18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏமாற்றம்; நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எம்.எல்.ஏ.க்கள்,தகுதி நீக்க வழக்கு,ஏமாற்றம்,நீதிபதிகள்,மாறுபட்ட தீர்ப்பு

சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், வெவ்வேறு தீர்ப்புகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று பிறப்பித்தது. இதனால், பட்டாசு, இனிப்புடன் கொண்டாட தயாராக இருந்தவர்கள், ஏமாற்றம் அடைந்தனர். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, 'தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட முடியாது' என, தீர்ப்பளித்தார். மற்றொரு நீதிபதி, சபாநாயகர் உத்தரவை ரத்து செய்தார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட, 18 பேர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரை சந்தித்து, கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், 18 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்து, 2017 செப்டம்பர், 18ல், சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.

இடைக்கால உத்தரவு :


இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18 பேரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். முதலில், இந்த வழக்கு, நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வந்தது. மறு உத்தரவு வரும் வரை, 18 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது என, நீதிபதி இடைக்கால உத்தரவிட்டார். பின், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், வழக்கு விசாரணைக்கு சென்றது.

நீதிபதி ரவிச்சந்திரபாபு, வழக்கின் சட்ட முக்கியத்துவம் கருதி, இரண்டு நீதிபதிகள் அடங்கிய, 'பெஞ்ச்' விசாரணைக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச், இந்த வழக்கை விசாரித்தது.

சபாநாயகர், சட்டசபை செயலர் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அரசு கொறடா சார்பில், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகினர். முதல்வர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆகியோரும், 18 பேர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் ஆகியோரும் ஆஜராகினர்.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை, 2018 ஜன., 23ல், முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது. வழக்கின் தீர்ப்பு, நேற்று வழங்கப்பட்டது. பிற்பகல், 1:1௦க்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர், நீதிமன்ற ஹாலுக்கு வந்தனர். பிற்பகல், 1:40 மணிக்கு, வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. முதலில், தலைமை நீதிபதி, தன் தீர்ப்பை வாசித்தார். பின், நீதிபதி, எம்.சுந்தர், தன் தீர்ப்பை வாசித்தார்.

தலைமை நீதிபதி உத்தரவில், 'சபாநாயகரின் முடிவு விபரீதமானதாக இல்லை என்றால், நீதிமன்றம் தலையிடாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 'தமிழக சபாநாயகரின் முடிவு, நியாயமற்றது எனக் கூற முடியாது; அதில், குறுக்கிடத் தேவையில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, கூறியுள்ளார்.

உள்நோக்கம் :


நீதிபதி சுந்தர் உத்தரவில், 'இயற்கை நீதி பின்பற்றப்படவில்லை. சபாநாயகரின் உத்தரவு, உள்நோக்கம் கொண்டது; எனவே, சபாநாயகரின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, கூறியுள்ளார். மொத்தம், 325 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில், தலைமை நீதிபதியின் உத்தரவு, 192 பக்கங்களிலும், நீதிபதி சுந்தரின் உத்தரவு, 133 பக்கங்களிலும் உள்ளன. இரு நீதிபதிகளும், வெவ்வேறான உத்தரவுகளை பிறப்பித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு, இவ்வழக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மூன்றாவது நீதிபதி யார் என்பதை, தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக உள்ள, நீதிபதி எச்.ஜி.ரமேஷ் முடிவு செய்வார். உயர் நீதிமன்றத்தில் உள்ள மூத்த நீதிபதிகளில் ஒருவர், மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்படுவார். இரு தரப்பிலும், மூத்த வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும். மூன்றாவது நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து, வழக்கின் முடிவு அமையும்.

உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன், 18 பேர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,

பி.எஸ்.ராமன், 'மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளிக்கும் வரை, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடர வேண்டும்' என்றார். இதை ஏற்று, இடைக்கால உத்தரவு தொடர்வதாக, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பில், தினகரன் வட்டாரம், பட்டாசு, இனிப்புடன் கொண்டாட தயாராக இருந்தது. தீர்வு கிடைக்காமல் போனதால், ஏமாற்றம் அடைந்தது.

அதேபோல், ஆட்சி கவிழும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த, எதிர்க்கட்சிகள் முகாமும் களையிழந்தது. ஆவலுடன் எதிர்பார்த்த, ஆளும் கட்சி வட்டாரமும், இறுதி முடிவு தெரியாததால், அதிருப்தி அடைந்தது. ஆனாலும், மீண்டும் விசாரணை என காலம் கடத்தப்படும் என்பதால், அதுவரை, பதவிக்கு பாதிப்பில்லை என, ஆறுதல் அடைந்தது.

இது முதல் முறையல்ல!

மாறுபட்ட தீர்ப்பை வழங்குவது, இது முதல் முறையல்ல. ஏற்கனவே, தனியார், 'டிவி' சேனல்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வகுத்த விதிகளை எதிர்த்து, இரண்டு, 'டிவி' நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த வழக்கை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய முதல் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை பிறப்பித்தனர். இதையடுத்து, மூன்றாவதாக, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரணைக்கு சென்றது. தலைமை நீதிபதியின் உத்தரவில் உடன்படுவதாக, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தீர்ப்பு அளித்தார். தற்போது, இரண்டாவதாக, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கிலும், மாறுபட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (99+ 185)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
15-ஜூன்-201821:22:41 IST Report Abuse

R.SANKARA RAMANநீதிபதி சுந்தர் தமது தீர்ப்பில் அவைத்தலைவரின் முடிவு சட்டப்படியே இருந்தாலும் (though legally correct) அதற்க்கு உள்நோக்கம் இருப்பதாகக் கருதுவதால் அது செல்லாது என்று கூறியுள்ளார். நீதிபதியின் கடமையே சட்டப்படி செல்லுமா என்பதே? அதற்குப் பின்புலம் என்ன என்று ஆராயக்கூடாது. ஆகையால் மூன்றாவது நீதிபதி, தலைமை நீதிபதியின் முடிவையே வழி மொழிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

Rate this:
RAJAN - bahrain,பஹ்ரைன்
15-ஜூன்-201819:54:15 IST Report Abuse

RAJANஉண்மையை ரொம்ப நாள் ஏமாத்த முடியாது.

Rate this:
Rajan - Coimbatore,இந்தியா
15-ஜூன்-201818:27:26 IST Report Abuse

Rajanநம்ம ஊருல தீர்ப்பு வர்ரதுக்குள்ள மந்திரிகளுக்கு வயசாகி ஆயுள் முடிந்துவிடும் ...

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
15-ஜூன்-201817:38:51 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranதிமுக உறுப்பினர்கள் சபையில் ரகளை செய்தனர் தண்டனை இல்லை. திமுக உறுப்பினர்கள் சபைக்கு தடை செய்யப்பட்ட குட்காவை சபாநாயகர் அனுமதியின்றி கொண்டு வந்தனர் .அதற்கு சபாநாயகர் நோட்டிஸ் அனுப்பியதற்கே தடை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று சபாநாயகர் உரிமையில தலையிட முடியாது என்று சொல்வதேன் ? தேர்ந்தெடுத்த அரசிற்கு எதிராக கட்சசிக்ட்டகொறடா உத்தரவை மீறி சட்ட மன்றத்தில் வாக்களித்த ஓபிஎஸ் அணி மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வில்லை எனினும் அவரகள் கட்சித் தாவல் சட்டப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்து விடுவார்கள் .சபாநாயகர் தான் அவர்களை நீக்க வேண்டும் என்றால் நாளை 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை முதலவராக அறிவித்து ஆட்சி அமைக்க முடியும் கட்சித்தாவல் தடை சட்டம் குப்பைத்தொட்டிக்கு போய்விடும்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201816:04:36 IST Report Abuse

இந்தியன் kumarஒரு உரையில் ஒரு கத்தி தான் இருக்க வேண்டும். ஒரு நீதிபதி ஒரு தீர்ப்பு தான் இருக்க வேணடும்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201815:59:52 IST Report Abuse

Kuppuswamykesavan//////கைப்புள்ள - nj,இந்தியா 15-ஜூன்-2018 00:10 தலைப்பு செய்திகள் தருவதற்கு தினமலரை அடிச்சுக்க ஆளே கிடையாது.////// - அட, ஆமாங்க, அதுல 100/100 மார்க் போடலாங்க, தினமலருக்கு.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201813:20:50 IST Report Abuse

Kuppuswamykesavanஅரசியல் என்று வந்துட்டாலே, சாம தான பேத தண்ட போன்ற குறுக்கு வழிகளை கையாண்டு சில விசயங்களை சாதிப்பது என்பது சிலருக்கு கை வந்த கலை எனலாங்க, அதில் கட்டுமரம் எக்ஸ்பர்ட்டாக இருந்தார் எனலாங்க.

Rate this:
sickularist sickular - sikim,பூடான்
15-ஜூன்-201814:56:09 IST Report Abuse

sickularist sickularஅதில் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்...

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201812:21:57 IST Report Abuse

Kuppuswamykesavanஐயா, இப்ப, இன்னொரு கேள்வி எழுகிறது, அது, பொதுமக்கள், ஒரு வேட்பாளரின் பெயருக்கு ஓட்டு போட்டார்களா?, அல்லது, ஒரு அரசியல் கட்சியின் சின்னமான, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டார்களா?. அப்படீன்னா, பொதுமக்கள், அந்த கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்துதானே?, ஓட்டு போட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள்?. அப்ப, ஒரு கட்சி மீது நம்பிக்கை வைத்து தேர்தெடுத்து அனுப்பிய, தொகுதி மக்களின் நம்பிக்கையை, தகர்க்கும் செயல்களில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், செயல்பட்டது சரியா?. இது கூட யோசிக்க வேண்டிய பாயிண்ட் தானுங்களே?.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201811:45:36 IST Report Abuse

Kuppuswamykesavan/////கைப்புள்ள - nj,இந்தியா 15-ஜூன்-2018 00:14 அவன் அவன் ஏற்கனவே, என்னடா இது இந்த ஆட்சியை என்ன பண்ணியும் கலைக்க முடியலையே, விட்டா முழுசா அஞ்சு வருடமும் ஆட்சி செய்து மக்கள் மனசில இடம் பிடிச்சுடுவானுக போல இருக்கேன்னு வயித்தில நெருப்பை கட்டிக்கிட்டு எரிஞ்சு எரிஞ்சு விழுறானுக. இதுல இந்த தினமலர் வேற தஸ் புஸ் ன்னு அவனுக கடுப்பை கிளப்பி விட்டுகிட்டு விளாடுது. அடேய் பசங்களா தஸ் புஸ் ன்னு எரிச்சலா புகையாதீங்கடா, தினமலர் எப்பவுமே இப்படித்தான், உண்மையை சொல்லும், அது உங்களுக்கு புடிக்காது. கழுவி கழுவி ஊத்துவீங்க.///// - உள்ளதை உள்ளபடி, உண்மையை, ஊரார்க்கு உரைத்திட்டீங்க, உங்க உழைப்பு, உன்னதம்ங்க, உயர்வுங்க, ஊக்கமளிப்பதுங்க.

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
15-ஜூன்-201811:35:15 IST Report Abuse

vbs manianதங்களுக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை என்பதற்காக நீதிபதி பனர்ஜீ பி ஜே பி மீது தரக்குறைவான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.

Rate this:
மேலும் 88 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement