உணவு தயாரிப்பதை காணும் வசதி ரயில்வே அமைச்சகம் புது திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உணவு தயாரிப்பதை காணும் வசதி ரயில்வே அமைச்சகம் புது திட்டம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் எப்படி தயாராகின்றன என்பதை பார்க்கும் வசதியை, பயணியருக்கு நேரடி வீடியோவாக வழங்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பயணியருக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை, ரயில்வே அமைச்சகம் செய்து வருகிறது. அவர்களது புகார்கள் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்நிலையில், 'ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை' என, பெரும்பாலான பயணியர் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, பயணியருக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மத்திய ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் கூறியதாவது:
நாடு முழுவதும், ரயில்வே உணவு கழகத்துக்கு சொந்தமாக, 200 சமையலறைகள் உள்ளன. இவற்றில் சில சமையலறைகளில், 'விஷன் கம்ப்யூட்டிங்' என்ற முறையில், நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த கருவி மூலம், சமையலறையில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால், உடனே, சம்பந்தப்பட்ட, ஒப்பந்ததாரருக்கு தானாக புகார் செல்லும்.
குறிப்பிட்ட நேரத்துக்குள், ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு புகார் செல்லும் வசதி உள்ளது.மேலும், இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் சென்று, ரயில்வே சமையலறையில், உணவு தயாரிக்கப்படுவதை வீடியோவாக காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X