விரைவில் ஆதார் பயன்பாட்டில் புதிய முறை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விரைவில் ஆதார் பயன்பாட்டில் புதிய முறை

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆதார் அட்டை, முக அடையாளம்

புதுடில்லி : ஆதார் அட்டையில் தற்போது கண்களின் கருவிழிப் படலம், விரல் கைரேகைகள் ஆகியவை முக்கிய அடையாளமாக ஏற்கப்பட்டுள்ளன. இதில் வயோதிகம், விபத்து, கடின உழைப்பு உள்ளிட்ட காரணிகளால் ஆதாரைப் பயன்படுத்துவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் முகத்தையும் அடையாளமாக ஏற்கும் முறையை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷன் பாண்டே, முகப்பதிவு சார்ந்த அடையாள முறையானது ஏற்கனவே உள்ள வழிமுறைகளோடு கூடுதலாக ஒரு வழிமுறையை உருவாக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் தேவையின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு முக அமைப்பும் அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஜூலை ஒன்றாம் தேதி முதல் முக அடையாள முறை நடைமுறைக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் சிக்கலின்றி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த கூடுதலாக ஒருமாதம் அவகாசம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது வரை நாடு முழுவதும் 121 கோடியே 17 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் நாள்தோறும் சராசரியாக 4 கோடி ஆதார் அட்டைகள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201801:41:52 IST Report Abuse
Mani . V ஏமாற்றும் படலம் அடுத்த ரவுண்டு ஆரம்பம். (அதாவது பார்ட் 2).
Rate this:
Share this comment
Cancel
ahmed - chennai,இந்தியா
14-ஜூன்-201816:55:32 IST Report Abuse
ahmed Aadhar is an important document. Please remember if you link it to your bank account and all the transaction even if you buy in a grocery shop it should be linked to ur bank account. Without entering and updating the sale to his aadhar no once should sell in their shops. In such cases no one can have additional income in their life. it should be applicable to each and every citizen in India. In such case no once can do any transaction without aadhar. Ultimately there wont be liquid cannot be used anyone. There will be big question what roadside vendor will do. how much a they will do business around 1000 - 1500 max. it is not going to affect the flow since everyone can have a min of 4000-5000 liquid cash for emergencies. Please if we implement then we will not have bribe. they say bribe cannot be eradicated. if we implement the bribe will be eradicated the next second. the money they received as bribe cannot be utilized anywhere. if he go to bank to deposit the income tax will ask from where he got.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
14-ஜூன்-201816:09:55 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy வயதான பலருக்கு 'விறல் ரேகைகள் அடையாளம்' காட்டுவதில் சிரமம் இருக்கிறது. இந்த 'முக அடையாளம்' பயன் முறை நல்லது. தயவு செய்து என் போன்ற நபர்கள் இந்த முறையை கடைபிடிக்க விருப்பம். ஏன் ரேகைகள் அடையாளம் காண்பிப்பது இல்லை. என் போன்றவர்கள் இதை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று தங்கள் தினமலர் மூலம் செய்தியாக வெளியிட்டு 'அநத செய்தி என் போன்றவர்களை அடைய விளம்பரம் செய்ய வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-ஜூன்-201816:07:57 IST Report Abuse
Nallavan Nallavan ஆதாரில் என்னென்ன விபரங்கள் இருக்கவேண்டும் என்ற விஷயத்திலேயே இன்னும் தீர்வு காணப்படவில்லை ..... அதற்குள் ஆதாரை அதனுடன் சேர், இதனுடன் சேர் என்று நோகடித்துவிட்டார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
14-ஜூன்-201814:29:05 IST Report Abuse
KUMAR. S எந்தெந்த துறையில் மக்கள் நலத்திட்டங்கள் இருக்கின்றதோ..அந்த துறையுடன் ஆதார் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்..ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய ஆதார் தானாக ரத்து செய்யப்பட வேண்டும்..அதற்குரிய வகையில் அணைத்து துறைகளும் இணைக்கப்பட வேண்டும்..
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
14-ஜூன்-201817:05:56 IST Report Abuse
Nalam VirumbiAadhar should be cancelled when death certificate is issued....
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
14-ஜூன்-201814:24:44 IST Report Abuse
Gnanam குளறுபடியின்றி ஆதார் அட்டைகளின் திருத்தங்களை காலதாமதமின்றி, துல்லியமாக மேற்கொள்ள அனுபவமுள்ள நபர்களை நியமிக்கவேண்டும். சிறு சிறு திருத்தங்களுக்கு செல்லும்போது, மற்ற பல மாற்றங்களை செய்து விடுகிறார்கள். இதனால் நேரம் மற்றும் பணம் வீணாவது மட்டுமன்றி மனஉளைச்சலுக்கும் காரணமாகிறது இந்த ஆதார் அட்டை.
Rate this:
Share this comment
Cancel
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
14-ஜூன்-201813:53:32 IST Report Abuse
Sukumaran Sankaran Nair நம்மைச்சுற்றி ஒற்றுமை வளையம் (Circle of Unity )அமைத்துக்கொள்ளும் வாழ்க்கைமுறை ஏற்பட்டாலின்றி, நமக்கு தேவைப்படும் போது ,உற்ற தோழனைப்போல அமையும் பாதுகாப்புக்கு, உதவிக்கு முன் முகத்தோற்றத்துடனான ஆதார், பெயர் முதலிட்ட தரவுகளின் மூலம் தனிநபர் குறித்த அங்க அடையாளங்களை அறிவதற்கான சான்றாக விளங்கினாலும்,ஒரு தனி நபர் எப்பேர்ப்பட்டவர், அவரது அந்தரங்கம் போன்றவை அவருடன் சேர்ந்து பழகினவருக்குத்தான் அறிந்திருக்கமுடியும். அவர் உண்மை, நேர்மை குறித்த தகவல்கள் அவரது சமூக ஈடுபாடு நடவடிக்கைகளில் பணபாக, அல்லது பண்பற்ற முறையில் வாழ்ந்த விதத்தை அறிந்துகொள்ள சமூக அமைப்புகள் தரக்கூடிய சான்றுகளே உத்திரவாதமளிக்க வல்லது. ஒருவரிடம் உண்மை இருந்தும், அவர் நம்பிக்கையற்றவர் எனும்போது குடும்ப ,சமூக நிர்வாக அமைப்பை சீர் குலைக்கலாம். நம் எல்லோரிடத்திலும் குறை இல்லாமல் இல்லை. ஒருவரிடம் உள்ள நல்ல பண்புகளை போற்றி, மேலும் வளர, அவருக்கு உற்ற தோழனாக,அன்பு பாராட்டும்படி நடந்துகொள்ளவே,அப்துல் பஹா வழிகாட்டியுள்ளார். நிர்வாகத்தூண் வலுவான சீரான அடித்தளத்தை பெற்றிருக்க, என்றும் குறிப்பாக வாக்காளர்கள் தகுதி பெற்றவர்களாக வருங்கால தலைவர்களை தேர்ந்தெடுந்துக்கொள்ளும் நிர்வாக கட்டமைப்பு முறை அனைவரும் பொறுப்பேற்று (Collective Responsibility )செயல்பட வேண்டியதைக் குறிப்பதாகும்
Rate this:
Share this comment
Thiyaga Rajan - erode,இந்தியா
14-ஜூன்-201814:19:30 IST Report Abuse
Thiyaga Rajanஎன்ன சொல்ல வறீங்கன்னு எனக்கு தெரிஞ்சாகனும்...
Rate this:
Share this comment
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
15-ஜூன்-201808:48:21 IST Report Abuse
Sukumaran Sankaran Nairசமூக நலனுக்கு தீங்கு விளைவிக்கும் போராட்டங்களில் அகப்பட்டுக்கொள்ளும் நபர்களது முகத்தோற்றம் ஏற்கனவே பதிவடைந்த விரிவான அடையாளங்களுடன் காட்டிக்கொடுக்கும் தகவல்களும் ஆதார் அட்டை மூலம் பதிவுவேற்றப் படுமானால். எதிர்மறையான பின்விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எந்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பாதுகாப்பு தேவையாகும். அதற்கு ஒருமைப்பாடு அவசியமாகிறது. நம்மைச்சுற்றி உதவியும், ஒத்தாசையுமிக்க நல்ல பக்குவப்பட்ட மனங்கள் ஒன்றுபட வைக்கும் கொத்தமைப்பிலான (Clusters) சமூகங்களால் தப்பெண்ணங்களும், வன்முறைகளும், ஊடுருவதை தடுத்து நிறுத்தலாம். பழையதான சித்தாந்தங்களின் அடிப்படையில் உருவான கட்டமைப்புகள் சிதைவுற்று வருவதும்,முற்றிலும் மாற்றியமைக்க வல்ல தன்மை மாற்றங்களின் ஆன்மிக பயிற்சி நடவடிக்கைகளின் தாக்கங்கள் உலக மக்களை ஆன்மிக ,சமூக நீதி நிர்வாக கோட்பாடுகள் சட்ட விதிகளை ஒருங்கிணைந்த ஜனநாயக தூண்கள் மக்கள் ஒருமைப்பாடு எனும் அஸ்திவாரத்தில் உறுதியாக நிலைநிறுத்தப்படுவது படிப்படியாக தொடரும்....
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
14-ஜூன்-201813:46:46 IST Report Abuse
JIVAN வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை முதல்ல இணைங்க, போலி வாங்கிக்கணக்கை, போலி ரேஷன் கார்டை கண்டுபிடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல இதுவும் முக்கியமானது ஆனா ஆளும்கட்சி எதிர்க்கட்சி சில்லறை கட்சினு இதைபற்றி எவனும் பேசமாட்டேங்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
14-ஜூன்-201813:28:50 IST Report Abuse
மணிமாறன் முதலில் ஆதாரை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணையுங்க... அதை விட்டு விட்டு வேறு வேண்டாத வேலை எல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-ஜூன்-201812:40:36 IST Report Abuse
இந்தியன் kumar ஒவொரு குடிமகனுக்கும் புகைப்படத்துடன் ஒரு அடையாள அட்டை போதும் அதில் எல்லா விவரங்களும் இருக்கவேண்டும். . அதை எல்லோருக்கும் கட்டயமாக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை