மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், திண்டுக்கல், தேனி, கோவை, நெல்லை மாவட்டஙகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். கடல் அலைகள் 4.3 மீட்டர் வரை எழக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X