18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (185)
Advertisement
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு , நீதிபதி இந்திரா பானர்ஜி ,  நீதிபதி சுந்தர், நீதிபதி குலுவாடி ரமேஷ், ஐகோர்ட் நீதிபதிகள்  தீர்ப்பு, Dinakaran support MLAs, MLAs Disqualified, Chennai High Court verdict, Indira Banerjee, Justice Sundar, Justice Gulawadi Ramesh,

சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், ஐகோர்ட் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து வழக்கு விசாரணை 3வது நீதிபதிக்கு செல்ல உள்ளது.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.


ஏன் செல்லும்

அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். மேலும், சபாநாயகரின் உத்தரவில் நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது. சபாநாகரின் முடிவு என்பது உரிய காரணங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது சபாநாயகரின் உத்தரவில் தலையிடக்கூடாது என்பதால், தகுதி நீக்கம் செல்லும் எனவும் கூறினார்.


எதிரானது

ஆனால், நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செல்லாது. சபாநாயகர் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தீர்ப்பு வழங்கினார்.


3வது நீதிபதி விசாரணை

இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு விசாரணை 3 வது நீதிபதியிடம் செல்ல உள்ளது. விரைவில் 3வது நீதிபதி நியமிக்கப்பட உள்ளார். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவு தொடரும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். 3வது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார்.


வழக்கறிஞர்கள் கருத்து

தினகரன் ஆதரவு வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறுகையில், தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி கூறினார். 2வது நீதிபதி, மிகத்தெளிவாக தீர்ப்பு கொடுத்துள்ளார். சபாநாயகர் செய்தது தவறானது என தீர்ப்பு கொடுத்துள்ளார் என்றார்.

அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி 18 பேரின் ரிட் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் நீதிபதி சுந்தர் கூறுகையில், தலைமை நீதிபதி உத்தரவில் மாறுபடுகிறேன். சபாநாயர் தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டு இல்லை. சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடலாம் எனக்கூறி 18 பேர் தகுதி நீக்கம் செல்லாது என்றார்.
தொடர்ந்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தரும் நானும் வேறுபட்ட கருத்தை சொல்லியிருக்கிறோம். இதனால் 3வது நீதிபதி மீண்டும் விசாரணை நடத்துவார். அவரை, 2வது இடத்தில் உள்ள நீதிபதி தான் முடிவு செய்வார்.நான் இல்லை. அதில் தீர்வு கிடைக்கும் எனக்கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா
19-ஜூன்-201810:53:34 IST Report Abuse
புதுகை வானம்பாடி திருடனை திருடன் என்று சொன்னவர் குற்றவாளி ................. இதுதான் தீர்ப்பு
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
16-ஜூன்-201813:18:07 IST Report Abuse
narayanan iyer பாண்டிச்சேரி பிரச்னை வேறு தமிழ்நாடு பிரச்னை வேறு . நீதிபதியின் தீர்ப்பு பாண்டிச்சேரிக்கு வழங்கும் போது அது கவர்னரால் நியமிக்கப்பட்ட எம் எல் ஏ க்கள் வழக்கு ஆனால் தமிழக வழக்கு தேர்வு செய்யப்பட்ட எம் எல் ஏ க்கள் வழக்கு .ஆகவே முதன்மை நீதிபதி வழங்கிய தீர்ப்பு சரியே. ஆனால் தனக்கு வலு சேர்த்து தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள சுந்தர்ஜி முயல்கிறார் . இவர்தான் மூன்றாவது நீதிபதியை தேர்வு செய்ய இருப்பவர் . மூன்றாவது நீதிபதியை தன் கருத்துடன் ஒத்துபோகும் நீதிபதியை தேர்ந்தெடுத்தால் காரியம் சௌகர்யமாகிவிடும் . எல்லாம் ஒரு விளையாட்டாக நடக்கிறது. தேர்தெடுத்த மக்களை முட்டாள்கள் ஆக்கிக்கொண்டு இருக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஜூன்-201800:33:40 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இந்திய அரசியல் அமைப்பு அட்டவணை 10 விதி 7 ன் படி சபாநாயகர் முடிவு இறுதியானது அதில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என்று இருக்கிறது. ஆனால் அட்டவணை 10 விதி 7 நீதிமன்றங்களை கட்டுப்படுத்தமுடியாது என்று உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு இருப்பதால், நீதிமன்றங்கள் சபாநாயகரின் முடிவை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க உரிமை உள்ளது. தவிர சபாநாயகர், உறுப்பினர்கள் தாங்களாகவே கட்சியில் இருந்து ராஜினாமா செய்தாலோ அல்லது சட்டசபை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவிற்கு எதிராக வாக்களித்தாலோ மட்டுமே உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று விதி இருக்கிறது(இந்த செம்மறி ஆட்டுத்தனமே ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி). அதன்படி பார்த்தால்கூட சபாநாயகர் நடவடிக்கைக்கு தகுந்த காரணம் இல்லாமல் உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்திருக்கிறார் என்றே தெரிகிறது. அட்டவணை 10 விதி7 உச்சநீதிமன்ற அரசியல்சாசனமுடிவிற்க்கு ஏற்ப மாற்றப்படுவது மூலம் இதுபோன்ற குழப்பங்கள், விசாரணை கால விரயங்கள், அரசியல் கூத்துக்கள் தவிர்க்கப்படலாம் ... பாராளுமன்றத்தில் யாராவது அட்டவணை 10 விதி 7 ஐ மாற்றும் முயற்சியை செய்வார்களா ?
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-ஜூன்-201820:15:07 IST Report Abuse
ஜெயந்தன் சட்டம் ஒண்ணுதான்..ஆனால் தீர்ப்பு எப்படி இரண்டு விதமாக இருக்கிறது ........... சொல்லுங்கண்ணே...சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-201820:14:40 IST Report Abuse
ManiS The verdict will be announced after 5 Yeats completion. This is our law.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
14-ஜூன்-201820:02:07 IST Report Abuse
GMM சிவில் நீதிமன்றத்தில் சட்டத்தை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கப்படுகிறது. சட்டத்திற்கு எதிராக நிர்வாகம் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவுக்கு தீர்வு வேண்டும். தீர்ப்புகளுக்கு விதிகள் மீறல் மனுக்களை வக்கீல்கள் தாக்கல் செய்ய வேண்டும். விதிகள் இல்லை என்றால், பிரச்சினை சிக்கலானது. பதில் கடினம். தண்ணீருக்கான pH மதிப்பு நமக்குத் தெரியும். இது 1 முதல் 14 வரை ஆனால் தண்ணீர் pH மதிப்பு 16 கேள்விக்கு பதில் இல்லை. எந்த விதிகள் இல்லாதபோது அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களும் தங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்துகிறார்கள். எனவே தீர்ப்பு மாறுபடும்.
Rate this:
Share this comment
Cancel
கைப்புள்ள - nj,இந்தியா
14-ஜூன்-201819:56:00 IST Report Abuse
கைப்புள்ள ஹஹஹஹஹாஆ நிறைய விரோதிகள் அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு காட்டாட்சி நடத்தலாம்னு ரொம்ப விருப்ப பாத்தாங்க. இன்னைக்கு அது முடியாம போயிடிச்சு. புலம்புறாங்க.
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201819:45:00 IST Report Abuse
nanthuji,thailand இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.. ஊழல் தலைவிரித்தாடட்டும்... நமக்கென்று இருக்கும் மாநிலத்தையும் காக்க வக்கிலாதவர்களாய் போனோம்.. அச்சடித்த காகிதத்தை வேண்டி,நம் சந்ததிகளுக்கு, பெரும் அனர்த்தம் விளைவிக்கிறோம்..ஏன் வராது இயற்கைப் பேரிடர்..
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா
14-ஜூன்-201819:39:09 IST Report Abuse
Ramakrishnan Natesan எனக்கு தெரிந்து இன்னும் காலம் கடத்தாமல் மூன்றாவது நீதி பதி இல்லாமல் பூவா தலையா இல்லை கோயிலில் சீட்டு எழுதி போட்டு இந்த விவகாரத்தை விரைவில் முடிக்கலாம் காலம் கடத்தினால் தமிழ்நாடு அம்போ தான்
Rate this:
Share this comment
Cancel
14-ஜூன்-201819:11:46 IST Report Abuse
a.thirumalai சொன்னா எங்கே சார் கேட்கிறாங்க TV சீரியல பாக்காதீங்கன்னா கேட்க மாட்டேன் என்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை