நீலகிரியில் பூண்டு விளைச்சல் குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் பூண்டு விளைச்சல் குறைவு

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோத்தகிரி: கோத்தகிரி மார்க்கெட்டில் சமவெளி பகுதியில் இருந்து வெள்ளை பூண்டின் வரத்து அதிகரித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில், வீட்டு தோட்டங்களிலும், விவசாய நிலங்களிலும், கணிசமான பரப்பளவில் வெள்ளைப் பூண்டு பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். நீலகிரி பூண்டுக்கு சுவையும் மணமும் நிறைந்துள்ளதால், வெளி மார்க்கெட்டில் நல்ல 'கிராக்கி' உள்ளது.இதனால், ஆண்டுதோறும் இங்கு விளையும் பூண்டு, மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. ஒரு கிலோ பூண்டுக்கு, 150 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்துவந்த நிலையில், நடப்பாண்டு, விலை குறைந்துவிட்டது. மேலும், பருவம் தவறி பயிரிட்ட பூண்டு போதிய விளைச்சல் இல்லாமல் பொய்த்துவிட்டது.இதனால், கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளில் பூண்டு மகசூல் வெகுவாக குறைந்துவிட்டது. வீட்டு தோட்டங்களில் சிறிய விளை நிலங்களில் பயிரிட்ட பூண்டு, குரங்கு, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் சேதம் விளைவித்ததன் காரணமாக, விவசாயிகளுக்கு வருவாய் குறைந்துவிட்டது.இதனால், மேட்டுப்பாளையம் மற்றும் மைசூரு உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் இருந்து, நீலகிரி மாவட்டத்திற்கு பூண்டு கொள்முதல் செய்து, மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சமவெளி பகுதி பூண்டுக்கு, நீலகிரியில் விளையும் பூண்டுபோல, மணம், சுவை இல்லை என்பதால், மக்கள்,ஆர்வமாக வாங்கி செல்வதில்லை.இதனால், கோத்தகிரி உள்ளிட்ட மார்க்கெட்களில், ஒரு கிலோ பூண்டு, 40 முதல் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எதிர் காலத்தில் இதே நிலை நீடித்தால், நீலகிரி மாவட்டத்தில் பூண்டு உற்பத்தி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.எனவே, பூண்டு விவசாயத்தை மேம்படுத்தும் வகையில், ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை