'எய்ம்ஸ்' வளாகத்தில் மாணவன் தற்கொலை| Dinamalar

'எய்ம்ஸ்' வளாகத்தில் மாணவன் தற்கொலை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாட்னா:பாட்னாவில் உள்ள, 'எய்ம்ஸ்' வளாகத்தில், 10ம் வகுப்பு மாணவன், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்னாவில் உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில், டாக்டர்கள் குடியிருப்பு உள்ளது.அந்த குடியிருப்பில் வசிக்கும், 10ம் வகுப்பு மாணவன், தன் வீட்டு படுக்கையறையில், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான்.அவனது உடலை கைப்பற்றிய போலீசார், இது குறித்து விசாரித்ததில், அவன், தன்னை தானே, துப்பாக்கியால் சுட்டு, தற் கொலை செய்தது தெரிய வந்தது.இவனது தந்தை, எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். 10ம் வகுப்பு மாணவனுக்கு, துப்பாக்கி எப்படி கிடைத்தது என, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை