விராலிமலை கோவிலில் வணிக வளாகம் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விராலிமலை கோவிலில் வணிக வளாகம் அறநிலையத்துறை அமைச்சர் அறிவிப்பு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:''விராலிமலை, சுப்பிர மணிய சுவாமி கோவிலிலும், செய்யாறு, பச்சை யம்மன் கோவிலிலும், வணிக வளாகங்கள் கட்டப் படும்,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.சட்டசபையில், அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன், நேற்று வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:சேலம் மாவட்டம், பூலாம்பட்டி, கைலாசநாதர் கோவிலில், 52 லட்சம் ரூபாய் செலவில், மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கப்படும். நெடுங்குளம், வரதராஜபெருமாள் கோவிலில், 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்மண்டபம், மதில்சுவர் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.கரூர் மாவட்டம், வெண்ணெய் மலை பாலசுப்பிர மணிய சுவாமி கோவிலில், 60 லட்சம் ரூபாய். சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு, குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், 2.50 கோடி ரூபாய்; திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, மீனாட்சி சொக்கநாதர் கோவிலில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், திருமண மண்டபங்கள் கட்டப்படும்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலால் நடத்தப்படும், ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 1.50 கோடி ரூபாயில் கலையரங்கம் கட்டப்படும்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், 25 லட்சம் ரூபாயில், திருத்தேர் கொட்டகை அமைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கோவில்பதாகை, சுந்தர்ராஜபெருமாள் கோவில் குளம், 32 லட்சம் ரூபாயில் செப்பனிடப்படும்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார், அங்காளம்மன் கோவில் பக்தர்கள் வசதிக்காக, கழிப்பறை, குளியலறைகள், 22 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும். கோவை மாவட்டம், பேரூர், பட்டீஸ்வரர் கோவில் பக்தர்கள் வசதிக்காக, அப்பகுதியில், கழிப்பறை மற்றும் குளியலறை, 40 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்.
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, மாரியம்மன் கோவில் முன்மண்டபம் மற்றும் சுற்றுச்சுவர், 27 லட்சம் ரூபாயிலும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு, மகாதேவர் கோவில் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை, 44 லட்சம் ரூபாயிலும் கட்டப்படும்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகமும், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, பச்சையம்மன் கோவிலில், 64 லட்சம் ரூபாயில் வணிக வளாகம் மற்றும் பக்தர்கள் தங்கும் அறைகளும் கட்டப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை