எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு: தலைவர்கள் கருத்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு: தலைவர்கள் கருத்து

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (46)
Advertisement
MLAsDisqualification, சென்னை ஐகோர்ட், தினகரன், தமிழிசை, பா.ஜ., திருமாவளவன்

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், சென்னை ஐகோர்ட் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது தொடர்பாக, தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அவர்கள் கூறியதாவது:


ஸ்டாலின் டுவீட்

தீர்ப்பு தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை


அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன்: ஐகோர்ட் தீர்ப்பு, தினகரன் அணிக்கு, யானையின் காதுக்குள் புகுந்த கட்டெறும்பு போல் உள்ளது.


ஊசிவெடியாய் தீர்ப்பு:

தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: தீர்ப்பு ஒரு தீர்வில்லாமல் வந்துள்ளது. தீர்வு வரும் என எதிர்பார்த்துள்ளார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. யாருக்கும் சாதகமாகவும் பாதகமாகவும் இல்லாமல் தீர்ப்பு வந்துள்ளது. யாருக்கும் முன்னடைவு பின்னடைவு கிடையது. 18 எம்எல்ஏக்கள் நிலை தான் திரிசங்கு நிலையில் உள்ளனர். நிச்சயமன்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.


முன்னுதாரணம்

திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தீர்ப்பின் தன்மை என்ன என்பதை பார்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு, மற்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதில் அரசியல் கட்சிகள் குறுகிய கால பலன்கள் அடைவதை பற்றி கருத்து சொல்ல முடியாது.


மக்கள் தோல்வி

தினகரன் கூறியதாவது: தீர்ப்பு யாரும் எதிர்பார்த்தது போல் இல்லை. எங்களுக்கு 50 சதவீத வெற்றி கிடைத்துள்ளது/ ஐகோர்ட் தீர்ப்பால் பின்னடைவு இல்லை. தீர்ப்பால் மக்களுக்கு எதிரான அரசு நீடிக்கிறது என்ற ஒற்றை வரியே பதிலாக இருக்கிறது.
புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் எப்படி இருக்க முடியும். 21 பேரும் ஒன்றாக தான் உள்ளோம். அவர்கள், பணத்துக்காக சொத்துக்காக எங்களிடம் இல்லை . கட்சியை காப்பாற்ற ஒன்றாக உள்ளோம். நானே போக சொன்னால் கூட அவர்கள்போக மாட்டார்கள். தீர்ப்பால், அரசின் ஆயுள் 2 , 3 மாதம் நீடிக்கிறது. தீர்ப்பில் மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. நீதிமன்ற தீர்ப்பின் மூலம் மக்கள் தோல்வியடைந்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்: பொதுமக்கள் சற்றும் எதிர்பாராத ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது. 3வது நீதிபதியின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது. உடனடியாக, குறுகிய கால அவகாசத்தில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்: 8 மாதம் நடந்த இந்த வழக்கில், தீர்ப்பு இப்படி வந்துள்ளது.18 தொகுதி மக்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். இதனால், இந்த வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க ஐகோர்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ragh - Kanchi,இந்தியா
15-ஜூன்-201814:32:40 IST Report Abuse
M Ragh 18 MLA's ed by Public, Simply Speaker dismissed.because of internal discussion. For Re Election who will bear the expenses. Again our speaker dismiss if they from Other than ADMK. Again election. Court not entering speaker judgement
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:34:55 IST Report Abuse
Srinivasan Kannaiya நீதி என்றாலே காலம் கடந்து தரப்படுவதுதான்... யராலும் பயனடைய முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Usuf Ali - Chennai,இந்தியா
15-ஜூன்-201805:34:26 IST Report Abuse
Usuf Ali Judgement on 18 MLAs.... Since two judges have given different judgements, this matter will drag for period of 3 to 6 months or more. In future, for such sensitive cases, straightaway 3-bench judiciary committee may study, analyse and give their judgements this way, the case will come for a sttlement. The aggrieved party may go for appeal. Now, in todays case, the third judge may give his views after few months again the affected party would go to supreme court. In a nutshell, the minority government will complete its terms. Till such times, the 18 assembly constituences will suffer without their elected representatives. Democracry Zindabad.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
15-ஜூன்-201802:09:20 IST Report Abuse
Girija நீதிபதிகளுக்கே வித்தை காட்டுபவர்களிடம் மக்கள் ஓட்டுக்கு துட்டு வாங்குகின்றனர் இதை ஒரு அவசர வழக்காக உடனே விசாரித்து இருந்தால் தூத்துக்குடி தப்பித்திருக்கும் எப்படி என்கின்றீர்களா? கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு யாரவது கல் வீசுவார்களா ? என்ன புரிதா ? சுள்ளுன்னு அடிக்கிற வெயில்ல ஜில்லுன்னு.... மாதிரி .. யாரவது செய்யணும் இல்ல
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ் - சென்னை,இந்தியா
14-ஜூன்-201821:15:59 IST Report Abuse
அருண் பிரகாஷ் மக்கள் விரோத ஆட்சி நீடிக்க கூடாதுனு தினகரன் சொல்றார்,அப்போ 18 பேர் கூட்டு சேர்ந்து என்ன பிளான் போட்டேன் சொல்லாம சொல்றார் அப்போ அவுங்கள தகுதி நீக்கம் பண்ணது சரிதான் போல,அப்புறம் என்ன குழப்பம் நீதிபதிக்கு,மக்கள் விரோத ஆட்சினு சொல்றார் அப்டின்னா 18 பேர் இப்போ MLA இல்லை, தேர்தல் வர வச்சு சுயேட்சை இல்லைனா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பா ஜெயிக்க வச்சு ஆட்சியை கவுக்க வேண்டியதுதானே,எதுக்கு வழக்கு போட்டார்...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜூன்-201821:14:03 IST Report Abuse
Kuppuswamykesavan ////ஜெயந்தன் - Chennai,இந்தியா 14-ஜூன்-2018 20:15 சட்டம் ஒண்ணுதான்..ஆனால் தீர்ப்பு எப்படி இரண்டு விதமாக இருக்கிறது ........... சொல்லுங்கண்ணே...சொல்லுங்க..//// - அதாவதுங்க, பொதுவாக, மிக ரொம்ப எளிமையாக கூறனும்னா?, நடந்த ஒரு சம்பவம், சூழல், அது அஃபென்ஷிவ்வா? அல்லது அது டிஃபென்ஷிவ்வா?, என்று நீதிமன்றம் கணித்து, அதற்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவதால்தாங்க, இப்படி மாறுபட்ட தீர்ப்புக்களும் வருது எனலாம்தானேங்க?.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
14-ஜூன்-201820:21:49 IST Report Abuse
Kuppuswamykesavan " The Cauvery dispute started in the year 1892, between the Madras Presidency (under the British Raj) and the Princely state of Mysore when they had to come to terms with dividing the river water between the two states. ........ ". - அதாவதுங்க, காவிரி பிரச்சனை, 1892-ஆம் ஆண்டில் ஆரம்பித்து, பிறகு, அரசுகளாலும், நீதிமன்றங்களாலும் கையாளப்பட்டு வருதுங்க. ஆகவே, சில வழக்குகள், நீண்ட நெடிய வருடங்களுக்கு நடைபெற்று வருகிறது என்று புரியுதுங்களா?. அதே நேரத்தில், சமீபத்திய கர்நாடக முதலமைச்சராக இருந்த, எடியூரப்பா அவர்களின் வழக்கு, ஓவர் நைட்டில், தீர்ப்பு வழங்கப்பட்டதுங்க. எனவே, வழக்கின் சாரத்தை(எசன்ஸ்சை) மற்றும் கிரிட்டிகல் சுச்சுவேஷன்(மிக அவசர தேவையால்) வைத்துதாங்க, நீதிமன்றங்கள் சில வழக்குகளை, அவசரமாக நடத்துதோ?, என்னவோ.
Rate this:
Share this comment
Cancel
Sivasubramanian Chandramouli - Tiruppur,இந்தியா
14-ஜூன்-201819:29:29 IST Report Abuse
Sivasubramanian Chandramouli அரசியல் தீர்ப்பு லேட்டா வந்தா ஒரு மாறுதலும் இல்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஏழை எளிய மக்களுக்கு சம்பந்தமான தீர்ப்பு உடனடியா வந்தா நல்லது. சில நாட்களுக்கு முன் கார்திக் சிதம்பரம் தீர்ப்பு ஜாமின் இரவு 11 மணிக்கு கொடுத்தார்கள். அந்தாளு சிறையில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன . நீதிபதி நள்ளிரவில் எதுக்கு வேலை செய்ய வேண்டும் ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
14-ஜூன்-201819:27:51 IST Report Abuse
Pasupathi Subbian ஒரு வழக்கு, இரு நீதிபதிகள். இரு தீர்ப்புகள். மக்களின் நிலை ? இரண்டு நீதிபதிகள் ,இரண்டு முடிவுகள் எடுக்க முடியம் என்றால், சாதாரண மனிதன் எப்படி சரியான முடிவுகளை எடுக்கமுடியும், குற்றவாளியை தண்டிக்க இவர்களுக்கு இரண்டு தீர்ப்பு கிடைக்குமே.
Rate this:
Share this comment
Cancel
gk -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-201819:04:06 IST Report Abuse
gk Why do you ask opinion about court judgements to the politions. why cant ask to any legal experts.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை