அமைச்சருக்கு எதிராக போஸ்டர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்கு எதிராக போஸ்டர்

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்:ஓசூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசில், 'பொதுமக்கள் மற்றும் கோவில் நிலங்களை, அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, தன் பினாமி பெயர்களில், பட்டா மாற்றம் செய்து, ஆக்கிரமிப்பு செய்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், தமிழக கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார். பின், தமிழக முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக, அவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஓசூர் சப் - கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் உட்பட, பல்வேறு இடங்களில், துண்டுநோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், 'ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா மற்றும் கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில், பொதுமக்களை ஏமாற்றியும், கோவில் நிலங்களை, தன் பினாமி பெயர்களிலும், பட்டா மாற்றம் செய்தும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, நிலங்களை, அமைச்சர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். சில குடும்பங்கள், தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அமைச்சர் பதவியை பயன்படுத்தி, சட்ட விரோதமாக செயல்படுகிறார்' என, வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து, அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி கூறுகையில், ''நோட்டீஸ் ஒட்டிய நபர் யாரென்றே தெரியவில்லை. என்னைப் பற்றிய புகாரை நேரிலேயே தெரிவிக்கலாம் அல்லது போலீசில் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூன்-201809:28:00 IST Report Abuse
Bhaskaran கோவில் சொத்துக்களென்றாலே சிலருக்கு அல்வா திண்பதுபோல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X