வைத்திரி அருகே மண்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைத்திரி அருகே மண்சரிவு: போக்குவரத்து நிறுத்தம்

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்: கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று காலை, பலத்தமழை பெய்தது. இதன் காரணமாக, சுல்தான் பத்தேரி - கோழிகோடு சாலையில், வைத்திரி அருகே, லெக்காடி என்ற இடத்தில், சாலையோரத்தில் பெரும் மண் சரிவு ஏற்பட்டது.அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வயநாடு மாவட்டத்திலிருந்து கோழிகோடு செல்லும் வாகனங்கள், குஞ்சாடி வழியாகவும்; கூடலுார், நாடுகாணி, நிலம்பூர் வழியாகவும் இயக்கப்பட்டன. கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுல்தான்பத்தேரி வழியாக இயக்கப்பட்ட வாகனங்கள், கூடலுார் வழியாக கோழிகோடுக்கு இயக்கப்பட்டன.'இச்சாலையை சீரமைக்கும் வரை, மாற்று சாலையில் வாகனங்கள் இயக்கப்படும்,' என, கேரளா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.டிரைவர்கள் கூறுகையில் 'ஏற்கனவே, கூடலுார் சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. இந்நிலையில், சுத்தான்பத்தேரி வழியாக கோழிகோடு இயக்கப்பட்ட வாகனங்கள், கூடலுார் வழியாக இயங்குவதால், மேலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகரில் வாகன போக்குவரத்தை சீரமைக்க, கூடுதல் போலீசார் பணியில் நிறுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X