Cabinet approves Dam Safety Bill | அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar

அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அணைகள் பாதுகாப்பு, மத்திய அமைச்சரவை , பிரதமர் மோடி,  தேசிய அணை பாதுகாப்பு ஆணையம், அணை பாதுகாப்பு மாநில குழு, 
Dams Security, Union Cabinet, Prime Minister Modi, National Dam Safety Commission, Dam Safety State Committee,

புதுடில்லி: அணைகள் பாகாப்புக்கு சட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் இந்தியாவில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற உள்ளது. இந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு வழிவகுக்கும். மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு, மேலும் அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை அமைக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
14-ஜூன்-201815:21:47 IST Report Abuse
Jaya Ram வேறொன்றும் இல்லை கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி அமைந்திருந்தால் இந்த பேச்சுக்கே இடமிருந்திருக்காது ஏனென்றால் இப்போ காவேரி ஆணையத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிய கர்நாடக அரசு மறுக்கும் பட்சத்தில் இந்த புதிய சட்டத்தின் மூலம் அணை பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் அல்லவா? இரண்டாவது பெரியாறில் நியூட்ரினோ திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதில் பிரச்சினை வரக்கூடாது அல்லவா இதையெல்லாம் யோசித்தே இப்போ இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது எல்லாம் சரிதான் நல்லனவற்றினை ஆதரிக்கும் அதேசமயத்தில் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தினையும் மத்திய அரசு தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு அவற்றினை அடிமைகள் போல் நடத்தும் சர்வாதிகாரம் தான் வெறுக்க வைக்கிறது
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201811:32:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அதாவது சுதந்திரம் அடைந்து இதனை வருடங்கள் ஆனபின்பும் இப்போதுதான் தேவையான சட்டங்கள் வருகிறது , தேவை அற்ற சட்டங்கள் ஒழிக்கப்படுகிறது. இதற்குத்தான் ஒரு நல்ல தலைவன் வேண்டும் என்பது.
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
14-ஜூன்-201813:36:03 IST Report Abuse
JIVANபோதும்யா உன் சலங்கை சத்தம் தாங்கமுடியால...
Rate this:
Share this comment
14-ஜூன்-201815:46:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஜீவன் , உன்னுடைய ஜால்ரா சத்தம் கூட தாங்கமுடியவில்லை. ஓடி விடேன்....
Rate this:
Share this comment
Raman - kottambatti,இந்தியா
14-ஜூன்-201818:17:19 IST Report Abuse
Ramanஅது அந்த மாட்டு கழுத்தில் உள்ள சங்கு சத்தம் ......
Rate this:
Share this comment
Cancel
RR Iyengar - Bangalore,இந்தியா
14-ஜூன்-201809:25:34 IST Report Abuse
RR Iyengar திருட்டு கும்பல் வெறும் வாயவே மெல்லும், இதுல இப்ப அவல் வேற கிடைச்சிருக்கு ... ஏன்டா நாட்டுக்கு நல்லது செய்யவே விடமாட்டீங்களாடா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X