தவான் சாதனை சதம்; இந்திய அணி ரன் குவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தவான் சாதனை சதம்; இந்திய அணி ரன் குவிப்பு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தவான்,cricket,India,இந்தியா,கிரிக்கெட்,ஆப்கானிஸ்தான்

பெங்களூரு: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தவான், முரளி விஜய் சதம் விளாச, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்தது. முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் விளாசிய முதல் இந்திய வீரர் எனும் சாதனையை தவான் படைத்தார். சர்வதேச அளவில் 6வது வீரரானார்.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் துவக்க வீரர்களாக தவான், முரளி விஜய் களமிறங்கினர். விஜய் பொறுமை காக்க, தவான் அதிரடி ஆட்டம் ஆடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல்., நாயகர்கள் ரஷீத் கான், முர்ஜீப் உர் ரஹ்மான் இருவரையும் வெளுத்து வாங்கிய தவான் 87 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் உணவு இடைவேளைக்கு முன் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் எனும் பெருமை பெற்றார். தவான் 107 ரன்னில் அகமதுஷாய் வேகத்தில் வெளியேறினார். பின் ராகுலுடன் இணைந்த விஜய் தன் பங்குக்கு சதம் விளாசினார். 105 ரன் எடுத்த விஜய் வபாடர் வேகத்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் ஆட்டம் இழந்தார்.

ராகுல்(54), புஜாரா(35) சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். ரஹானே(10), தினேஷ் கார்த்திக்(4) வந்த வேகத்தில் வெளியேறினர். மழை காரணமாக 78 ஓவர்கள் மட்டுமே முதல் நாளில் வீசப்பட்டது. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன் குவித்தது. பாண்ட்யா(10), அஷ்வின்(7) களத்தில் உள்ளனர். ஆப்கன் தரப்பில் அகமதுஷாய் 2 விக்கெட், ரஷீத் கான், முர்ஜீப், வபாடர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை