ராகுல் தலைமையை ஏற்க எதிர்க்கட்சி தலைவர்கள் கைவிரிப்பு! 'இப்தார்' விருந்தை புறக்கணித்ததால் காங்., அதிர்ச்சி Dinamalar
பதிவு செய்த நாள் :
கைவிரிப்பு!
ராகுல் தலைமையை ஏற்க எதிர்க்கட்சி தலைவர்கள்...
'இப்தார்' விருந்தை புறக்கணித்ததால் காங்., அதிர்ச்சி

அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் தலைமையை ஏற்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் தயக்கம் தெரிவித்துள்ளனர். டில்லியில், ராகுல் நடத்திய, 'இப்தார்' விருந்தை, பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் புறக்கணித்ததன் மூலம், இது உறுதியாகியுள்ளது.

Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி,எதிர்க்கட்சி,தலைவர்கள்,கைவிரிப்பு


ரம்ஜானையொட்டி, 'இப்தார்' நோன்பு விருந்து நிகழ்ச்சியை, காங்கிரஸ் மேலிடம், டில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை, எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டும் வாய்ப்பாகவும் பயன்படுத்த, காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனை வருமே, வராமல் புறக்கணித்தனர். தங்களுக்கு பதிலாக, தங்கள் கட்சிகளின் பிரதிநிதிகளாக, இரண்டாம் கட்டத் தலைவர் களை அனுப்பி வைத்தனர்.

இது, காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் அதிர்ச்சி யையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 'ராகுல் தலைமையின் கீழ், ஒருங்கிணைய மாட்டோம்' என்ற செய்தியை, எதிர்க்கட்சிகள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.

ஒவ்வொரு தலைவருடனும், காங்கிரஸ் மேலிடம் சார்பில் பேசி, அதன்பின், விருந்தினர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆனால், திரிணமுல் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் என, எதிர்பார்க்கப்பட்ட எவருமே வரவில்லை.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மட்டுமே, அருகருகே அமர்ந்து பேசினர்.

மற்றொரு முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் வந்திருந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, திரிணமுல் எம்.பி., தினேஷ் திரிவேதி போன்றவர்கள் மட்டுமே, தெரிந்த முகங்களாக தென்பட்டனர்.

கடந்த, 2015ல், சோனியா அளித்த இப்தார் விருந்தில், பீஹார் முதல்வர் நிதிஷ் பங்கேற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதைய நிகழ்ச்சியிலோ, ராகுல் உற்சாகத்துடன் இருந்தார், கட்சி நிர்வாகி அளித்த குல்லாவை தலையில் அணிந்தபடி, சில நிமிடங்கள் காட்சிஅளித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர், சரத்யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலரோ, அமைதியாக, ஒரு மேஜையில் அமர்ந்து, பேசியபடி இருக்க, ராகுல், அனைத்து மேஜைகளுக்கும் வலம் வந்தார். உடற்பயிற்சி வீடியோவை, பிரதமர் மோடி வெளியிட்டதை பற்றி, பல தலைவர்களும் பேசினர்.

அது குறித்து, சீதாராம் யெச்சூரியிடம் பேசிய ராகுல், 'நீங்களும் நல்ல உடற்கட்டுடன் இருப்பதால், உங்களின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுங்கள்' என கூற, அந்த இடமே கலகலப்பாக மாறியது. சிகிச்சைக்காக சோனியா வெளிநாடு சென்றுவிட்டதால், அவர் இல்லாத நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாமென, பெரும்பாலான தலைவர்கள் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.

குமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சி போல, மீண்டும் ஒருமுறை பலத்தை காட்டலாம் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்தது. ஆனால், 'எங்கள் அனைவருக்கும் தலைமை தாங்கும் வாய்ப்பை, ராகுலுக்கு தர தயாராக இல்லை' என, முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மறைமுகமாக தெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அடுத்த லோக்சபா தேர்தலில், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வைக்க நினைத்த, காங்கிரசின் திட்டம், தோல்வி அடைந்துள்ளது.

Advertisement


தலைவர்களுக்கு அவமரியாதை :

காங்., தலைவர் ராகுல், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, 'பா.ஜ., மூத்த தலைவர்களான அத்வானி, வாஜ்பாய், ஜஸ்வந்த் சிங் போன்றவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பிரதமர் நரேந்திர மோடி அவமானப்படுத்துகிறார்; இது தான் இந்திய பாரம்பரியத்தை அவர் காக்கும் முறையா' என, கேள்வி எழுப்பினார். ராகுலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்.,கைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், கட்சி மேலிடத்தால், எப்படியெல்லாம் அவமானப்படுத்தப் பட்டனர் என, பட்டியலிட்டுள்ளனர். இது தொடர்பாக, பா.ஜ., தரப்பில், கூறப்பட்டதாவது: காங்., 1996 தேர்தலில் தோல்வி அடைந்தபோது, நரசிம்ம ராவ், காங்., மேலிடத்தால் அவமதிக்கப்பட்டார். அவர் இறந்ததும், அவரது உடல், காங்., தலைமையகத்துக்குள் அனுமதிக்கப்படாமல், அரை மணி நேரம், சாலையோர நடைபாதையில் வைக்கப்பட்ட அவலம் நடந்தது. சோனியாவை காங்., தலைவராக்க வேண்டும் என்பதற்காக, தலைவர் பொறுப்பில் இருந்த சீதாராம் கேசரி, அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்த அதிர்ச்சியிலேயே அவர் காலமானார். சோனியாவை வெளிநாட்டவர் என விமர்சித்ததற்காக, மூத்த தலைவர்களான, பி.ஏ.சங்மா, சரத் பவார், தாரிக் அன்வர் போன்ற மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு பா.ஜ., தரப்பில் கூறப்பட்டது.- நமது டில்லி நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Palanivelu - Toronto,கனடா
16-ஜூன்-201800:04:11 IST Report Abuse

K.Palaniveluவரவர புனித ரமலான் நோன்பையொட்டி நடத்தப்படும் 'இப்தார்' விருந்துகள் பல கட்சியினர் ஒன்றுகூடி தங்கள் பலத்தைக்காட்டவும்,ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டவும்,மட்டுமே நடத்தப்படுகின்றன. நோன்பின் சிறப்பை யாரும் பேசுவதாக தெரியவில்லை.

Rate this:
Raman - kottambatti,இந்தியா
15-ஜூன்-201818:55:16 IST Report Abuse

Ramanகாங்கிரஸுக்கு அதிர்ச்சியோ இல்லையோ பிஜேபிக்கு ரொம்ப அதிர்ச்சி.... என்ன தின்னாது பித்தம் தெளியும் என்ற நிலையில் வாழுகிறார்கள்.. எதிர் கட்சி என்ன செய்யுதுன்னு மோப்பம் பிடிக்கிது .. நீ ஒழுங்கா ஆட்சி பண்ணியிருந்தா எதுக்கு இந்த பொழப்பு..

Rate this:
sridhar - Chennai,இந்தியா
15-ஜூன்-201821:14:44 IST Report Abuse

sridharநல்லவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு இந்த ஆட்சி பிடிக்குது. உங்களுக்கு?....

Rate this:
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
15-ஜூன்-201817:44:05 IST Report Abuse

Devanatha Jagannathanராகுல் பிரதமராகும் திட்டம் பகல் கனவு தான்.

Rate this:
sudharshana - chennai,இந்தியா
15-ஜூன்-201817:37:25 IST Report Abuse

sudharshanaராகுல் இளைஞர் தோற்றத்தில் இருப்பதால் வயதான தலை நரைத்த பழம் தின்னு கொட்டை போட்ட தலைவர்களுக்கு கௌரவ பிரச்னையாக உள்ளது ராகுல் தலைமையில் லஞ்சம் கிஞ்சம் னு இறங்கின சீட்டை கிழிச்சுடுவார் ங்கற பயம் வேற....

Rate this:
sridhar - Chennai,இந்தியா
15-ஜூன்-201821:11:51 IST Report Abuse

sridharஅப்படியா, சொல்லவே இல்ல, Rahul மேலே ஊழல் வழக்கு இருப்பது தெரியுமா, தெரியாதா....

Rate this:
karupanasamy - chennai,இந்தியா
15-ஜூன்-201817:19:31 IST Report Abuse

karupanasamyகடவுள் மறுப்பு பகுத்தறிவு கொள்கை பரப்பும் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிக்கொள்ளும்( திருப்பதி சாமியை அவமதித்த) கனிமொழி கடவுள் நம்பிக்கை கொண்ட இப்தார் நோன்பில் பங்கு பெறுவதை கேள்விகேட்ட்கும் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல்தவிக்கும் கனிமொழி

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-ஜூன்-201817:15:45 IST Report Abuse

Lion Drsekar30 நாட்கள் புனித நோன்பு இருந்து அவர்கள் ரமலான் நோன்பு கொண்டாடுவததை கட்சிகள் இப்படி தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்துவது இறைவனால் மன்னிக்க முடியாத ஒரு குற்றமாகும்,

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201816:49:56 IST Report Abuse

Nallavan Nallavanதத்தி வாரிசுகளைத் திணிக்காதீர்கள் .... கட்சி அழிந்துவிடும் .....

Rate this:
anbu - London,யுனைடெட் கிங்டம்
15-ஜூன்-201815:58:13 IST Report Abuse

anbuராகுலுக்கு என்ன குறைச்சல் இவர்களுக்குள் ஏன் குடைச்சல் ஊழல் கூட்டணி அமைக்க ஏன் தயக்கம். நாடே இதை எதிர்பார்க்கிறது.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
15-ஜூன்-201817:16:12 IST Report Abuse

dandyஇவனின் இரத்தம் பாதி இத்தாலி ..பாதி ஈரான் .....ஆபிரிக்க நாடுகளில் கூட இந்த கேவலம் நடக்காது...

Rate this:
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
15-ஜூன்-201815:54:59 IST Report Abuse

K. V. Ramani Rockfortஅடுத்த லோக்சபா தேர்தலில், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வைக்க நினைத்த, காங்கிரசின் திட்டம், தோல்வி அடைந்துள்ளது.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
15-ஜூன்-201815:23:06 IST Report Abuse

ganapati sbஅனைத்து எதிர் கட்சியும் இணைந்து கூட்டணியோடு போட்டியிட்டால் 30 தொகுதிகளுக்கு மேலாக வெல்லும் வாய்ப்புள்ள மம்தா மாயாவதி முலாயம் லாலு பவார் ஸ்டாலின் பழனிசாமி தேவகவுடா யெச்சூரி ஆகியவர்களை விட அதிகம் சீட்டுக்கள் 150 க்கு மேல் கான் க்ராஸ் வென்றால்தான் தலைமை ராகுல் ஏற்க முடியும்

Rate this:
vadivelu - chennai,இந்தியா
15-ஜூன்-201818:42:54 IST Report Abuse

vadivelu150 கிடைத்தாலும், மற்ற கட்சிகளின் ஆதரவு 127 தேவை. காங்கிரஸ் மாநில கட்சிகளில் ஒன்றின் தலைவருக்கு பிரதமர் பதவியை விட்டு கொடுத்து, பா ஜா கா ஆட்சிக்கு வராமல் இருக்கும் மன magizhchi mattume adaiyum....

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement