வன்முறையை தூண்டினால் நடவடிக்கை அரசியல் பிரமுகர்களுக்கு ஐ.ஜி., எச்சரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்முறையை தூண்டினால் நடவடிக்கை அரசியல் பிரமுகர்களுக்கு ஐ.ஜி., எச்சரிக்கை

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கடலுார்:'பஸ் மற்றும் டாஸ்மாக் கடைகள் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபடுமாறு, தொண்டர் களை துாண்டி விடும் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வடக்கு மண்டல, ஐ.ஜி., ஸ்ரீதர் கூறினார்.
உளுந்துார்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடிய வழக்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த 22ம் தேதி, கைது செய்யப்பட்டார். பின், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து, கடலுார் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை, த.வா.க.,வினர் நடத்தி வருகின்றனர்.
பஸ்கள் மீது கல் வீச்சு, தீ வைப்பு, டாஸ்மாக் கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடலுாருக்கு நேற்று வந்த, வடக்கு மண்டல, ஐ.ஜி., ஸ்ரீதர், மாவட்டத்தில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைத்து பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:மாவட்டத்தில் அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதை தடுப்பதற்கு, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் மற்றும் பஸ்களை எரிக்க முயன்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, இதுவரை, 23 பேரை கைது செய்துள்ளோம்; மேலும், சிலரை தேடி வருகிறோம். இதற்காக, எஸ்.பி., தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுஉள்ளது.
வன்முறை சம்பவங்களுக்கு தொண்டர்கள் மட்டுமே காரணம் இல்லை. சம்பவம் தொடர்ந்தால், அவர்களை துாண்டி விடும் பிரமுகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ஐ.ஜி., ஸ்ரீதர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriman - Chennai,இந்தியா
14-ஜூன்-201815:55:12 IST Report Abuse
Sriman ஐஜி சார், தப்பு உங்க மேலதான். நீங்க இவிங்கள உள்ள கொண்டு போய் வச்சி நல்லா வக்கணையா வேளாவேளைக்கு சோறு போட்டு அனுப்பினால் இவிங்களுக்கு பயம் எப்படி சார் வரும். இந்தமாதிரி ரெளடித்தனம் செய்துவிட்டு ஜெயிலுக்கு ஒருத்தன் வந்தால் அவனை நீங்க கவனிக்கும் விதத்தில் அடுத்து அவன் ஜெயில் இருக்கும் திசையை பார்த்தால் கைகால்கள் நடுங்கவேண்டும். போலீஸ், கோர்ட், ஜெயில் என்று நினைத்தாலே உதறல் எடுக்கவேண்டாமா? அப்டி கவனிச்சு அனுப்பினீங்கன்னா இந்த துண்டு துக்கடா அரசியல்வியாதிகள் கூட போய் எவனாவது பொறுக்கித்தனம் செய்வானா, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிப்பானா. பஸ்ஸ கொளுத்துவாய்ங்க, டோல்கேட்ட உடைப்பாய்ங்க, டாஸ்மாக்ல புகுந்து பொருட்களை தூக்கிட்டு போவாய்ங்க, விட்டால் அடுத்து ஏடிஎம் மெஷினை உடைப்பாய்ங்க, பெட்ரோல்பங்க், ஜுவல்லரி, பேங்க்ல கூட பூந்துடுவாய்ங்க. தப்பு உங்க மேல சார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை