ரூ.1.60 கோடியில் சிலம்பாட்டம் மையம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.1.60 கோடியில் சிலம்பாட்டம் மையம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:''தேசிய மாணவர் படை மாணவர்களின் பயன்பாட்டிற்காக, 20 லட்சம் ரூபாய் செலவில், நகரும் பசுமைக் கழிப்பறைகள் அமைக்கப்படும்,'' என, விளையாட்டு துறை அமைச்சர், பாலகிருஷ்ணா ரெட்டி அறிவித்துஉள்ளார்.
சட்டசபையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை தொடர்பாக, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், 15 கோடி ரூபாய் செலவில், மாணவர்கள் விடுதி அமைக்கப்படும். பாரம்பரிய தற்காப்பு விளையாட்டுகளான, களரி மற்றும் சிலம்பாட்டத்திற்கான பயிற்சி மையம், 1.60 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மேஜை பந்து
விளையாட்டிற்கான முதன்மை நிலையம், 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். உடற்கல்வியியலை சிறந்த முறையில் போதிக்கவும், பரிசோதிக்கவும், பயிற்சி அளிக்கவும், 22.05 லட்சம் ரூபாய் செலவில், கற்பிக்கும் கலை சோதனைக்கூடம் அமைக்கப்படும். விளையாட்டு போட்டி கள் குறித்த தகவல்கள் மற்றும் செயல்பாடுகளை, இணையம் மற்றும் கைப்பேசி வழியாக பெறுவதற்கும், பதிவு செய்வதற்கும், 33 லட்சம் ரூபாய் செலவில், மென்பொருள் உருவாக்கப்படும்.தேசிய மாணவர் படை மாணவர்களின் பயன்பாட்டிற்காக, 20 லட்சம் ரூபாய் செலவில், நகரும் பசுமைக் கழிப்பறைகள் அமைக்கப்படும். திருப்பூர் மாவட்டம், அமராவதி நகரில் உள்ள, சைனிக் பள்ளியின், தேசிய மாணவர் படை பயிற்சி மையத்தில், உள்கட்டமைப்பை நவீனப்படுத்த, மூன்று லட்சம் ரூபாய் செலவிடப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X