மறைமலை அடிகள் பெயரில் விருது அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறைமலை அடிகள் பெயரில் விருது அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:''மறைமலை அடிகள் மற்றும் அயோத்திதாச பண்டிதர் பெயர்களில், புதிய விருது வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், பாண்டியராஜன் அறிவித்தார்.சட்டசபையில், அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:தமிழகத்தில், 'டிரிப்ளிகேன்' எனப்படும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட ஊர் பெயர்களை, தமிழ் உச்சரிப்பை போன்று, ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்த, ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகால் சோழன் கலையரங்கம், நான்கு கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். பசுமையான கட்டடங்கள், 3.50 கோடி ரூபாய் செலவில் பாதுகாக்கப்படும். பல்கலை வளாகத்திற்கு, 1.65 கோடி ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் அமைக்கப்படும். பல்கலை நுாலகம், 50 லட்சம் ரூபாய் செலவில், மின்னணு நுாலகமாக மாற்றி அமைக்கப்படும்.மறைமலை அடிகள் மற்றும் அயோத்திதாச பண்டிதர் பெயர்களில், புதிய விருது வழங்குவதற்கு, ஆண்டுதோறும், தலா, 1.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். தமிழ் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, 3,000 ரூபாயில் இருந்து, 3,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய நுால்களை, 'டிஜிட்டல்' வடிவமாக மாற்ற, 39.34 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மதுரை, உலக தமிழ் சங்கத்தில், வாரந்தோறும் தமிழ்க்கூடல் என்ற பெயரில் கூட்டம் நடத்த, ஆண்டுக்கு, ஆறு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.வெளிநாட்டு தமிழ் படைப்புகள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில், மதுரை உலக தமிழ் சங்கத்தில் ஆவணப்படுத்தப்படும்.தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்பில், 22 லட்சம் ரூபாய் செலவில், மியான்மர், தென் ஆப்ரிக்கா நாடுகளில், தமிழ் பண்பாட்டு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.சென்னை பல்கலைக்கழகத்தின் இணைவகமான, மெரினா வளாகத்தில், தொல்காப்பியர் சிலை, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். முனைவர் தமிழ்குடிமகன், மேலாண்மை பொன்னுசாமி, முனைவர் சவுரிராஜன் ஆகியோரின் நுால்களை, நாட்டுடைமை செய்வதற்கு, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்.வெளிநாட்டு அறிஞர் களின் சிறந்த நுால்களுக்கு, பரிசு வழங்க, 2.40 லட்சம் ரூபாய் செலவிடப்படும். உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அரிய வகை ஓலைச்சுவடிகளை, டிஜிட்டல் மயமாக்க, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்.அன்றாட பயன்பாட்டில் உள்ள, பிற மொழி சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் தொகுக்கப்பட்டு, நுாலாக வெளியிடப்படும். வயது முதிர்ந்த தமிழ் அறிஞர் உதவித்தொகை திட்டத்தில், ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுபவர் எண்ணிக்கை, 100 ஆக உயர்த்தப்படும். இதற்காக, 15.60 லட்சம் ரூபாய், கூடுதலாக ஒதுக்கப்படும்.வெளிநாட்டு தமிழ் இதழ்கள், மின்னிதழ்கள், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் ஆவணப்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூன்-201809:35:25 IST Report Abuse
Bhaskaran தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகள் பெயரில் விருது வழங்குவது மகிழ்ச்சிக்குரியது அவரின் வீட்டை நன்குபராமரிக்க அரசு செலவிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை