தி.மு.க., இரட்டை வேடம்: ஜெயகுமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இரட்டை வேடம்: ஜெயகுமார்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:''கடவுள் விஷயத்தில், தி.மு.க.,வினர் இரட்டை வேடம் போடுகின்றனர்,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:
அமைச்சர் ஜெயகுமார்: தி.மு.க., உறுப்பினர், பெரியகருப்பன் பேசுகையில், அவரது கட்சி தலைவரை, மூலவர் என்றும், உற்சவமூர்த்தி என்றும் கூறினார். கடவுள் மறுப்பு கொள்கையை, தி.மு.க., கைவிட்டு விட்டதா?
தி.மு.க., - பெரியகருப்பன்: ஏதாவது பேசி, தன் பெயர் வர வேண்டும் என, அமைச்சர் நினைக்கிறார். எங்கள் தலைவர், கோவிலுக்கு செல்வதில்லை என்றாலும், இந்த துறையில், தவறு நடந்து விடக் கூடாது என்பதில், உறுதியாக இருந்தார். இந்த துறை முன்னேற, திட்டங்களை வகுத்தார்.
அமைச்சர் ஜெயகுமார்: கடவுள் விஷயத்தில், இரட்டை வேடம் போடுகிறீர்கள்.
எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: யார் இரட்டை வேடம் போடுகின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு தெரியும். நீங்கள், அண்ணாதுரை பெயரை, கட்சியில் வைத்துக் கொண்டு, என்ன வேடம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும், மக்களுக்கு தெரியும்.
அமைச்சர் ஜெயகுமார்: ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதே, எங்கள் கொள்கை.கூட்டுறவுத் துறை அமைச்சர், ராஜு: இன்றைய இளைஞர்கள், அண்ணாதுரையை நினைவில் வைத்துக் கொள்ள, அ.தி.மு.க.,வே காரணம்.
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: பராசக்தி படத்தில், எங்கள் கருத்தை, கருணாநிதி தெளிவாகக் கூறியுள்ளார். கோவில்கள் கூடாது என்பது, எங்கள் கொள்கை அல்ல; கோவில்கள், கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக் கூடாது என்பது தான், எங்கள் கொள்கை.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூன்-201809:31:33 IST Report Abuse
Bhaskaran அந்தக்கோவிலுக்குள் எங்கள்குடும்பத்தினர் அனைவரும் செல்வார்கள் நாங்கள் மட்டும் நாத்திகவேடம் (சில சமயங்களில் மட்டும் )போடுவோம் மற்றபடி நாங்களும் ஆத்திகர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை