நடப்பு ஆண்டு கரும்புக்கு பணம் வழங்குவதில் குழப்பம்! அரசு அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி| Dinamalar

தமிழ்நாடு

நடப்பு ஆண்டு கரும்புக்கு பணம் வழங்குவதில் குழப்பம்! அரசு அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி

Added : ஜூன் 14, 2018
Advertisement
நடப்பு ஆண்டு கரும்புக்கு பணம் வழங்குவதில் குழப்பம்! அரசு அறிவிப்பால் விவசாயிகள் கடும் அதிருப்தி

நெல்லிக்குப்பம்: தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்த பணத்தை வழங்குவதில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கடந்த 2013-14 ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக மாநில அரசுக்கு கூடுதல் விலையை அறிவிக்க அதிகாரமில்லையென கூறி மத்திய அரசு அறிவிக்கும் விலையை மட்டுமே தனியார் ஆலைகள் வழங்கி வருகின்றன.
இந்த வகையில் தமிழகத்தில் மட்டும் தனியார் ஆலைகள் 1000 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க தமிழக அரசு கூடுதல் விலையை அறிவிக்காமல் நடப்பு ஆண்டு முதல் லாபத்தில் பங்கு என்ற புதிய முறையை அறிவித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கு மத்திய அரசு டன் ஒன்றுக்கு 2,550 ரூபாய் அறிவித்தது. அந்த விலையை தனியார் ஆலைகள் வழங்குகின்றன. கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் கரும்பு டன் ஒன்றுக்கு 2,750 ரூபாய் உறுதி செய்யும் வகையில் தனியார் ஆலைகள் வழங்கிய தொகையான 2,550 ரூபாய் போக மிதி 200 ரூபாயை தமிழக அரசு நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தும் எனவும், இதற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
ஆனால் 3 மாதங்களாகியும் தமிழக அரசு கொடுப்பதாக அறிவித்த தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளின் நிலங்களின் சர்வே எண்களைக் கேட்டுள்ளது. சர்வே எண் யார் பெயரில் உள்ளதோ அவர்களின் பெயருக்கு பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால், கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு நேரடியாக பணம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். அதோடு மட்டுமின்றி, பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பல விவசாயிகளின் குடும்பங்களில், ஒருவர் பெயரில் சொத்து இருக்கும். ஆனால் கரும்பு பதிவு குடும்பத்தில் யார் விவசாயம் செய்கிறார்களோ அவர்கள் பெயரில் இருக்கும்.
அதேபோன்று, குத்தகை பயிர் செய்பவர்கள், ஆலையில் குத்தகைதாரர் பெயரில் பதிவு இருக்கும். ஆனால் சர்வே எண் நில உரிமையாளர் பெயரில் இருக்கும். இதுபோன்ற குழப்பங்களால் யார் பெயருக்கு அரசு பணம் அனுப்பும் என புரியாத நிலை உள்ளது.
ஒவ்வொரு ஆலையிலும் எந்த விவசாயி எவ்வளவு டன் கரும்பு சப்ளை செய்தார் என்ற கணக்கு அரசிடம் இருக்கும். அதை வைத்து அந்த விவசாயி வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவதே சரியாக இருக்கும். சர்வே எண் மூலம் பணம் அனுப்பினால் கரும்பு சப்ளை செய்த விவசாயிக்கு முறையாக பணம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும்.
எனவே, அரசு கரும்பு சப்ளை செய்த விவசாயிக்கு நேரடியாக வங்கி கணக்கில் பணம் அனுப்ப வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை