து விலகி, காங்கிரசுக்கு ஆதரவளித்தது.இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. முதல் சுற்றிலிருந்தே, காங்கிரஸ் வேட்பாளர் சவும்யா ரெட்டி, முன்னிலை வகித்தார். 10வது சுற்றிலிருந்து, பா.ஜ., வேட்பாளர் முன்னிலை வகித்தார்.இறுதியில், காங்., வேட்பாளர் சவும்யா ரெட்டி, பா.ஜ.,வை வேட்பாளரை விட, 2,887 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார். ஜெயநகரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம், 79 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
14-ஜூன்-201816:00:25 IST Report Abuse
I love Bharatham காங்கிரஸ் காரன் கள்ள வோட்டு போட்ருக்கான்.....எதை அளிதினாலும்....காங்கிரஸ் தான் வருதாம்......இப்படியே கூப்பாடு போற்று ஜெயித்த வெற்றி எல்லாம் ....வெற்றியா?
Rate this:
Share this comment
Cancel
Ramanathan Balakrishnan - chennai,இந்தியா
14-ஜூன்-201812:05:16 IST Report Abuse
Ramanathan Balakrishnan ஓட்டிங் மிஷினை வைத்து இந்த வெற்றியை பெற்றனரா?
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
14-ஜூன்-201808:59:16 IST Report Abuse
Milirvan மற்ற கட்சிகள் கூடி பிஜேபியை எதிர்க்கின்றன.. பிஜேபியை எதிர்க்கிறோம் என்கிற பேனரில் உண்மையில் ஹிந்துவிரோத நடவடிக்கைகளை, ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகளை ஒன்றிணைக்கின்றன.. இதனை ஒட்டுமொத்த ஹிந்து மஹாஜனங்களும் உணர்ந்து கொள்ளும் நாள்.. ஒருமுகப்படும் நாள்.... வெகு தொலைவிலில்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X