கடலூரில் பணிச்சுமை தாங்காமல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலூரில் பணிச்சுமை தாங்காமல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கடலூரில் பணிச்சுமை தாங்காமல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

கடலுார்:கடலுாரில், பணிச்சுமை தாங்காமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படை பெண் போலீஸ், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடலுார், புதுக்குப்பம் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் சத்தியசீலன், 30; இவரது மனைவி சவிதா, 27; இருவரும், கடலுார் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகின்றனர்.சவிதாவிற்கு நேற்று, கடலுாரில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் வீட்டிற்குச் சென்றவர், ஆயுதப்படை ஆய்வாளர் சிவசங்கரன், தனக்கு கூடுதல் பணிச்சுமை கொடுத்து, 'டார்ச்சர்' செய்வதாக மூன்று பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்து, பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.உடன் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, பகல், 12:50 மணிக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து, கடலுார் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆயுதப்படை பெண் போலீஸ், பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:33:38 IST Report Abuse
Srinivasan Kannaiya கடுமையான பணி என்றும் தெரிந்தும் ஆணுக்கு பெண் நிகர் என்று பணிக்கு வந்து விடுகிறார்கள்..பிறகு பணியில் சிறிது கடுமை வந்தால் தற்கொலை செய்ய முயலுகிறார்கள்... ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு பதவிக்கு ஒரே ஊதியம்... அப்பறம் ஆணுக்கும் ஒரு பணிச்சுமை..பெண்ணுக்கு ஒரு பணிச்சுமை என்று பிரித்து பார்க்க முடியாதே....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:30:23 IST Report Abuse
Srinivasan Kannaiya வர வர சமீப காலங்களாக காவல் துறை பணியாளர்கள், பதவி , வயது வித்தியாசமின்றி தற்கொலை செயது கொள்ளுகிறார்கள்.. இது அந்த துறைக்கு பெரும் அவமானமாக கருதவேண்டும்... இந்த மாதிரி மனநிலையில் உள்ள பணியாளரை இனம் கண்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க அரசு முன்வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூன்-201808:27:27 IST Report Abuse
Srinivasan Kannaiya முக்கியமாக பாலினத்திற்கு தகுந்தார் போலதான் பணி கொடுக்கவேண்டும்...பொதுவாக நீதிமன்றத்தில் காக்கவேண்டிய வேலையாகத்தான் இருக்கும்... அதற்கும் பொறுமை இல்லை போல உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X