தமிழகத்துக்கு தீங்கு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு தீங்கு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில், பலர், தமிழகத்திற்கு தீங்கு இழைக்கின்றனர்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:
தமிழகம் என்றாலே போராடுவதற்கான மாநிலம் என்ற சூழலை, எதிர்க்கட்சியினர் ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து சேலத்திற்கு, ௧௦ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், பசுமை பாதை அமைக்கப்படுகிறது. இந்த சாலையால், ஐந்து மாவட்டங்கள் பயன் பெறும். விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்கான, மாற்று நடவடிக்கை மேற்கொண்ட பின் தான், சாலை அமைக்கப்படும்.
இந்த திட்டத்தைப் பற்றி, முழுமையாக அறிந்து கொள்ளாமல், உடனடியாக எதிர்ப்பு தெரிவிப்பது, சரியான நடைமுறையல்ல. தமிழ் உணர்வாளர்கள் என்ற போர்வையில், பலர், தமிழகத்திற்கு தீங்கு இழைத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை