வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி; சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் Dinamalar
பதிவு செய்த நாள் :
வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி
சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

பிலாய் : ''வளர்ச்சி மட்டுமே, வன்முறைக்கு சரியான பதிலாக இருக்க முடியும் என நம்புகிறேன். வளர்ச்சிப் பணிகளின் மூலம் உண்டாகும் நம்பிக்கையால், வன்முறை முடிவுக்கு வரும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,வளர்ச்சியே, வன்முறைக்கு,சரியான பதிலடி


சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த ரமண் சிங் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மத்திய - மாநில அரசுகளின், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல், அவர்கள் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் இதுபோன்ற செயல்பாடுகளால், மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பொது அமைதியும் சீர்குலைகிறது. எனவே, நக்சல்களை ஒடுக்கி, சரணடைய செய்து, அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில், மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அரசுடனான பேச்சுக்கு செவி சாய்க்காமல், தொடர்ந்து, நாச வேலைகளில் ஈடுபடும் நக்சல்களை ஒடுக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே, சத்தீஸ்கர் மாநிலத்தில், 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார்.

திட்டங்கள் :


நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மக்கள் மத்தியில் நம்பிக்கையை

வளர்க்கும் முயற்சியில் மத்திய - மாநில அரசுகள் செயலாற்றி வருகின்றன. நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்து வதன் மூலம், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், வன்முறைக்கு முடிவு கட்ட முடியும்.

இந்த மாநிலத்தில் கிடைக்கும் கனிம வளங்களில் இருந்து பெறும் வருவாய் மூலம், மாநில மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். மாநிலத்தில், மருத்துவமனைகள், பள்ளிகள், கழிப்பறைகள் மற்றும் சாலைகள் அமைக்க, கூடுதலாக, 3,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடி இனத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வருமானத்தை உயர்த்த, மத்திய, பா.ஜ., அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சாதாரண செருப்பு அணிந்தவர் கூட, விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே என் கனவு. அதற்காகவே, சிறு நகரங்களை இணைக்கும் வகையில், 'உடான்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கு முன், ராய்ப்பூர் விமான நிலையம், ஒரு நாளில், ஆறு விமானங்களை மட்டுமே கையாளும் திறன் படைத்ததாக இருந்தது. தற்போது, 50 விமானங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு முன், மத்தியில் ஆட்சி செய்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சத்தீஸ்கரை முழுவதும் புறக்கணித்தது.

இங்கு, ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என, முதல்வர் ரமண் சிங், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தார். ஆனால், காங்., தலைமையிலான அரசு, அதை புறக்கணித்தது.

வாஜ்பாயின் கனவு :


மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்ததும், பிலாயில், ஐ.ஐ.டி., அமைக்கப்பட்டது. காடுகள்,

Advertisement

பழங்குடியினத்தவர் என்பது மட்டுமே, சத்தீஸ்கரின் அடையாளமாக இருந்த நிலையில், நாட்டின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி அமைந்துள்ள மாநிலம் என்ற பெருமை பெற்றுள்ளது. நயா ராய்ப்பூரால் இந்த பெருமை கிடைத்துள்ளது.

மாநில முதல்வர் ரமண் சிங், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றியுள்ளார். சத்தீஸ்கர், ம.பி., மாநிலத்தின் ஒரு அங்கமாக இருந்தபோது, இந்த இடத்திற்கு, நான், இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளேன்.

அடையாளம் :


அப்போதெல்லாம், இவ்வளவு வளர்ச்சி அடையாத இந்த பகுதி, தற்போது, மாநிலத்தின் அடையாளமாக காட்சிஅளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின், கட்ச் முதல் கோல்கட்டா வரை மற்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான, நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்க, ரயில்வே தண்ட வாளங்களுக்கு தேவையான இரும்பு, பிலாய் இரும்பு தொழிற்சாலையில் இருந்து எடுக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.

மாநிலத்தில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த, பிரதமர் மோடிக்கு, மாநில முதல்வர் ரமண் சிங் நன்றி தெரிவித்தார். அதை தொடர்ந்து, அரசின் சாதனைகளை விளக்கும் பேரணி துவக்கி வைக்கப்பட்டது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
15-ஜூன்-201813:01:00 IST Report Abuse

ganapati sbஇளைஞர்கள் முன்னேற்றத்திற்கு எல்லா காலத்திற்கும் உதவும் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய கருத்துக்கள்

Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
15-ஜூன்-201810:22:18 IST Report Abuse

Visu Iyerபுரியவில்லை வளர்ச்சி என்றால்... ?

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
15-ஜூன்-201810:06:11 IST Report Abuse

நக்கீரன்வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி என்பது சரியானதுதான். வளர்ச்சி என்பது மக்களுக்காக இருக்க வேண்டும். ஆனால், மக்களே இல்லாமல் வளர்ச்சி வந்து என்ன செய்வது? வெளிநாட்டுக்காரன் தனக்கு தேவைப்படாத, தங்களுடைய மக்களுக்கும், சுற்று சூழ்நிலைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வந்து நம்மிடம் திணிக்கிறான். அதை நாம் வளர்ச்சி என்ற பெயரில் அனுமதித்து நம் நாட்டை சுடுகாடாக்கிக்கொண்டு இருக்கிறோம். வெறும் கட்டிடங்களும், இயந்திரங்களும், ராக்கெட்டுகளும் மட்டும் வளர்ச்சியல்ல. மக்கள் அனைவருக்கும் சுத்தமான காற்று, தூய குடிநீர், சுகாதாரமான மருத்துவம், அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆகியவற்றை தர முடிந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி. மோடிஜி புரிந்து கொள்வார் என்று நம்புவோம்.

Rate this:
Siddharadiyan sivasubramaniyam - virudhunagar,இந்தியா
15-ஜூன்-201811:44:27 IST Report Abuse

Siddharadiyan sivasubramaniyamசரியாக சொன்னீர்கள் .இலவச கல்வியும், மருத்துவமும் கொடுத்தார்களேயானால் இந்தியாவில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் .இதை எவன் தருகிறேன் என்று சொல்கிறானோ அவனுக்கு ஓட்டு போடுங்கள் மக்களே....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஜூன்-201809:54:02 IST Report Abuse

balakrishnanநீதிபோதனை, வழக்கமான ஒன்று தான், அது எதிர்பார்த்தது தான், திடீர் வாஜ்பாய் பாசம், எதிர்பார்க்காத ஒன்று, ஐ.ஐ.டி அமைத்ததற்கு பெருமைப்படும் பிரதமர், ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைத்து கொடுக்க ஏன் இவ்வளவு தடுமாற்றம், விமான பயணம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது ஓரிரு விமானங்கள் தான் இருந்தன இன்றைக்கு இத்தனை விமானங்கள் வானில் வட்டமிடுகின்றன எல்லாமே என்னுடைய சாதனைகள் தான், வியப்பாக இருக்கிறது,

Rate this:
James - Mumbai,இந்தியா
15-ஜூன்-201814:25:16 IST Report Abuse

JamesBalakrishnan - Coimbatore,இந்தியா, உனக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்க, அடிக்கடி திமுக வின் அடிவருடி என்பதை அடிக்கடி நிருபிக்கிராய். தமிழக அரசுதான் இடம் தரவேண்டும், அப்படி தந்தாலும் உங்களை போல் உள்ள வெட்டி கூட்டங்கள் அதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள். வஜ்பாயை சொன்னால் உனக்கு ஏன்யா அரிக்குது. உன்னைப்போல் வெலங்காத ஆட்களால்தான் நாடு இன்னும் உருப்படாம இருக்கு....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201809:05:14 IST Report Abuse

Srinivasan Kannaiyaநம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம், வன்முறைக்கு முடிவு கட்ட முடியும்...எங்கேப்பா... வளர்ச்சி இருக்குது... எங்களுக்கு உங்களது அயல்நாட்டு பயணங்களும்,. ஆதாரும்..... வாய்மொழியாக சொல்லும் வாய்க்கு வாராத திட்டங்களும்தான் வளர்ச்சியாக தெரிகிறது...

Rate this:
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
15-ஜூன்-201808:38:19 IST Report Abuse

Srikanth Tamizanda..தேச விரோத தீய சக்திகளை பிரதமர் குறை கூறினால் சிலருக்கு ஏனோ கோவம் வருகிறது...

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஜூன்-201809:54:37 IST Report Abuse

balakrishnanஅவரோட கட்சிக்காரங்களை பற்றி அவர் பேசுகிறார், இதில் யாருக்கும் கோபம் இல்லை...

Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
15-ஜூன்-201808:05:35 IST Report Abuse

கருப்பட்டி சுப்பையா//வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி//....இது நல்லா தெரிஞ்சுதான் பாவாடை கோஷ்டிகள் எந்த வளர்ச்சி திட்டம்(கூடங்குளம், 8 வழி சாலை, ONGC , piped gasline , நியூட்ரினோ ) வந்தாலும் போராட்டம் பண்ணி எதிர்க்கிறார்கள்.... எங்க ஊர் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவிய ஸ்டெர்லிட் மூடவைத்துவிட்டார்கள்.... வளர்ச்சி வந்தால் மக்கள் நிம்மதியா சாப்பிடுவர்.... மதம்மாற்றும் கோஷ்டிகளுக்கு ஆள் கிடைக்காது.....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஜூன்-201809:56:20 IST Report Abuse

balakrishnanரொம்ப பழசு,, புதுசா ஏதாவது கண்டுபுடியுங்க...

Rate this:
James - Mumbai,இந்தியா
15-ஜூன்-201814:28:42 IST Report Abuse

JamesBalakrishnan - Coimbatore,இந்தியா, ஆமாம் ரொம்ப பழசுதான், அதான் ரொம்ப அடிவாங்கிருக்கு உங்க சோம்பு...

Rate this:
15-ஜூன்-201807:12:19 IST Report Abuse

ஆப்புவளர்ச்சியெல்லாம் வேண்டாம். நீரவுக்குக் குடுத்த மாதிரி ஆளுக்கு 100, 200 கோடி வங்கிலேருந்து கடன் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க. மிச்சத்தை நாங்க பாத்துக்கறோம்.

Rate this:
Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா
15-ஜூன்-201804:51:18 IST Report Abuse

Madurai K.சிவகுமார்யாருடைய வளர்ச்சி?

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-201804:38:41 IST Report Abuse

J.V. Iyerஇந்த மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மத்திய - மாநில அரசுகளின், மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த விடாமல், அவர்கள் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழ் நாட்டிற்கும் பொருந்தும். அங்கு நக்சல்கள் என்றால் தமிழ்நாட்டில் யார் என்று மக்களுக்கு தெரியும். மக்கள் நன்றாக வாழ்ந்தால் இந்த தீய, தேசத்துரோக சக்திகளை மக்கள் புறக்கணிப்பார்கள்? அவர்கள் ஏழையாக இருக்கும் வரையில், பணமும், குவாட்டரும், பிரியாணியும் கொடுத்து வோட்டு வாங்கி பதவிக்கு வரலாம். அவர்கள் சொந்தமாக சிந்திப்பவர்களாக, வசதியாக இருந்தால், இவர்கள் பாடு "கோவிந்தா"தான். எனவே இவர்களும் நக்சல்கள் போன்று தமிழகத்தில் செயல் படுகின்றனர்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement