விரைவில் அறிவிப்பு!| Dinamalar

விரைவில் அறிவிப்பு!

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விரைவில் அறிவிப்பு!
இட ஒதுக்கீடு அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது; இது, மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ராம்விலாஸ் பஸ்வான்
மத்திய உணவுத் துறை அமைச்சர்,
லோக் ஜன சக்தி
காவி மயமாக்கும் செயல்!
அதிகாரிகள் நியமனத்தில், மத்திய, பா.ஜ., அரசின் நடவடிக்கை, மிகவும் தவறானது. துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களை, இணைச் செயலர்களாக நியமிப்பதன் மூலம், அரசு அலுவலகங்களை, காவி மயமாக்கும் பணி நடக்கிறது.
வீரப்ப மொய்லி
முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
திட்டமிட்ட சதி!
நான், உ.பி., முதல்வராக இருந்த போது, அரசு பங்களாவில் தங்கியிருந்தேன். தற்போது, அதை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துவிட்டேன். அந்த வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது; இது, எனக்கு எதிரான, பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி.
அகிலேஷ் யாதவ்
உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X