மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவி

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Advertisement

ஊட்டி: குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட மேல்குந்தா கிராம சமுதாய கூடத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்ட பலருக்கு உதவித்தொகை, மாதந்தோறும், தலா, 1000 ரூபாய், பெறுவதற்கான ஆணை, 30 பயனாளிகளுக்கும்; 21 பயனாளிகளுக்கு ஜாதி சான்றிதழ்; 5 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு; 113 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா; வெள்ள சேத நிவாரண நிதியாக, 7 பயனாளிகளுக்கு, 6.30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.மேலும், மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ஒரு பயனாளிக்கு சலவை பெட்டி, டாக்டர் அம்பேத்கர் தேசிய பரிசு திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவிக்கு, 40 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.மேலும், கிண்ணக்கொரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கறவை மாடு கடனாக, 18 பயனாளிகளுக்கு, 7.20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. மொத்தம், 202 பயனாளிகளுக்கு, 14 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை