ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம், பயணிகளுக்கு 'என்எம்ஆர்' சிறப்பு குறித்து விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம், பயணிகளுக்கு 'என்எம்ஆர்' சிறப்பு குறித்து விளக்கம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி: குன்னுார் ரயில் நிலையம் துவங்கப்பட்ட, 119வது ஆண்டு விழாவை ஒட்டி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலை ரயில் பாதை அமைக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் ஆற்றுப்படுகைகளில், பாலங்கள் அமைத்தும், மலைகளை குடைந்தும் ரயில் பாதை உருவானது. இதற்கு குன்னுார் ரயில் நிலையம் முக்கியப் பங்கு வகிக்கிறது.'லோகோ' பணிமனை வசதி குன்னுாரில் அமைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் - குன்னுார், ஊட்டி இடையே, ரயில் இயக்குவதற்கு டீசல் இன்ஜின்; பர்னஸ் ஆயில் இன்ஜின் பயன்படுகிறது.குன்னுார் ரயில் நிலையம், 1899ம் ஆண்டு, ஜூன், 14ம் தேதி தொடங்கப்பட்டு, 119 ஆண்டுகளான நிலையில், 'கிளீன் குன்னுார்' தன்னார்வ தொண்டு நிறுவனம், ரயில்வே ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் சார்பில், விழாவை கொண்டாடியது.அதன்படி, குன்னுார் ரயில் நிலையம் முதல், காட்டேரி மற்றும் வெலிங்டன் ரயில் நிலையம் வரை, ரயில் பாதையில் இருந்த குப்பைகள், காலி பாட்டில்கள், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டன.தொடர்ந்து, குன்னுார் ரயில் நிலையத்தின் கண்காணிப்பாளர் ரமேஷ், 'கேக்' வெட்டி, ரயில் பயணிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியதுடன், ரயில் நிலையத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை