In Jharkhand's Godda, two people lynched for 'stealing' cattle; four arrested | மாடுகள் திருடியதாக இருவர் அடித்துக்கொலை| Dinamalar

மாடுகள் திருடியதாக இருவர் அடித்துக்கொலை

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடுகளை திருடிகடத்திச்சென்றதாக 2 பேரை கிராமத்தினர் அடித்துக்கொன்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் குட்டா மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் இருந்து லாரியில் மாடுகளை கொண்டு சென்றனர். பன்காட்டி கிராமம் வந்த போது அப்பகுதி கிராமவாசிகள் மாடுகளை திருடி செல்வதாக நினைத்து அவர்களை தடுத்து நிறுத்தி சோதனைசெய்தனர். அப்போது லாரியில் இருந்த இரு இளைஞர்களை பிடித்து தாக்கினர். படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தகவலறிந்த தியோதாந்த் போலீஸ்நிலைய போலீசார்விசாரணை நடத்தினர். விசாரணையில் அடித்து கொல்லப்பட்டவர்கள் முஸ்தாபா அன்சாரி, சர்கு என்பது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201807:46:48 IST Report Abuse
Srinivasan Kannaiya மக்களுக்கு காவல்த்துறை, நீதிமன்றங்கள் மீது உள்ள நம்பிக்கை குறைந்ததை இது காட்டுகிறது...
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201806:25:15 IST Report Abuse
 arsath ali மாட்டுக்காக மனிதனை கொல்லும் இவர்கள் திருந்தவே மாட்டார்கள்... RSS VIP & BAJRANGDAL போன்ற காவி தீவிரவாத அமைப்புகளே காரணம்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஜூன்-201808:34:42 IST Report Abuse
Pannadai Pandianஇங்கு ஏன் மதத்தை இழுக்கிறாய். முமரு என்பவற்றின் எருமை மாடுகளை திருடியதால் வந்த வினை இது. மாட்டு திருடர்களை அடித்து கொன்றுள்ளார்கள். இந்த மாட்டை கடத்தியவர்கள் இந்துக்களாக இருந்தாலும் கிருஸ்துவர்களாக இருந்தாலும் இதே கதிதான் ஏற்பட்டிருக்கும். மாட்டை இழங்கிதவன் பொங்கி எழுந்ததனால் வந்த வினை இது.......
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201805:34:10 IST Report Abuse
amuthan,Karaikudi என்றைக்கு மனிதர்கள் சட்டத்தை தன் கையில் எடுக்கின்றார்களோ...அப்போது வலுத்தவனுக்கே நீதி ...தமிழ் நாட்டில் நான்கு கொலைகள் குழந்தை கடத்துவதாக சமீபத்தில் நடந்தது...குற்றவாளிகள் யாராகினும் தண்டணைக்கு உரியவர்களே...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஜூன்-201805:21:13 IST Report Abuse
Sanny மாட்டுக்காக இப்படி அடித்து கொல்லுகிறார்களே, இளம் பிள்ளைகளை, பெண்களை பலாத்காரம் செய்பவர்களை அடித்துகொல்லுவதுக்கு இந்த பயலுகளுக்கு தைரியம் இருக்கா? அப்படி இருந்தால் பெண்கள் தைரியமாக எந்த நேரத்திலும் வெளியில் போய் வரலாம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-201804:26:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.// பசு காவலர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுதி பாஜக எம்.எல்.ஏ போராட்டம். மாபெரும் பேரணி. தமிழகத்திலிருந்து பேரணியில் கலந்து கொள்ள சிறப்பு ரயில்கள் இலவசம். - நடந்தாலும் ஆச்சரியமில்லை. (அதில் என்ன தவறு என்று சொல்லவே ஒரு பேரணி வரும் பாருங்க)
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூன்-201804:23:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சமூக விரோதிகள் தங்களின் சொந்த மாடுகளை லாரியில் கொண்டு சென்றதை பார்த்த தேசபக்தர்கள் அவர்களை அடித்து கொன்றனர். இதற்கு மாநில அமைச்சர் பரிசு வழங்குவார்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஜூன்-201809:59:55 IST Report Abuse
Pannadai Pandianசொந்த மாடுகள் இல்லை திருடிய மாடுகள். முமாறு என்பவருக்கு சொந்தமானது. வீண் பொய்யை கக்குவதே உன் வேலையா போச்சு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை