கூடலூரில் நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடலூரில் நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவு பணி

Added : ஜூன் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கூடலுார்: கூடலுாரில், தொடரும் பருவமழையால் வேளாண் பல்கலைக்கழக வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.கூடலுார், பந்தலுார், தேவாலா, ஓவேலி, நடுவட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில், கடந்த, 8ம் தேதி முதல் பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. நீர் நிலைகளில் நீர் வரத்து வெகுவாக உயர்ந்துள்ளது. பலத்த மழையின் போது, பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதுடன், வீடுகள், விவசாய தோட்டங்களில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், வயல்களில் தண்ணீர் உயர்ந்து வருவதால், நெல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புளியாம்பாறை வேளாண்மை பல்கலைக் கழக வீரிய ஒட்டுநெல் ஆராய்ச்சி மையத்தில் டிராக்டர் மூலம், உழவு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரத்தில் விவசாயிகளும், தங்களின் வயல்களில், நெல் நடவுக்கான உழவு பணிகளை துவங்க உள்ளனர்.நெல் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் இணை பேராசிரியர் குமரேசன் கூறியதாவது:மண் வளத்தை பாதுகாக்க, நெல் அறுவடைக்கு பின், கோடையில், 'சணப்பை' என்கிற பசுந்தாவர செடிகளை பயிரிட்டுள்ளோம். நடப்பாண்டில், பருவமழை முன்னதாக துவங்கியுள்ளதால், நெல் நடவுக்கான உழவு பணிகளை துவங்கியுள்ளோம். சணப்பை செடிகளுடன் உழவு பணிகள் மேற்கொள்வதால், அவை மண்ணில் கலந்து மண் வளம் பாதுகாக்கப்படும். இது தொடர்பான, ஆலோசனைகளை பெற எங்களை அணுகலாம். விவசாயிகள் பயன்பெறும் வகையில், தற்போது, எங்கள் மையத்தில், பாரதி, கோ-50 ஆகிய நெல் விதைகள், கிலோ, 24 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம். விவசாயிகள் இதனை பெற்று பயனடையலாம். இவ்வாறு குமரேசன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X