தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுரை

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: 'தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,' என, சுகாதார துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்து வருகிறது. மழைநீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல இடங்களிலும் கழிவுநீரும் மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால், சூற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில், குடிநீருடன் கழிவுநீர் கலக்க வாய்ப்புள்ளது.'இந்த சூழ்நிலையில், அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,' என, சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளும் திறந்து விட்டன. அதனால், குழந்தைகள் தண்ணீரை குடிப்பதில் அதிக கவனம் தேவை. பெற்றோர், குழந்தைகளிடம் காய்ச்சிய நீரை, பாட்டிலில் நிரப்பி கொடுத்து அனுப்ப வேண்டும். குழாய்களில் நேரடியாக வரும் நீரை குடிக்க கூடாது. இதனை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் நீர் நிலைகளில், சரியான அளவில் குளோரின் கலந்து வினியோகிக்கப்படுவதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு சுத்தமான தண்ணீரை வினியோகம் செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை