ரூ.28 கோடியில், 332 'டிரான்ஸ்பார்மர்' இனி, நிம்மதி! மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு| Dinamalar

தமிழ்நாடு

ரூ.28 கோடியில், 332 'டிரான்ஸ்பார்மர்' இனி, நிம்மதி! மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018
Advertisement
 ரூ.28 கோடியில், 332 'டிரான்ஸ்பார்மர்' இனி, நிம்மதி!  மின் தடை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு

அவிநாசி, அவிநாசியை சுற்றியுள்ள நான்கு பேரூராட்சிகளில், மின் பிரச்னைக்கு தீர்வு காண, 28 கோடி ரூபாய் செலவில், 332 புதிய டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தும் பணி துவங்கியுள்ளது.
அவிநாசி சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை, வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, மின்சாரம் சார்ந்த பயன்பாடுகளும், தேவைகளும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், மின் சேவையில், திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது. அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுவது, குறைந்த மின்னழுத்ததால் விளக்குகள் எரியாமல் இருப்பது என்பது போன்ற பிரச்னைகளால், மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்காக, பேரூராட்சி பகுதிகளில், மின் சேவையில் தன்னிறைவு பெற, மத்திய அரசின் ஒருங்கி ணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 332 டிரான்ஸ்பார்மர்அதன்படி, அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், 2.52 கோடி ரூபாய் செலவில், 59 டிரான்ஸ்பார்மர், திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், 3.3 கோடி ரூபாய் செலவில், 69; அன்னுார் பேரூராட்சியில், 3.23 கோடி ரூபாய் செலவில், 48; திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 20 கோடி ரூபாய் செலவில், 156 டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட உள்ளன. புதிதாக பொருத்தப்படும் டிரான்ஸ்பார்மர், 63 கே.வி.ஏ., மற்றும் 25 கே.வி.ஏ., திறன் கொண்டவை. குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ள இடங்களில், தற்போதைய நிலையில், 200 - 500 மின் இணைப்புகள் வரை, ஒரே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் சப்ளை வழங்கப்படும் நிலையில், அவற்றை, 50 முதல், 150 வரையிலான மின் இணைப்புகளாக பிரித்து, புதிய டிரான்ஸ்பார்மர் மூலம், மின் இணைப்பு வழங்கப்படும். இதன் மூலம், மின்தடை ஏற்படும் போது, குறிப்பிட்ட டிரான்ஸ்பார்மரை மட்டும் செயலிழக்க செய்து, பழுதை சீரமைக்க முடியும். இதனால், சுற்றியுள்ள மக்களுக்கான மின் சப்ளை பாதிக்காது. மேலும், மின் கம்பிகளில் இருந்து, மின் இழப்பு தவிர்க்கப்படும் என, மின் வாரியத்தினர் கூறுகின்றனர்.எப்போது முடியும்?அவிநாசி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் கூறுகையில், 'மின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மின் கம்பிகளை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, அவிநாசி பகுதியில், மின் கம்பிகளை தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. நான்கு பகுதிகளிலும் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணியை, 2019, மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

ஆட்கள் பற்றாக்குறைஅவிநாசி மின் பகிர்மான கோட்டத்தில் உள்ள, 22 பிரிவுகளில், 3.50 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. அதில், 2.70 லட்சம் மின் இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், மின் பணியாளர் எண்ணிக்கையை பொறுத்தவரை, உதவியாளர் (ெஹல்பர்) பணியிடத்தில், 92 சதவீதம் காலியிடம் உள்ளது. வயர்மேன் பணியிடத்தில், 82 சதவீதம், உதவி பொறியாளர் பணியிடத்தில், 47 சதவீதம் காலியாக உள்ளது. இதனால், பலத்த காற்று உட்பட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மின்வெட்டு உட்பட மின் சார்ந்த பழுதுகளை சரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது. அதே நேரம், மத்திய அரசின் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில், ஊழியர் பற்றாக்குறையை சமாளித்து, குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடித்தாக வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை