வயநாடு பகுதியில் பெய்த மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வயநாடு பகுதியில் பெய்த மழை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் மழையால், முக்கிய கிராமங்கள் வெள்ளக்காடாக மாறியதுடன், சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதியில் வயநாடு அமைந்துள்ளது. வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால், கல்பெட்டா பகுதியில் முக்கிய பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.அதில், மணியங்கோடு, நிரப்பம்புயல், முண்டேரி, துர்க்கி, சுழலி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மேலும் கல்பெட்டா- முண்டேரி சாலையில் மழை வெள்ளம் புகுந்ததில், சாலையில் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து வெளியேற வழியில்லாத நிலையில், பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும், வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்ததால், வீடுகளின் உள்ளே இருந்த பொருட்கள் நாசமடைந்ததுடன், மக்கள் குடியிருக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. வயநாடு பகுதி தீயணைப்பு துறையினர், சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் முகாமிட்டு, நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை